ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2021

என்றுமே அழியாத வாழ்க்கையாக நாம் எப்படி வாழ்வது…? - ஈஸ்வரபட்டர்

 

புண்ணிய ஸ்தலம் என்பது கோவில்கள் தான்...!

1.அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் உள்ள மூலவர் உருவினிலே
2.அந்த ஸ்தலத்தை நினைத்து எங்கிருந்தாலும் எவன் ஒருவன் வேண்டுகிறானோ
3.அந்த நிலைக்கு அவனுக்கு அருள் புரிகின்றான் அங்கே அமர்ந்துள்ள மகான்.

புண்ணியம் எய்தி… பிறந்த பயனை தன் ஜெப நிலையால் தன் நிலையை ஜோதி நிலையாக்கி… அவன் ஸ்தாபிதம் செய்த சிலையில்… தன் ஜீவனை அந்த சிலையின் ஜீவனாக்கி… எண்ணுபவர்களுக்கெல்லாம் அவ்வெண்ணத்தின் வழியினிலே வழியமைக்கின்றான் அந்த மகரிஷி ஜோதி நிலையில்…!

ஆண்டவன் என்பவன் யார்…? என்று பல முறை கேட்டுள்ளேன், ஆண்டவன் என்பது இப்பொழுது புரிந்ததா…?

1.இறப்பும் பிறப்பும் அவனவன் செய்த கர்ம பயனால் வருவது தான்…!
2.எமனும் வரவில்லை… காலதேவனும் வரவில்லை…! என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

அவனவன் பிறப்பையும் இறப்பையும் அவன் வழியில் உள்ள அவனுள்ளே உள்ள சக்தியின் பயனைப் பெற்றுத்தான் பிறக்கின்றான்… இறக்கின்றான்.

சுவாச நிலையில் தான் வியாதிகள் வருகிறது. அவன் வாழ்க்கை முறையில் உள்ள சுவாச நிலையும் அவனுக்கு வித்திட்டு வியாதியைப் பெருக்கச் செய்கிறது.

1.எண்ணத்தின் பயத்தினால் தான் வியாதி முற்றி
2.அச்சுவாச நிலை பெரும் மாறுபட்டு அந்த அழுகும் தன்மையுள்ள உடலில்
3.அவன் உடலில் உள்ள சிறு சிறு நல்ல அணுக்களும் அவனைக் காத்து வந்த நிலையை மாற்றி அந்த அணுக்களும் அழுகி
4.பெரும் வேதனையில் உள்ள அவன் விடும் சுவாச நிலை அவனையே அழிக்கின்றது பெரும் பயத்தினால்..!

அந்த நிலையில் அவனுள் இருக்கும் அவ்வுயிர் சலிப்புடன் அவன் உடலை விட்டு ஆவி உலகம் செல்கிறது. அந்த ஆவிகள் தான் பிறகும் (அடுத்த பிறவியாக) பிறக்கின்றது.

“எண்ணம் போல் வாழ்வு…!” என்றார்கள் பெரியவர்கள். எண்ணம் எல்லாம் அவன் விடும் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

பெரும் வேதனை உள்ள மனிதன்…
1.தன்னுள் இருக்கும் ஈசனை நினைத்து “ஈஸ்வர தியானம்” செய்து
2.தான் செய்த பாவ புண்ணியங்களை மறந்து எப்படியும் வாழ வேண்டும்
3.ஒரு நிலையில் வாழ வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று
4.தன் எண்ணத்தினுள்ளேயே எண்ணிக் கொண்டு அவன் விடும் சுவாச நிலைக்கு அந்தச் சக்தியின் அருள் கிட்டுகிறது.

எண்ணத்தில் சலிப்பு வந்தவனுக்கு வாழ்ந்து என்ன பயன்…! என்ற நிலையில் அந்தச் சுவாசத்தை எடுத்துச் சுற்றுபவனுக்கு அந்த எண்ணமே தான் சுற்றுகிறது அவன் உடலில்.

அந்த எண்ணம் போல் தான் அவன் விடும் சுவாச நிலையில் சுற்றுகிறது அவன் எண்ணம். அந்நிலையே தான் அவனுக்கும் வருகிறது.

எண்ணத்தில்தான் குழந்தை பிறப்பிலிருந்து அதன் எல்லா நிலைகளிலுமே எண்ண வடிவில்தான் அதன் வாழ்க்கையே அமைகிறது.

முடிவில்லா இந்த உலகில்… முடிவில்லா உடலுடன்… “மூவுலகை ஆட்டி வைக்கும் அச்சக்தியைப் பெற்றிட…” இந்த உலகில் உதித்த ஒவ்வொரு உயிரும் காலம் சுற்றும் நிலை போல் அந்நிலை எய்திட முடியும்.

பல பிறவிகள் மாறுபட்டு ஆவி உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டு… ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்திடலாம்… வாழ்ந்திடலாம்.. பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.

முடிவில்லா உலகைப் போலவே முடிவில்லாமல் வாழ்ந்திடலாம்…!