நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் இது நடந்த நிகழ்ச்சி. ஒரு ஊரில் இரண்டு பேரில் ஒருவருக்கொருவர் பகைமையில் அடுத்தவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகின்றார்கள்.
எதிரி என்ற நிலையில் இருக்கப்படும் பொழுது இறந்தவருக்கோ தன்னிடம் வேலை செய்யும் ஒரு சாதாரண கூலி ஆளிடம் பேசிப் பழக்கம் இருந்திருக்கின்றது. இறந்த பின் அவருடைய ஆவி அந்த கூலி ஆளின் உடலுக்குள் சென்று விட்டது
அந்த உடலுக்குள் சென்ற பின் “ஐய்யய்யோ... என்னை வெட்டிப் போட்டு விட்டார்களே... வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார்களே...! என்று சொல்லத் தொடங்குகின்றார்.
ஆனால் இப்படிப் பேச ஆரம்பித்ததும் “இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது...” என்று ஊர்க்காரர்கள் எல்லாம் சொல்கின்றார்கள். அந்த ஆளை என்னிடம் அழைத்து வருகின்றார்கள்.
என்னை வெட்டி விட்டார்கள்... வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார்கள்... என் துணி எல்லாம் இங்கே இருக்கின்றது... அரிவாள் எல்லாம் இங்கே இருக்கின்றது... புதைத்தவர்கள் இன்னார்...! என்று அந்தப் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றது இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று சொல்கின்றது.
அந்த நேரத்திலே போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்த்தாற் போல் தான் நான் சைக்கிள் தொழில் செய்து கொண்டிருக்கிறேன் அங்கே இருக்கக்கூடிய சப் இன்ஸ்பெக்டர் இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
காரணம் அவருக்கு ஏற்கனவே இங்கே என்னிடம் பழக்கம் இருந்தது.
அவருடைய கொழுந்தியாளுக்கு ஒரு சிக்கல் இருந்தது. அவர்கள் கேரளாவில் இருப்பவர்கள். அந்தப் பெண்ணிற்கு அங்கே செய்வினை செய்து விட்டார்கள்.
சேலை கட்டினால் சேலை கிழிந்து விடும் வெளியிலே வர முடியாது இரவில் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்து விடும்.
ஆரம்பத்தில் இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு அந்தச் சப் இன்ஸ்பெக்டர் என்னை அது விஷயமாகச் சந்தித்தார். என்னை அவர்கள் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
இந்தப் பெண்ணுக்கு இப்படி இருக்கின்றது... என்ன செய்ய வேண்டும்...? என்று கேட்டார்.
மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்து இருக்கின்றார்கள். சுருட்டையும் மதுவையும் வைத்திருப்பார்கள். ஒரு ரூமில் கொண்டு போய் அந்தப் பதார்த்தங்களை வையுங்கள் என்று சொல்லி வைக்கச் சொன்னேன்.
சொன்ன மாதிரி வைத்தவுடன் அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்று இந்தப் பெண்ணை எதுவும் செய்யவில்லை. சேலை எல்லாம் அப்படியே இருக்கின்றது... முகத்தில் காயமும் இல்லை.
சுயநினைவு வந்த பின் இங்கே என்னிடம் அழைத்து வந்தார்கள். அந்த அம்மாவிடம் சில விவரங்களைச் சொல்லி இந்த மாதிரிச் செய் உனக்கு நன்றாகி விடும்... பாதுகாப்பாக இருக்கும்...! என்று சொன்னேன் செய்தது
அதன் பிறகு அது நன்றாக ஆனது. செய்வினை எதுவும் பாதிக்கவில்லை. அதற்குப் பின் சப் இன்ஸ்பெக்டர் இங்கே வந்தார் என்றால் உள்ளே சிறிது நேரம் உட்கார்ந்து நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.
அப்படி அவர் இருக்கும் நேரத்தில் இந்த ஆள் வந்து இப்படிப் புலம்ப ஆரம்பிக்கின்றான்.
என்னை வெட்டி விட்டார்கள்... புதைத்து விட்டார்கள்...! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
அவர் உடனே என்ன...! ஏது...? என்று கவனித்துக் கொண்டே சென்று அது நிஜமா... பொய்யா...? என்று அது எத்தனாவது வாழை மரம்...? என்று விசாரித்து அங்கே சென்று தோண்டிப் பார்க்கின்றார்கள்.
பார்த்தால் அங்கே எல்லாமே இருக்கின்றது.
துணி எங்கே இருக்கிறது என்று சொன்னது...? கொன்ற ஆயுதங்கள் எங்கே இருக்கிறது...? என்று சொன்னது. எல்லாம் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
எடுத்த பின் மற்றவர்கள் தலைமறைவாகப் போய்விட்டார்கள்...
1.கடைசியில் என்னைக் (ஞானகுரு) கொலை செய்ய வந்து விட்டார்கள்
2.இந்த ஆள்தான் எல்லாம் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது...! என்று என்னைத் தேடி வருகின்றனர்.
பின் அவர்களை அரெஸ்ட் செய்து விட்டார்கள். மரண தண்டனை கிடைத்தது.
இருந்தாலும்...
1.சந்தர்ப்பத்திலே இதைச் சொல்லப்படும் பொழுது நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வருகின்றது...? என்ற வகையில்
2.அப்பொழுது குருநாதர் சில உணர்வுகளை உணர்த்துகின்றார்
அவர்கள் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்...?
1.ஆபத்து வந்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இப்படிச் செய்...! என்று சொன்னார்
2.அதனால் அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கின்றது என்ற நிலையை
1.ஒரு ஆன்மா எப்படி வெளியில் செல்கின்றது
2.இன்னொரு உடலுக்குள் சென்ற பின் என்ன செய்கின்றது
3.இதையெல்லாம் அறிந்து கொள்வதற்குத் தான் மூன்று லட்சம் பேரைப் பார்த்தது.
எல்லாம் அனுபவபூர்வமாகக் கண்ட நிலைகள்.