மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.
இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்... பின்னும்... மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.
அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் “ஆத்ம பதிப்பு” உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.
புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்...!
உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்...!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.
பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.
அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.
1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது
என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை...”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.
எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.
விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில் சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை “நான்” என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.
விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உணமைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனித தத்துவத்திலும் மெய் ஞானத் தத்துவத்தால் மாற்ற முடியும்.
1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.
(அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே)
ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது...?
உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள்.
எப்படி...?
1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் - பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.
மனிதனின் முதிர்வு நிலை அதுவே...!