ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2022

“தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள்...” தெரிந்தும் நாம் தவறு செய்யக்கூடாது

 

யாராக இருந்தாலும் மற்றவருடன் நாம் ஒத்துழைத்து... “நம்முடைய தத்துவத்தை” இணைந்து அவரிடத்தில் சொல்லும் போதுதான் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அங்கே வரும்.

1.இல்லை... இல்லை... நாங்கள் இந்தத் தியானத்தின் வழியில் மிகப் பெரிய சக்தி பெற்றிருக்கின்றோம்
2.இப்படிச் செய்தால் மட்டும் தான் நன்றாக இருக்கும்...! என்று சொன்னால்
3.நம் காரியங்கள் அத்தனையுமே அது தடைப்படுத்தும்
4.நீங்கள் நல்லதை எடுத்து யாருக்கும் சொல்லவும் முடியாது... அதை வளர்க்கவும் முடியாது.

எது எதிலே பழக்கத்தில் இருக்கின்றோமோ அந்தப் பழக்க உணர்வு தான் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதைத் தெரிய வைக்க வேண்டியது... தெளிவாக்க வேண்டியது... நம்முடைய கடமைகளாக இருக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நமது தான் உயர்ந்தது என்று நாம் சொல்லப்படும்போது
2.அடுத்தவர்கள் “அவர்களது உயர்ந்தது என்று என்று தான் சொல்வார்கள்...!”

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நம்மிடம் இந்தப் பிடிவாதம் இருக்கக்கூடாது.

மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு... நம்முடைய தத்துவத்தை அவர் உடலில் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவ நிலைக்கு அதை உருவாக்க வேண்டுமே தவிர...
1.நாம் பிடிவாதமாக இருந்து வெறுக்கும் தன்மைக்குக் கொண்டு வந்து விடக்கூடாது.
2.எப்பொழுது பார்த்தாலும்... “என்னமோ சாமியார் என்கிறார்கள்...
3.அதைப் பண்ணுகிறேன்... இதைச் செய்கிறேன்... என்று என்னென்னமோ வேலை செய்கின்றார்கள்...! என்ற நிலைக்குச் செல்ல விடக்கூடாது.

வீட்டில் நடக்கும் சில நிலைகளுக்குச் சாங்கியங்களும் சடங்குகளையும் செய்வார்கள். உதாரணமாக உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்த பிற்பாடு என்ன செய்வார்கள்...?

காக்காய்க்கு நாங்கள் சோறு வைக்கின்றோம்... பித்ருக்களுக்குச் சாப்பாடு கொடுத்துக் கூப்பிடுகிறோம்... என்று சொன்னாலும் “அவர்கள் இஷ்டத்திற்கு” விட்டு விட வேண்டும்.

நாம் முறைப்படி தியானம் இருந்து அந்த உடலை விட்டு பிரிந்த அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

நாம் கூட்டுத் தியானமிருந்து அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

இதை... அவர்களிடம் சொல்லப்படும்போது...
1.இந்த ஆன்மா எப்படி விண்ணுக்குப் போகிறது என்று பாருங்கள்...! என்று சொல்லிக் கொஞ்சம் தூண்டி விட்டால்
2.அந்த ஆர்வம் அவர்களுக்குள் வரும்... ஏற்றுக் கொள்ளும் பருவங்களும் வரும்.
3.அப்போது அந்த ஆன்மா விண்ணுக்குச் செல்வதை அவர்களும் பார்க்க நேரும்.

ஆக... ஒரு பழக்கத்தில் இருக்கிறோம் என்றால் அதைப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டும் என்றால்
1.எவ்வளவு நல்லதாக இருந்தாலும்...
2.அந்தப் பழக்கத்தை மாற்றுவது எளிதானது அல்ல.

கேரளாவில் மொக்கை அரிசி சாப்பிடுகிறார்கள். இந்த அரிசியைப் பார்த்து இதை யார் சாப்பிடுவார்கள்...? என்று நாம் சொல்கின்றோம்.

இங்கே சன்ன ரகமான பொன்னி அரிசியை நாம் சாப்பிடுவதைப் பார்த்து இந்த அரிசியை யார் சாப்பிடுவது...? என்று அவர்கள் சொல்கிறார்கள். அவரவர்கள் ருசி தான் அவரவர்களுக்கு வரும்

ஆகவே எப்போதுமே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மற்றவர்களை நாம் மதித்துப் பழக வேண்டும்.
1.அவர்களை உயர்த்தினால் தான் நமது சொற்களை அங்கு ஏற்கும் பருவம் கிடைக்கும்.
2.இல்லை என்னுடையது தான் உயர்ந்தது..! என்று சொன்னால் நமது உணர்வை அவர்கள் தாழ்த்தித் காட்டுவார்கள்.

நமது தத்துவங்களை அவர்களை அணுகிப் போய்த்தான் சொல்ல முடியுமே தவிர
1.கட்டாயப்படுத்தி யாருக்கும் திணிக்க முடியாது
2.கட்டாயப்படுத்திச் சொல்வதோ... இது தான் மிகவும் நல்லது என்று வலியுறுத்தினாலோ
4.நம் மீது வெறுப்பு தான் வரும்.

அந்த வெறுப்பை எடுக்க விடாதபடி... நாம் அவர்களைப் பக்குவப்படுத்தி நம்முடைய நிலைகளைப் படிப்படியாக அங்கு சொல்லி மாற்றி... “அவர்களை உணரும்படி செய்வது தான்...” நம்முடைய கடமையாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் உடலில் இயக்குவது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்...! அவரின் எதிர் நிலையான அழுத்தங்கள் நாம் எவ்வளவு தான் உண்மையைச் சொன்னாலும் வெறுக்கும் தன்மை தான் வரும்.

ஆகையினால் இதைப் போன்ற பழக்கத்தை எல்லாம் நாம் மாற்றி
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலைக்கு
2.அந்தப் பக்குவ நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.