உங்கள் உயிரைத்தான் எண்ண வேண்டுமே தவிர சாமியின் (ஞானகுரு) உயிரை எண்ணுவதால் பலனில்லை.
சாமி உயிரால் உருவாக்கப்பட்ட அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை இங்கே பரவியிருக்கப் படும்போது நீங்கள் நுகர்ந்தால் அது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வைத் தான்
2.அவர் வழியில் எல்லோரும் ஏகமாக எண்ணி
3.அவரின் அருள் உணர்வுகளை இங்கே தபோவனத்தில் பரப்பச் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் சில சிக்கல்கள் வந்தால் அதை நிவர்த்திக்க உங்களுக்கு வழிகாட்டியான முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்.
ஞானகுரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் தபோவனத்தை எண்ண வேண்டும்.
காரணம்...
1.நாம் எல்லோரும் தவம் இருந்த அந்த உணர்வலைகள் அங்கே உண்டு...!
2.அது மிகவும் வலிமை மிக்கது... சக்தி வாய்ந்தது.
தபோவனத்தை எண்ணி குரு அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை எளிதில் பெற முடியும். அதைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும்.
ஆனால் நமது ஆசை...
1.நல்ல உணர்வைக் கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்
2.நல்லது செயல்படுத்தக்கூடிய அந்த இச்சையை நாம் பெற வேண்டும்.
அதன் வழியில் நாம் பெற்று இயங்கினோம் என்றால் உங்களுக்குக் கிடைக்கும்.
எந்தத் திசையில் நீங்கள் எங்கே இருந்தாலும் தபோவனத்தை எண்ணி...
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கினால்
2.மிகவும் எளிதாகக் கிடைக்கும்... வலிமை மிக்க சக்தியாகவும் இருக்கும்.
அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய எண்ணங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதாக இருக்க வேண்டும்.
தபோவனத்தில் எல்லோருடைய அருள் உணர்வுகளும் பரப்பப்பட்டுள்ளது. குரு அருள் துணை கொண்டு தான் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது பூமி முழுவதும் அந்தச் சக்தி பரவுகின்றது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எங்கிருந்து நீங்கள் எண்ணினாலும் அந்த அருள் உணர்வுகளைப் பெற முடியும்
1.ஏனென்றால் அவர் உணர்வைப் பெற்றுத் தான் நான் (ஞானகுரு) ஆனது.
2.அவர் உணர்வை எடுத்துத்தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றோம்.
3.ஒளியின் உடலாக இருக்கும் குருவின் உணர்வை எளிதில் பெற முடியும்.
ஆகவே அவர் காட்டிய அருள் வழியில் குரு பெயரை வைத்துத்தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்...” என்று வைத்தது. அவர் உணர்வுகளை எனக்குள் விளைய வைத்து விளைந்த அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் கொடுக்கின்றோம் (ஞானகுரு).
1.ஞானகுரு கூறிய உணர்வுப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவேன் என்றால்
3.அந்த முறைப்படி... அந்த நெறிப்படி... அந்தச் சக்திகளை நாம் பெறுகின்றோம்.
குருநாதர் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியாக இருக்கின்றார். அவர் உடலோடு இருக்கக்கூடிய காலங்களில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் பதிவானதால்... அதை உங்கள் எல்லோர் உணர்வுகளிலும் பதியச் செய்து... ஒருக்கிணைந்த அந்த உணர்வின் தன்மைகளை அலைகளாக இங்கே தபோவனத்தில் பரப்பி வைத்திருப்பதால் எளிதில் பெற முடியும்.
சாமி செய்து கொடுப்பார் என்றால்...
1.அந்தக் குருவின் (ஈஸ்வராய குருதேவர்) அருளை நமக்கு வழிகாட்டினார் என்று
2.இந்த ஞானத்தின் வழியில் உங்களுக்குள் பதிவாக்கப்படும்போது
3.இதுவே உங்களுக்குள் அந்தக் குருவாக இருந்து
4.ஞான வழியாக அந்த உணர்வின் தன்மை உங்களை வழிநடத்தும்.
5.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியையும் ஊட்டும்.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா...!