ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2022

விபத்து நடந்த இடத்திலேயே மீண்டும் விபத்து நடக்கக் காரணம் “அந்த இடமா...? அல்லது பதிவு செய்து கொண்ட நம் எண்ணமா...?”

 

கேள்வி:-
வாகனத்தில் செல்லும் போது ஒரே இடத்தில் இரண்டு தடவை விபத்தாகி விட்டது. கேட்டால் சாப அலைகள் அங்கே இயக்குகிறது என்று சொல்கிறார்கள்.

நானும் தியானம் செய்துவிட்டுத் தான் அந்த வழியாகச் செல்கிறேன். அந்தப் பாதையை நான் மாற்றிக் கொள்ள வேண்டுமா...? எதனால் அங்கே விபத்தானது...?

பதில்:-
1.இந்த இடத்தில் சாப அலைகள் உள்ளது... வாகனத்தில் சென்றால் அடிபடும்... என்று
2.மற்றவர்கள் சொன்ன உணர்வுகள் உங்களுக்குள் பதிந்திருக்கின்றது.
3.அந்த இடம் வந்தவுடன் சரியாக அவர்கள் சொன்ன நினைவு வருகின்றது... விபத்தாகிறது.

இது தான் அங்கே நடந்தது...!

காரணம்... அந்த அலைகள் உங்களுக்குள் இருக்கிறது. நினைவு வந்ததும் அதை இழுத்துக் கொண்டு வருகின்றது... விபத்தாகிறது.

ஆனால் மற்றவர்கள் சொன்ன உடனே ஆத்ம சுத்தி செய்து நீங்கள் மறைத்து விட்டால் அத்தகைய விபத்து நேராது.
1.பிறர் சொல்லும் உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதியும் போது அந்த இடத்தில் போகும் போது டக்... என்று அந்த எண்ணம் வரும்.
2.அந்த சமயத்திலே பிரேக் இடாதபடி மற்ற வண்டிக்கு முன்னாடி உங்களை அழைத்துச் செல்கிறது
3.வண்டிக்காரன் வந்து அடிக்கவில்லை... நீங்கள் தான் சென்று விழுகிறீர்கள்.

காரணம் அதைப் போன்ற சந்தர்ப்பங்களில் நம்முடைய நினைவாற்றல் தான் அந்த வேலையைச் செய்கின்றது. ஒரு மனிதனுடைய உணர்வுகள் இப்படி எல்லாம் இயக்குகிறது... சந்தர்ப்பம் தான் இதெல்லாம்.

உதாரணமாக வீட்டில் கஷ்டம் என்றால் வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லிக் கொண்டு என்ன தான் வீட்டுச் சுவரை இடித்து மாற்றி வைத்தாலும் மீண்டும் அவன் சொன்ன “இடி...” தான் அங்கே வரும். குடும்பத்தில் மீண்டும் சங்கடங்களும் தொல்லைகளும் தான் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நாம் பதிவு செய்த உணர்வு மீண்டும் அந்த இடம் வந்ததும் ஞாபகம் வரும்

ஒரு பனை மரத்தில் பெரிய பூதம் இருந்தது. அதைப் பார்த்தேன்...! என்று வேண்டுமென்றே ஒருவர் வந்து சொல்லட்டும்.

எங்கப்பா...?

அங்கே அந்த ஒற்றைப் பனை மரம் இருக்கிறதல்லவா.. அது தான்...! என்று சொன்னால் போதும்.

அப்படீங்களா...! என்று பதிவாகி விட்டால் போதும்.

ஆனால் அங்கே பேயும் இல்லை பூதம் இல்லை.

இங்கிருந்து நடந்து போகும் போது... பூதம் இருக்கிறது என்று அவர் சொன்னாரே... “இந்த இடம்தான் தானே...!” என்று எண்ணினால் போதும். உடனே அந்த இடத்தில் பேயாகக் காட்சி கொடுக்கும்.

பார்க்கலாம்...
1.மனிதனுடைய உணர்வலைகள் அவன் பரப்பியது
2.அங்கே நாம் செல்லும் பொழுது அந்த இடத்தில் அதைக் குவித்துக் கொடுக்கும்
3.ரேடியோ டி.வி. அலைகள் மாதிரி தான் மனிதனுடைய உணர்வின் இயக்கங்கள்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை கொடுத்திருக்கின்றோம். அதை எடுத்துப் பயன்படுத்தி விட்டு “நாளை நடப்பது அனைத்தும் நல்லவையாக இருக்க வேண்டும்...!” என்று எண்ணி அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆக மொத்தம் வாஸ்து சாஸ்திரம் நியுமராலஜி ஜாதகம் ஜோதிடம் என்று
1.கஷ்டம் வருகிறது... கஷ்டம் வருகிறது... எல்லோருமே கஷ்ட நஷ்டங்களைச் சொன்னால்
2.முதலில் கஷ்டத்தைத் தான் ஏற்றுக் கொள்கின்றோம்... அப்புறம் நன்மை எங்கே கிடைக்கும்...?

அதைக் கழிக்கச் சாங்கியம் செய்வதற்காகக் காசை செலவழித்து காசும் போனது தான் மிச்சம். இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:-
சூரியனுக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் உண்டான ஒற்றுமை என்ன..? வேற்றுமை என்ன...?

பதில்:-
நம் உடலுக்குள் உயிர் சூரியன் தான். இதிலே (உடலிலே) ஒற்றுமையாக வரக்கூடிய உணர்வுகளை ஒளியாக்கப்படும் பொழுது ஒளி ஒன்றாகின்றது. ஆறாவது அறிவைத் தெளிவாக்குகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகிய உணர்வின் தன்மை ஒளியானபின் உயிரைப் போன்றே உடலில் உள்ள ஜீவ அணுக்களை மாற்றுவது தான் ஒளி... பிறவியில்லா நிலை... துருவ நட்சத்திரத்துடன் இணைகின்றது

சூரியன் நம்முடைய உடலைப் போன்றது தான்... அழியும் தன்மை பெற்றது... நிரந்தரமானதல்ல...! நம் உடல் எப்படி நிரந்தரமற்றதோ சூரியன் உடலும் நிரந்தரமற்றது தான்.

அதிலே விளைந்து உயிரணு தோன்றி எத்தனையோ உணர்வுகள் கடந்து உணர்வை ஒளியாக மாற்றியது நிரந்தரமானது. அது அழியாப் பேரருள் கொண்டது.
1.பிரபஞ்சத்தில் உருவானதுதான் அந்தத் துருவ நட்சத்திரம் (அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது) ஆனால் அது அழிவதில்லை.. சூரியன் அழியும்.
2.ஆறாவது அறிவினை அகஸ்தியனைப் போன்று நாமும் சீராகப் பயன்படுத்தினால்... ஏழாவது நிலையாக ஒளியாகின்றோம்.

அது தான் பிறவியில்லா நிலை என்று சொல்வது.