ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 15, 2022

தியானத்தின் மூலம் பெற வேண்டிய உறுதியான எண்ணம்

 

கேள்வி:-
சில நாள்களில் காலை துருவ தியானம் செய்ய முடியாதபடி உடல் கனமாகவும் சோர்வாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன...?

ஞானகுரு:-
உதாரணமாக... வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் இருந்தால் நம் செயலில் வேதனை அதிகமாக இருக்கும். நாம் எடுக்கும் இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மை உண்மையை உணரச் செய்யும்... உணர்வின் ஆர்வத்தைக் கூட்டும்... அதை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.விஷத்தால் இயங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் சோர்வடையப்படும் பொழுது
2.நம்மைப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க விடுவதில்லை... அது சோர்வடைந்து விடுகிறது.
3.அந்த விஷத்தின் ஊக்கமே நமக்குள் வலிமை கொடுக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் தியானத்தை எடுத்து உடல் உறுப்புகளில் செலுத்தப்படும் போது... “ஏற்கனவே இருந்த விஷங்கள் தணியப்படும் பொழுது...” நம்மால் முடியாது போய்விடுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று செலுத்திப் பழகுதல் வேண்டும்.

பின் சிறிது நேரத்தில் அது தெளிவாவதைப் பார்க்கலாம்.

1.இந்த மாதிரி வரும்... காரணம் எல்லோருக்குள்ளும் இந்த வேதனையான உணர்வுகள் உண்டு.
2.நாம் இந்தச் சக்தி எடுத்தவுடன் அது சோர்வடையும்
2.என்னடா நாம் தியானம் செய்து இந்த மாதிரி ஆகிவிட்டதே... என்று கூட நினைப்போம்..

விஷத்தின் இயக்கத்திற்கு ஆக்கபூர்வமான நிலைகளைக் கொடுக்கவில்லையென்றால் அதனுடைய நிலை இந்த மாதிரி வந்துவிடும்.
அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில்...
1.படுக்கையில் இருந்தபடியே சிறிது நேரம் கண்ணின் நினைவை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது அதிலிருந்து விடுபடுவதை உணரலாம்.

கேள்வி:-
தியானம் செய்து கொண்டிருக்கும் போது உடல் உறுப்புகள் அனைத்தும் காட்சியாகத் தெரிந்தது. அதனுடைய துடிப்பும் தெரிந்தது. ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பயமும் நடுக்கமும் வந்து விட்டது. ஏன்...?

அந்த மாதிரி பயம் வராதபடி எனக்கு மன பலம் வேண்டும்.

ஞானகுரு:-
பணம் வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். திடீரென்று “ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்து விட்டது...!” என்று கேள்விப்பட்டால் உங்கள் மனது எப்படி இருக்கும்...?

பயத்தைக் காட்டிலும் படபட... படபட... என்று நெஞ்சிலே துடிப்பு அதிகமாக இருக்கும். பணம் வந்துவிட்டது என்று கேட்டதுமே அதனால் மூச்சு நின்று போனவர்களும் உண்டு. இல்லையா...!

இதைப் போன்று தான் உயர்ந்த சக்திகள் நமக்குள் வரப்படும் போது..
1.ஆக அதைப் பெறுகின்றோம் என்ற நிலையில்
2.அந்த அருளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற ஆனந்தத்தைச் சேர்த்தால் அது வலுவாகும்.

ஆனால் பயத்தைக் கொடுத்தோம் என்றால் பய அலைகள் தான் வரும். வேகமாக இயக்கப்படும் போது இதனுடன் கொஞ்சம் விஷத்தைக் கலந்து விட்டால் எப்படி இருக்கும்...? பலவீனம் தான் ஆகும்.

ஆகவே... நாம் அந்த அருள் சக்திகளைப் பெறுகின்றோம் இந்த ஆசையில்
1.நல்ல நிலைகளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்துடன் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்
3.அந்த உணர்வு நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இது எல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய சரியான நெறி முறைகள்.