ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2022

பகைமை என்பது நல்லதா... கெட்டதா...!

 

பகைமை இல்லாது எதுவுமே நடப்பதில்லை.
1.ஒரு பகைமை என்று வந்து விட்டால்
2.“உஷார் தன்மை கொண்டு”
3.நல்லதைக் காக்கும் உணர்வை வளர்த்து விட வேண்டும்.

பகைமை உணர்வுகள் வந்தால் எனக்கு இப்படி நடக்கிறதே…! என்று எண்ணத்தை வளர்த்து விட்டால் அந்த உணர்வின் அணுக்கருக்கள் நமக்குள் வளர்ந்து நோயாகவும் மாறுகின்றது… நமது எண்ணங்களும் சீர் கெடுகின்றது.

அதை மாற்ற வேண்டுமென்றால் துருவ தியானத்தில் கொடுத்த ஆற்றலைp பருகி அதை வலுப் பெறச் செய்ய வேண்டும்.

எப்பொழுது நம் மனம் சோர்வடைகிறதோ அந்தச் சோர்வை நமக்குள் விடாதபடி தடைப்படுத்த ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இதைத் தான் கண்ணன் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது.

கர்ப்பமான தாயின் கருவிலே சிசு இருக்கப்படும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கருவிலே இந்த நினைவைச் செலுத்தினால் அந்த உணர்வின் தன்மை அங்கே குழந்தைக்குள் வளர்ச்சியடைகின்றது.

அதே போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைகின்றது. கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தான் நமக்குள் அணுவின் தன்மையாக உருவாகின்றது.

அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கினாலும் அருள் மகரிஷிகளின் அருள் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி எண்ணி அந்த உணர்வினை உயிருடன் ஒன்றி மீண்டும் உடலுக்குள் செலுத்தும் போது
1.இரத்த நாளங்களில் அந்தக் கருக்கள் உருவாக வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடல் முழுவதும் பரவி உடல் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்றும்
3.வெறும் வாயால் சொல்லக் கூடாது.
4.இந்த நினைவினை உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அது பெற வேண்டுமென்று நினைவினை “உள் பாய்ச்ச வேண்டும்…” (3 & 4 முக்கியம்)

வெளியிலேயே பார்க்கும் பொழுது வேண்டாதவர்கள் யாராவது இருந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் “எனக்கு இப்படிச் செய்தார்கள்…” என்று எண்ணினால் போதும்.

இந்த நினைவலைகள்… கண்ணின் நினைவாற்றல்…
1.அவர் உடலில் நம் உணர்வுகள் பதிவாகி இருப்பதால்
2.அங்கே (அதைப்) போய் உடனே தாக்கச் செய்யும் (EARTH).

எப்படி இராக்கெட்டை விண்ணில் செலுத்தி அதனுடன் தொடர்பு கொண்ட நிலையில் இங்கே தரையிலிருந்து இயக்குகின்றனரோ இதைப் போல “வேண்டாதவர்களை எண்ணும் பொழுது...”
1.உடனே அவர்களை அது இயக்குகின்றது.
2.அவர் செயலாக்கங்களை இடைமறிக்கின்றது
3.அவருக்கு இடையூறு வருகின்றது
4.அந்த அணுக்களின் தன்மை அங்கே வளர்ச்சி பெறுகின்றது... அதன் வழி அங்கே தடைப்படுத்துகின்றது.

இதைப் போன்றுதான் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்து விட்டால் இந்த நினைவு உடனே அங்கே செல்கின்றது. இது நமக்குள் இங்கே வலுப்பெறுகின்றது. வேண்டாதவர் என்ற நிலையில் அவர் உணர்வின் சக்தியைத் தடைபடுத்துகிறது.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அருள் ஒளியை நமக்குள் பெருக்கப் பெருக்க… நமகு யார் தீமை செய்தாலும் “என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்…” என்று எண்ணினால் போதும்.

நாம் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள்...
1.அவர்கள் நமக்குத் தீமை எண்ணும் பொழுதெல்லாம்
2.சிறுகச் சிறுக சிறுகச் சிறுக அவர்களுக்குள் இது ஊடுருவப்பட்டு
3.அங்கிருக்கும் நமக்குத் தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யும்.

இது போன்ற நிலைகள் வளர்ந்து விட்டால் தீமையான அணுக்கள் நமக்குள் வளராது... நமக்கு நோய் வராது... நம் காரியங்களைத் தடைத்தும் நிலைகளும் வராது.

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.