ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2021

சுவாச நிலைக்கொப்பத் தான் உடல் உஷ்ணமாக இருப்பதும் குளிர்ச்சியாக இருப்பதும் அமைகிறது - ஈஸ்வரபட்டர்

 

உடல் பொறுக்கும் சூட்டைக் காட்டிலும் நம் உடலுக்குள் உள்ள உள் உறுப்புகள் அதிகச் சூட்டை ஏற்கும் தன்மை கொண்டுள்ளன.

உடம்பின் மேல் நாம் சூடாக அருந்தும் பானத்தின் சூடு பட்டவுடன் உடம்பின் மேல் அங்கங்கள் அந்நிலைச் சூட்டைப் பொறுப்பதில்லை. ஆனால் உள் உறுப்புகள் அந்தச் சூட்டை ஏற்கின்றன.

1.ஒரே பிம்ப உடல் தான்...
2.ஆனால் ஒவ்வொரு அவயங்களின் நிலைக்கொப்ப உஷ்ணத் தன்மைகள் உள்ளன.
3.இவ் உடலிலிருந்து இச் சுவாசம் ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் நிலைக்கொப்ப நம் உடல் உறுப்பு உள்ளது.

தாவரங்களின் தன்மையிலும் இத்தகைய நிலையுள்ளது. நம் பூமியின் தன்மையிலும் இதுவே தான். பூமியில் உள் நிலை பூமியின் மேல் நிலையை காட்டிலும் சில இடங்களில் அந்த உஷ்ண நிலை மாறு கொள்கின்றது.

கோடை காலங்களில் பூமியைப் பறிக்கும் பொழுது அந்தப் பூமியின் உள் நிலை மேல் நிலையைக் காட்டிலும் உஷ்ணமாகவே உள்ளது. நாம் நினைக்கின்றோம்.. சூரியனின் வெக்கையினால் அந்தப் பூமியில் சூடு உள்ளதென்று.

1.பூமிக்கு உஷ்ணத்தை ஈர்ப்பதுவே
2.பூமியின் சுவாசத்தினால் தான்..!

உள் இழுத்து வெளிக்கக்கி இந்த உலகம் சுழன்று... சுழற்சியின் மோதலில் ஒளி அலையை ஈர்த்து வெளிக் கக்கும் நிலையில் அந்தந்தக் கால நிலைகளில் எந்தெந்த மண்டலங்களின் ஈர்ப்பலையின் சக்தி அதிகமாக ஈர்க்கப்படுகின்றதோ.. அதன் நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறுபடுகிறது.

அதே போல் உஷ்ண அலையின் தன்மையும் மாறு கொண்டே உள்ள நிலைக்கொப்ப மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறு கொண்டுள்ளன.

சனி மண்டலமானது மிகவும் குளிர்ந்த அமிலத் தன்மை கொண்ட மண்டலம். அந்த மண்டலத்தின் ஒளி அலையே நம் பூமியைப் போல் வெளிச்சமானதாக இல்லை.

வளர்ந்த மண்டலம் தான் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது. அதன் தன்மையே மிகவும் குளிர்ச்சி வாய்ந்த அமிலத்தை ஈர்த்து வெளிப்படுத்தி அதன் நிலைக்கொப்பப் பனி மண்டலமாக உருளுகின்றது.

சனி மண்டலத்தின் ஈர்ப்பலையின் காலங்களில் நம் பூமியின் வட துருவ தென் துருவ ஈர்ப்பின் நிலைக்கொப்பக் குளிர் காலங்கள் பூமியில் ஏற்படுகின்றன.

அதே போன்ற நிலை தான் நம் பூமியைக் காட்டிலும் அதிகமான உஷ்ணத்தை ஈர்த்து வெளிப்படுத்தும் ராகு கேது போன்ற சில மண்டலங்களின் தொடர்பினால் நம் பூமியில் கோடையில் ஏற்படும் உஷ்ண நிலை.

ஆகவே உஷ்ண நிலை என்பது...
1.சுவாசிக்கும் சுவாசத்திற்கொப்பவும்
2.வந்து மோதும் பிற உணர்வுகளுக்கொப்பவும் தான் என்பதை
3.நாம் அறிதல் வேண்டும்.