ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2022

எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

செடி கொடிகளுக்கு அதனுடைய வித்துக்களை நிலத்தில் ஊன்றிய பின் அது முளைத்து வருகின்றது. பின் வளர்ச்சியாகி... மீண்டும் தன் இனத்தின் வித்துக்களை உருவாக்குகிறது.

அந்த வித்துக்களைப் பரவச் செய்தால்... மீண்டும் அதனின் வித்துக்கள் நிலத்தில் பட்டால் அதே தாய்ச் செடியின் சத்தை நுகர்கின்றது... இப்படித்தான் வளர்ந்து கொண்டே வருகிறது.
1.செடி கொடிகளுக்குண்டான வித்துக்கள் போன்றது தான்
2.நம் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனும்.

கண்களால் ஒன்றை (அல்லது மற்ற மனிதர்களை) உற்றுப் பார்க்கப்படும் போது “கருவிழி ருக்மணியால்” அது பதிவாக்கப்படுகிறது.

யார் யாரை எல்லாம் பார்த்தோமோ அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பதிவாக்கி அந்தந்த உணர்வுகளை நுகரப்படும் போது உயிரிலே மோதுகின்றது.

உயிரிலே மோதும் போது உயிர் அதனின் உணர்ச்சிகளாக நம்மை இயக்கி நம்மை அறியச் செய்கிறது... அதனின் செயலாகவே நம்மை அது மாற்றுகிறது.

எந்தெந்தக் குணங்களை எடுத்தோமோ அது எல்லாம் நம் எலும்புக்குள் ஊனாக மாறுகின்றது.

உதாரணமாக...
1.வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை அதிகமாகப் பதிவாக்கியிருந்தால் அது வேதனைப்படும் ஊனாகிறது.
2.எலும்புக்குள் வேதனைப்படும் அணுக்களாகப் பெருகி நம்மை வேதனைப்படும் செயலுக்கே கொண்டு செல்கிறது.
3.நாளடைவில் அதுவே நோயாக மாறத் தொடங்குகிறது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா.

வேதனைப்படும் உணர்வைப் பதிவாக்கினால் அது ஊனாகி நம்மை வேதனைப்படும்படி செய்து நோயாக மாற்றுவது போல்
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம் எண்ணங்களைக் கண்ணுடன் இணைத்து
2.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து... உயிருடன் இணைத்து... ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தி
4.அறியாது வந்த வேதனைகளையும் தீமைகளையும் நீக்கிடும் சக்திகளைப் பெறச் செய்வதுவது தான்
5.நம் குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானத்தின் நோக்கம்.

அதன் வழியில் உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்தின் பால் சென்று அதனின்று வெளி வரும் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதன் பேரருளை நீங்கள் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற்று உங்கள் உடலிலே பரப்பச் செய்து கொண்டே இருந்தால் உங்கள் உடலில் இருக்கக்கூடிய தீய அணுக்களை மாற்றி உயிரைப் போல உணர்வின் தன்மை என்றுமே ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

மனிதனான பின் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனானோ இதைப் போன்று நமது வாழ்நாளில் நாமும் ஒளியின் சரீரம் பெற முடியும். மனிதனின் கடைசி நிலை பிறவியில்லா நிலை நிலை தான்

உயிரைப் போன்றே உணர்வுகளை ஒன்றாக்கி என்றும் ஒளியின் உடலாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தில் வரும் விஷத்தை ஒளியாக மாற்ற வேண்டும்.

பாம்பினம் தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவுக்காக முழுமையாக விழுங்கினாலும்
1.அந்தந்த உடல்களில் உள்ள விஷத்தினைத் தனக்குள் வடிகட்டி
2.பல விதமான வர்ணங்கள் கொண்ட விஷத்தன்மைகளைத் பாம்பினம் தனக்குள் சேர்த்து நாகரத்தினமாக உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையிலே ஏற்கனவே சொன்னது போன்று வேதனை வெறுப்பு கோபம் பயம் ஆத்திரம் என்ற பல விதமான விஷத்தன்மைகளை நாம் நுகர்ந்தாலும்...
1.பல விதமான விஷத்தின் தன்மை ஒடுக்கி ஒளியின் உணர்வாகப் பெற்ற
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
3.விஷத்தின் தன்மை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்றுகின்றோம்.
4.எத்தகைய விஷத்தன்மைகள் வந்தாலும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று
5.இந்த உடலை விட்டுச் செல்லும் நிலை தான் கடைசி நிலை.

ஆகவே... பிறிதொன்றின் ஈர்ப்பிற்குள் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி உயிருடன் ஒன்றி ஒளியாகின்றோம்.

“இது எல்லாம் ஒவ்வொரு உயிரின் கடமைகள்...”

காரணம்... “இந்த உயிர் தான்...” தன்னைக் காக்கத் தன் உணர்வின் தன்மையைச் செயல்படுத்துகின்றது என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.

மனிதனாக ஆன நிலையில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் சக்தியாக அங்கங்களும் அதற்குத்தக்க உறுப்புகளையும் உருவாக்கியது இந்த உயிரே.

ஆகவே... தீமையிலிருந்து விடுபடச் செய்யும் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை நமக்குள் சேர்த்தோம் என்றால் மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து விடுபட்டு உயிரைப் போன்று உணர்வின் தன்மை ஒன்றி வாழும் திறன் பெற்று... “பிறவி இல்லை” என்ற நிலை அடையலாம்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.