ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 14, 2022

குருத்தெலும்புக்குள் (MONITOR) நாம் பாய்ச்ச வேண்டிய அருள் சக்தி

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புகளில் படர்ந்து அதற்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

செல்ஃபோன்களில் நாம் அழுத்திய பின் எங்கிருந்து ஃபோன் செய்கின்றனரோ... அவருடைய பதிவை நாம் பார்க்கின்றோம். அதே போல
1.ஒரு வேதனைப்படுவர் உணர்வைப் பதிவாக்கி விட்டால்
2.அந்த வேதனைப்படுவதை மீண்டும் எண்ணினால்
3.காற்றிலிருந்து அந்த வேதனைப்படும் உணர்ச்சிகளை நாமும் நுகர நேருகின்றது

அதே சமயத்தில் வேதனைப்படுவரைப் பார்த்தபின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அடுத்த கணமே... அதனுடன் இணைக்கப்படும் பொழுது
1.வேதனையைத் தணித்த அந்த உணர்வின் சக்தி அதன் அருகிலே படும்பொழுது
2.வேதனையான உணர்ச்சியைத் தூண்டும் நிலைகள் வலு இழக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை இப்படி அங்கே பெருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் படர்ந்து ஊனை உருவாக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி இந்த உணர்வைப் பதிவாக்குங்கள்.

நம் நெஞ்சுக்கு மத்தியில் இருக்கும் குருத்தெலும்புக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கப் படும்பொழுது
1.அங்கே ஒரு விதமான உணர்ச்சிகள் வந்து
2.இந்தக் காற்றிலே படர்ந்துள்ள அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமது உடல் அருகிலே ஈர்த்துக் கவரும்படி செய்யும்.

அபப்டி ஈர்க்கும் பொழுது... நாம் எந்த அளவிற்கு எண்ணுகின்றோமோ அதற்குத் தக்க அந்தத் துடிப்பின் தன்மை குருத்தெலும்பிலே வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் விலா எலும்புகளில் படர்ந்து அங்கே ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மறுபடியும் ஏங்கித் தியானியுங்கள்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை...!
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எந்த அளவிற்கு நெஞ்சின் விலா எலும்புகளில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ
2.அந்தக் கணக்கு கூடக் கூடக் கூட நம் உடலில் வந்த இருளை நீக்கவும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் தகுதியும் நாம் பெறுகின்றோம்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் தன்மை அதிகரித்தால் இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் சென்று விடுகின்றோம்.

ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால் இந்தக் கணக்கு கூடினால் விஷத் தன்மை கொண்ட உடல் எதுவோ அதன் ஈர்ப்புக்குள் இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.

ஆகவே நமது பற்றெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பால் இருக்க வேண்டும். அதிலிருந்து வரும் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் எண்ணுவோம் என்றால்
1.இந்த உணர்வின் வளர்ச்சிகள் நம் உடலில் உள்ள குறைபாடுகளை குறைத்து நோய்களைக் குறைத்து
2.சிந்திக்கும் ஆற்றலை வலிமை பெறச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருகச் செய்து
4.என்றும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைய இது உதவும்.