தியான நிலை பெறுங்கள்.. நல் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்… என்றெல்லாம் வழிப்படுத்துகின்றோம். அந்த நிலையில் நம் எண்ணக் கலவை வழிப்படுத்திக் கொண்டு வரும் நிலையில்
1.நம்மை அறியாமல் பிறர் செய்யும்
2.அவர் எடுத்த அமில குணத்தை ஒத்த அலைகள் நம்மை மோதுண்ட நிலையில்
3.அதே சமயத்தில் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது
4.இவரின் நிலையான அமில மோதலின் நிலையால்
5.பல நாட்கள் நாம் நம்முடன் மோதுண்ட அலைகளை அடக்கிப் பழக்கப்பட்ட நிலையில்
6.மற்றோரின் சொல்லிலிருந்து வெளிப்படும் எந்தக் குண எதிர்நிலை மோதலும் நம்மைச் சாடி
7.”அதே உணர்வுடனே நம்மையும் பேசச் செய்யும்…!”
நாம் பெற்ற ஜெபத்தின் வலு என்ன ஆயிற்று…? எங்கே போனது…?
முதலில் நம் நிலையில் பிறரின் சொல் எண்ணத்தைக் கொண்ட அமிலத்திற்கு அடிபணியலாகாது. பல நாள் நமக்குகந்த குணமுடன் வாழ்ந்த நிலையில்
1.ஒருவர் வந்து மற்றொருவரின் மேல் சொல்லப்படும்
2.எந்த நிலை கொண்ட சொல்லின் அமிலங்கள் நம்மிடம் சொல்லும் பொழுதும்
3.நாம் அவர் சொல்லும் நிலையை வைத்து… “நம் எண்ணத்தைச் சிதறவிடலாகாது…!” (இது முக்கியம்)
ஆத்ம ஞானம் பெறும் வழித் தொடரில் பல நிலைகள் உள்ளன.
ஒவ்வொரு தடவை நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலை கொண்டு “அதன் எண்ணத்தை ஒத்த அமிலத் தன்மை உராய்ந்து கொண்டே தான் உள்ளது…” என்பதனை உணர்ந்து நம் ஆத்ம ஞானம் இருந்திடல் வேண்டும்.
தன் ஆத்மாவுக்குகந்த உயர் ஞானத்தைப் பெற இன்றைய கலியில் உள்ள ஆத்மாக்களில் வழி பெறும் பக்குவம் இந்த நாகரீக உலகில் மிகவும் குறைந்து விட்டது. இன்று உணர்த்தப்படும் முறையும் ஏற்கப்படும் வடிவிலில்லை.
1.தன் உண்மை நிலையைத் தான் உணர்ந்தால்
2.தன் உயிராத்மாவின் நிலை உயரும்… ஒளிரும்…! என்ற வழித் தொடர் பெற்றே ஜெப நிலை கொள்ளுங்கள்.