ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 16, 2021

அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்களுக்குச் சர்க்கரை நோய் வரக் காரணம் என்ன...?

 

நமக்குத் தெரியாமலே நம் உடலில் கோபமும் வெறுப்பும் அதிகமாகச் சேர்ந்து விட்டது என்றால் எந்த வேலையைச் செய்தாலும் வெறுப்பாகவே வரும்.

கோபம் வரும் சமயங்களில்... குடும்பத்திலோ அல்லது தொழிலிலோ யாரைப் பார்த்தாலும்
1.ஏதாவது வேலை சொல்லிக் கொண்டிருக்கும்போது திருப்பிக் கேட்டால் உடனே கோபம் வரும்
2.இப்படி அடிக்கடி செய்தோம் என்றால் இரத்தக் கொதிப்பாக மாறும்.

அதே சமயத்தில் இந்தக் கோபமும் வெறுப்பும் வரப்படும் போது ஒருவர் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து... அவர்கள் சிரிப்பதைப் பார்த்தால் உடனே அது எதிர்நிலையாகும்.

எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்...? என்று அடிக்கடி அதைப் பார்த்து அவர்கள் சந்தோஷத்தைக் கண்டு வெறுத்தோம் என்றால் நம் உடலில் சர்க்கரைச் சத்து உண்டாகும். இந்த இனிப்பு பிரிந்துவிடும்.

1.அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்ற அந்த உணர்வை எடுத்து
2.எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்...? என்று இந்த வெறுப்பு வரப்படும் போது
3.மற்ற உணர்வுகள் இங்கே சேர்த்தவுடனே சர்க்கரை பிரிந்துவிடும்.

பொதுவாக... நமக்குள் ஒரு மகிழ்ச்சியை ஊட்டுவதும் ஒரு இயக்கச் சக்தியாக இருக்கக்கூடியதற்கு அந்த (சந்தோஷம்) உணர்வு வந்து தான் சுவை கொடுக்கும்.

ஆனால் மேலே சொன்னபடி நாம் வெறுக்கும் போது
1.அந்தச் சுவை பிரிந்து சென்றால் சர்க்கரைச் சத்து வந்துவிடும்.
2.இந்தக் காரமும் அதுவும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இரண்டும் சண்டை போடும்.
3.சண்டை போடுவதற்கே நேரம் பத்தாது.

இது பெருகினால் உடலில் நிச்சயம் இரத்தக் கொதிப்பு வரும். சர்க்கரைச் சத்துடன் இந்த இரத்தக் கொதிப்பும் சேர்ந்தால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது இருதயம் பலவீனமாகும்.

சண்டை போட்டோம் என்றால் இருதயத்தில் இரத்தம் செல்லும் வால்வுகள் வீக்கமாகி விடும். அப்புறம் அது எடுத்துத் தள்ள முடியாதபடி அந்த வால்வுகள் கெட்டுப் போகும்... இருதய சம்பந்தப்பட்ட நோய் வரும்.

நாம் தவறு செய்யாமலே இப்படி எல்லாம் வரும்.

பெண்கள் நிறையப் பேருக்கு இருதய வலி உண்டு...! நெஞ்சு வலி நெஞ்சு வலி என்று இருதயங்களில் இரத்த வால்வுகளில் பலவீனம் அடையப்படும் போது அது சரியாக வேலை செய்யாது.

1.டாக்டரிடம் சென்றால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பார்
2.படி மேல் ஏறினால் மூச்சுத் திணறலாகும்... அது ஆகும்... இது ஆகும்...! என்று பயத்தை ஊட்டிவிடுவார்கள்.

இந்த எண்ணங்களைக் கொஞ்சம் வேகமாக எண்ணினால் “இப்படி ஆகிவிட்டதே... பிள்ளை குட்டிகள் இருக்கின்றதே... தொழில் இருக்கிறதே...! என்று வேதனையை வளர்த்துக் கொள்கிறோம். நாம் தவறு செய்யாமலே நமக்குள் இத்தகைய எண்ணங்கள் வந்து விடுகிறது.

டாக்டர்கள் உடலை முழுமையாகப் பரிசீலனை செய்த பின்பு... ஹார்ட் அட்டாக் வரலாம்... மூளையைப் பாதிக்கும்... கை கால் வராது...! என்றெலலம் அடுக்கிக் கொண்டே போவார்கள். இந்தெந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் இல்லை என்றால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள்.

எல்லாவற்றையும் சொன்னவுடன் இன்னும் கொஞ்சம் வேகமாக அதை வளர்க்க ஆரம்பித்துவிடுவோம்.

உதாரணமாக இது எதுவுமே தெரியவில்லை... டாக்டரிடம் செல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். உடலில் மேல் வலி..! கிறு...கிறு... இருக்கிறது என்று சொல்லி சுக்கையோ மிளகையோ எதையாவது எடுத்துச் சாப்பிட்டு விட்டு ஒரு சிலர் பேசாமல் இருப்பார்கள்.

ஆனால் டாக்டரிடம் சென்று இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த பின் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது... படி மீது ஏறினால் இன்னும் பாதிக்கும் என்று சொன்னால் போதும்.

1.முதலில் சிறிதளவு அதிகமாக இருந்த இரத்த அழுத்தத்தை “இரண்டு பங்காக்கி விடும்...”
2.200... 250க்கு மேல் சென்றுவிடும்... அதற்குப் பின் அவர்கள் சொல்லும் மருத்துவத்தைச் செய்யாமல் இருக்க முடியாது.
3.நம் எண்ணங்கள் பலவீனம் அடைந்தால் இது எல்லாம் ஆகத்தான் செய்யும்.

இப்படித்தான் நம்மை அறியாமல் நம் ஆன்மாவில் எத்தனையோ அழுக்குகள் சேர்கிறது. இதை நாம் துடைக்க வேண்டுமல்லவா... துடைப்பதற்கு என்ன வழி வைத்திருக்கின்றோம்...?

ஆறாவது அறிவைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தான் இங்கே உபதேச வாயிலாக அந்த ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).

யாம் உபதேசிக்கும் இந்த அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பெருகப் பெருக மன பலமும் உடல் நலமும் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானமும் பெருகும். நோய் வராது தடுக்கவும் முடியும்.