ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2021

உயிருடன் ஒன்றி வாழ்ந்தால் பிறப்பின் பலனை அடையலாம் - ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் நிலை பலவற்றில் கலந்திருந்தாலும் அதன் “கூட்டு நிலை...” கொண்டு தான் ஒவ்வொன்றின் பிரகாசமும் ஜொலிக்கின்றது.

தனித்த பூக்களாக இருந்தாலும் அதை எல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஆரம் கட்டித்தான் ஆண்டவனுக்குச் சூட்டி மகிழ்கின்றோம்.
1.ஒன்றாக உள்ளதைப் பலவாகத் தருவதே இயற்கை...!
2.தாவர வளர்ச்சியின் நிலையிருந்துதான் முன்னோடி நிலை பெறுகின்றது.

தானாக வளரும் தாவரங்களும் சரி... நாமாகப் பயிர் செய்யும் தாவரங்களும் சரி... ஆரம்ப வளர்ச்சியில் அதற்கு வேண்டிய சக்தியை ஈர்த்துத் தன் சேமிப்புச் சக்தியின் பலன்களைத் தருகின்றன.

1.பூவையும் காய்களையும் கனிகளையும் சில தாவரங்கள் தருகின்றன.
2.பூவும் கனியும் அளிக்காத புல் பூண்டு இன வர்க்கங்கள் அதன் அமில குணங்கள் முற்றிய பிறகு
3.வேர்களின் அதனின் சக்தி குணத்தை அதிகப்படுத்திக் கனம் கொண்டு தான் சேமித்து
4.வளர்ச்சி நிலையை வளரந்த பிறகு வெளிப்படுத்துகின்றது.

“வளர்ச்சியின் முற்றலை...” ஒவ்வொரு தாவர இன வர்க்கமும் வெளிப்படுத்திய பிறகு தான் அதனின் உயிர் ஜீவ சக்தி மாறுபடுகிறது.

அதன் மாற்றத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவ ஆத்மாக்களுக்கு ஆரம்ப காலத்திலேயே ஒன்றாகப் பல அமில குணத்தை ஈர்க்கும் நிலை பெற்றதனால் மனிதனும் மிருகமும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இன வர்க்கங்களும் தம் உடல் அவய அமைப்பில் பல நிலைக்கேற்ப அங்க அவயங்கள் ஒரே தன்மையில் ஈர்த்து வளரும் நிலை கொண்ட இன குணங்களுடைய ஜீவராசிகளாக வளர்ந்திருக்கின்றோம்.

தாவரங்கள் சக்தியை ஈர்த்துப் பிறகு பலன் தருகிறது. தாவரங்களுக்கு உண்டு கழிக்கும் நிலை இல்லை.

பலவும் ஒன்றாக ஈர்த்துப் பல அவயங்களை ஒன்றுபடுத்தி உருவ அமைப்பு கொண்ட ஜீவன்களுக்கு உண்டு கழித்து வாழும் அவயங்கள் எப்படி அளிக்கப்பட்டன...?

அளிக்கப்பட்டன...! என்பதைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னேற்றம் கொண்ட ஜீவ ஜெந்துக்கள் தன் வளர்ச்சியில் உண்டு கழித்துப் பல கோடி உயிரணுக்களை வளர்த்து வாழும் நிலையில் பயன் பெறும் பக்குவ நிலை பெறுவது தான்...! அது.

அதாவது...
1.தன் அவயங்களில் உள்ள பல கோடி அணுக்களை வளர்த்து
2.ஒன்றாக அதைக் கூட்டிப் பேணிக் காக்கும் ஓர் உயிரணுவின் தெய்வ சக்தியில்
3.உயிர் சக்தியான மனித உயிரணுவின் ஞானத்தின் வளர்ச்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டு
4.ஞான வளர்ச்சிக்கு உகந்த தன்மையில் ஒவ்வொரு உயிரணுவும்
5.இதன் தொடருடன் ஐக்கியப்படும் வளர்ச்சி நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான் மனித ஜீவன் பெறும் பலன்.
6.ஆக ஜீவனாக உள்ள ஜீவனின் பலன்... இந்த ஞானம் பெறும் வழி ஞானம் தான்.

பலனற்ற நிலை பெறாத ஜீவ ஞானம் தான் அதனின் தொடரில் ஏற்படும் “மாற்று நிலைகளுக்குச் செயல்படச் சென்றுவிடுகிறது...”

மனிதனின் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் அதனதன் வளர்ச்சியில் வளர்ந்து கொண்டு இருந்தால் தான் அவயங்களில் உள்ள அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமான நிலையில் வளர்ந்து வாழ முடிகின்றது.

அணுக்களுக்கு உகந்த உணவை அதற்குகந்த ஈர்ப்பில் பெற்று வளர்ந்து வாழ்கின்றது.
1.எண்ணத்தின் நிலையை மாற்றிக் கொண்டு செயல்புரியும் நிலை பெற்று விட்டால்
2.ஈர்க்கும் குண நிலையும் அதன் வழித் தொடர் கொண்ட எந்தச் செயல் முறையும் தடைப்படத்தான் செய்யும்.

பலவாக உள்ள பூவை ஒன்றாக்கி ஆரம் கட்டி அதன் அழகை ஆண்டவனுக்கு அணிவித்து இன்பம் காணுவது போல்
1.நம் உடலில் பலவாக உள்ள அணுக்களை ஒன்றாக ஆரம் கட்டி
2.உயிராத்ம ஆண்டவனுக்கு ஞானம் சூட்டி... அழகாக்கி...
3.மனிதன் மகிழ வேண்டும்...! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே
4.சிவபதம் முதலிய எப்பதமும் காணலாமப்பா...!