ஒவ்வொரு நாளும் நமக்குள் தீமை சாடாதபடி... அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து அந்த உணர்வை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
அதன் வழியில் நாம் இடும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இங்கே பூமியில் படரச் செய்யப்படும் போது
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளை எல்லாம் அடக்க முடியும்...
2.நாம் வாழும் பகுதியிலிருந்து அவைகளை அகலச் செய்யவும் முடியும்.
அதே சமயத்தில் கடந்த காலத்தில் மனிதனுக்கு மனிதன் அரசின் நிலைகள் கொண்டு மத பேதம் இன பேதம் என்ற நிலைகளில் அழித்திட்ட உணர்வுகள் நம் முன் படர்ந்து கொண்டிருந்தாலும்
1.அதனைச் செயலற்றதாக்க...
2.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
3.நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை மூச்சலைகளாக வெளியிடுவீர்கள் என்றால்
4.கடந்த காலத்தில் வெளியிட்ட மனிதனுக்கு மனிதன் பழி தீர்க்கும் உணர்வுகள் இங்கே நிற்காது... அவைகளும் நகர்ந்து சென்றுவிடும்.
மேலும் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் போது... உங்களிடமிருந்து வெளிப்படும் அந்த உணர்வின் எண்ணங்கள் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு... இந்தக் காற்று மண்டலத்தில் அது ஊடுருவி... அதனின் வலுவாற்றல் கொண்டு தீமையை விளைவிக்கும் தீய உணர்வின் தன்மைகளை எல்லாம் “கடலுக்கே துரத்தியடிக்க முடியும்...”
ஆகவே... தவறே செய்யவில்லை என்றாலும்... ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளாக இருந்தாலும்... மத வெறியால் அவர்களை அழித்திடும் நோக்கத்தில் இரக்கமற்ற செயலாகச் செயல்படும் அந்த உணர்வுகளை நீக்கிட அருள் ஞானிகளின் உணர்வை இந்த உலகம் முழுவதும் நீங்கள் பரவச் செய்யுங்கள்.
அப்படிப் பரவச் செய்தால் தீமையான உணர்வுகளை மற்றவர்கள் நுகரும் தன்மைக்கே இடம் கொடுக்காது “மனிதர்கள் வாழும் இடத்தை விட்டு நகர்ந்து செல்லச் செய்யலாம்...”
இவ்வாறு அதனின் செயலாக்கத்தைக் குறைத்து
1.மக்களுக்குள் அறியாது வரும் தீமையான உணர்வுகளை எண்ண விடாது தடுக்க
2.உங்கள் உணர்வுகள் பயன்பட வேண்டும் என்பதற்குத் தான்
2.இதை உங்களுக்குள் உபதேசிப்பதும்... தியானத்தால் வளர்க்கச் சொல்வதும் (ஞானகுரு).
ஏனென்றால் இதை உங்களுக்கு உபதேசித்த பின் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று உங்களைத் தான் நான் சதா தியானிக்கின்றேன்.
நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிக்கும் போது அந்த உணர்வுகள் துரித நிலைகள் கொண்டு கிடைக்கும்.
காரணம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வின் அலையாக யாம் பதிவு செய்யும் போது...
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கண்ணுக்குக் கொண்டு வந்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கினால்
3.கண்ணுக்கு எட்டாத தூரத்தில் பல இலட்சம் மைல்களுக்கு அந்தப் பக்கம் இருந்தாலும்
4.துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளி வரும் அந்த உணர்வுகளை எளிதில் கவர முடியும்.
ஆண்டென்னாவின் பவரைக் கூட்டிக் கொண்டு விஞ்ஞான அறிவால் சேடிலைட் டி.வி. என்று தெளிவாக எப்படிக் காணுகின்றனரோ இதைப் போல் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தி ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
பதிவு செய்த அருள் ஞானியின் உணர்வை நினைவுக்குக் கொண்டு வந்து அருள் உணர்வுகளை நீங்கள் பெற்று வாழ்க்கையில் வரும் அறியாத இருளை நீக்கி விட்டு... மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெற வேண்டும்.
இதன் மூலம்... தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக மகிழ்ந்து வாழும் ஆற்றலாகப் பெறுவீர்கள்... எப்படியும் அதை உங்களுக்குள் பெறச் செய்ய வேண்டும்... என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).