ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 25, 2021

குரு பலன்(ம்)... குரு பரன்(ம்)

 

கூட்டுத் தியானம் செய்கிறோம் என்றால் ஒவ்வொருவரும் எத்தனையோ எண்ணத்திலே தான் அதிலே வந்து கலந்து கொள்கின்றோம். ஒவ்வொருவரின் வீட்டிலும் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கிறது.

ஒரு குழம்பை வைக்கும் போது புளிப்பு காரம் உப்பு எல்லாவற்றையும் சேர்த்துத் தான் அதை ஒரு ருசியாகக் கொண்டு வருகின்றோம்.

அதே போல் கூட்டுத் தியானத்தில்
1.“எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்...” என்று
2.கூட்டமைப்பாக எண்ணி ஒரே குரலில் எழுப்பும் போது காந்த அலைகள் அது கவர்கிறது.
3.நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் போது அந்த உணர்வுகள் செவிகளில் படுகிறது
4.உணரச்சிகள் உந்தப்பட்டு எல்லோருடைய உணர்வுகளிலும் அது இணைகிறது.

27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோளின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் இணைத்து அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பெற வேண்டும்... என்று அதன் மூலம் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை ஈர்க்கச் செய்கிறோம்.

1.மனித உடலுக்குள் 1008 நல்ல குணங்கள் உண்டு
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரே குரலில் ஒலியை எழுப்பும் போது
3.அந்த நல்ல குணங்கள் அனைத்திலுமே இந்த உயர்ந்த உணர்வுகள் செருகப்படுகிறது.

அத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானம் இருக்கின்றோம். நம்மால் சம்பாரிக்க முடியாததை... அந்த அருள் சொத்தைக் கூட்டாக எண்ணித் தியானிக்கும் போது... கிடைக்கச் செய்ய முடிகிறது.

மிளகாயைக் குழம்பில் போட்டவுடன் அதிலே எப்படி ருசி வருகிறதோ அதைப் போல் சுவை கொண்ட உணர்வாக மாற்றிக் கொள்ள முடிகிறது.

வீட்டில் சங்கடமும் சலிப்பும் மற்றதுகளும் வந்தாலும் கூட... அந்த உணர்வை மறந்து விட்டு மெய் ஒளியைக் கலந்து “எல்லோரும் நலம் பெற வேண்டும்” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்பும் போது “சூரியனின் காந்தப் புலன் அது கவர்கிறது...”

பல வகையான சரக்குகளைப் போட்டுத் தான் குழம்பு வைக்கின்றோம். அவை ஒவ்வொன்றும் தனி சுவைதான். இருந்தாலும் எல்லாவற்றையும் போட்டு வேக வைத்து ஒன்றாகக் குழம்பாகும் போது அதிலிருந்து வெளி வரும் மணத்தைச் சூரியனின் காந்தம் அதைக் கவர்ந்து கொள்கிறது.

அதனின் மணத்தை நுகரும் போது அதனின் சுவையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த மணத்தின் குணத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதைப் போன்று தான் நாம் படைக்கும் இந்த அருள் ஞானிகளின் சக்தியை...
1.எல்லோருக்குள்ளும் அந்தச் சக்தியைப் பரப்பச் செய்து
2.காந்தப் புலனின் நிலைகள் கொண்டு மோதச் செய்து
3.அதே உணர்வின் தன்மை ஈர்க்கச் செய்து
4.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு இணைக்கச் செய்யும் முறை தான்
5.யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தக் கூட்டுத் தியானத்தின் நிலை.

அதாவது
1.பரவிக் கிடக்கக்கூடியது அனைத்தும் நமக்குள் குரு பரம்.
2.ஒவ்வொரு நிலைகளிலும் அதை எடுத்து விளைய வைத்த அந்தந்த உயிரின் நிலைகள் இது பரமாகி
3.தனக்குள் (அனைவருக்குள்ளும்) அருள் உணர்வாக அது சேரும் நிலை.

ஏனென்றால் இது குரு பலன் குரு பரன்...!