பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ குழந்தைகளை அனுப்புகிறோம் என்றால் ஆயிரக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்... டாக்டருக்கோ இஞ்சினியருக்கோ என்றால் இலட்சக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்.
தாய் தந்தையர்கள் எப்படியோ அந்தப் பணத்தைக் கட்டிப் படிக்க வைத்து “பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும்...” என்ற நிலையில் வீடு வாசல் எல்லாம் வைத்துச் சம்பாரித்து வைத்திருந்தாலும் அதை ஒத்திக்குக் கொடுத்தோ அல்லது விற்றோ தன் பிள்ளைகளை வளர்க்க விரும்புகின்றார்கள்.
ஆனால் டாக்டருக்குப் படிக்கப் போகும் போது பெயிலாகி விட்டான் என்றால் ஐயோ... இவ்வளவு பணம் கொடுத்துப் படிக்க வைத்தேனே... இந்த மாதிரி ஆகி விட்டானே...! தாய் தந்தை வேதனைப்படுகிறார்கள்.
இருபது இலட்சம் ஐம்பது இலட்சம் கொடுத்து டாக்டர் படிப்புக்குச் சேர்த்த பின் தன் பையன் உயர்ந்தவனாக இருப்பான் எதிர்காலத்தில் நன்றாக இருப்பான் நன்றாகச் சம்பாரிப்பான் என்று தாய் தந்தையர் நினைக்கின்றார்கள்.
1.ஆனால் அவன் அங்கே கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுத்தனமாகச் சுற்றுவதும்
2.அங்கே எதாவது பிரச்சினை என்றால் ஸ்ட்ரைக் செய்வதும்
3.அங்கே நல்ல ஒழுக்கங்கள் இல்லாதபடி என்னென்ன கெட்ட பழக்கங்கள் வளர வேண்டுமோ
4.அதை எல்லாம் கற்றுக் கொண்டு வந்து விடுவான்.
பல இலட்சம் கொடுத்துப் படிக்கப் போவோர் நல்ல பழக்கங்கள் அங்கே பெரும்பகுதி இருப்பதில்லை. தன் விருபத்தின்படி அங்கே நடப்பதும் ஏம்ப்பா இப்படிச் செய்கிறாய்...? என்று தட்டிக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்...? அறிவு கெட்டதனமாகக் கேட்கிறாய்..? என்று தாய் தந்தையரைக் கேட்பதற்கு வந்துவிடுகின்றனர்.
இப்படித் தான் தாய் தந்தையரை ஏசவும் பேசவும் போன்ற நிலைகளுக்குப் பிள்ளைகள் ஆளாக்குகின்றனர். ஆனால் இதைக் கண்டு வேதனைப்பட்டு இறந்து போன பிற்பாடு அவர்கள் ஆன்மா எங்கே போகும்...?
விஷத்தின் தன்மை எல்லை கடந்து சென்று பாம்பாகவோ தேளாகவோ தான் பிறக்க நேரும்.
1.என் பையன் இப்படிச் செய்துவிட்டானே... பேசுகின்றானே...! என்ற
2.சாப அலைகளுடன் அந்த எண்ண அலைகளப் பரப்பினால்
3.பையன் டாக்டராக ஆனாலும் கைராசி டாக்டராக இருக்க முடியாது...
4.அவன் பார்க்கும் வைத்தியங்களும் சீராக வராது.. பின் ஒன்றும் செய்ய முடியாது.
ஏனென்றால் தாய் தந்தையரின் “அருள் வாக்கு” இல்லை என்றால் அதைத் தெளிவாகச் செயல்படுத்த முடியாது.
ஒரு இஞ்சினியருக்குப் படிக்க வைக்க எத்தனையோ இலஞ்சம் கொடுத்து அல்லும் பகலும் பாடுபட்டு பட்டினியாக இருந்து இஞ்சினியராகப் படிக்க வைத்த பின் பையன் எல்லாவற்றையும் கற்று உணர்ந்து கொள்வார்.
ஆனால் அதே சமயத்தில் தன் உணர்வின் தன்மையைச் சீராக்காதபடித் தன்னுடைய இஷ்டத்திற்குப் பல நிலைகளைச் செய்வார்.
அதைக் கண்டு தாய் தந்தையர் வேதனைப்படும் போது இந்தத் தீய வினைகள் இவருக்குள் சேர்ந்து அதே தீய வினையால அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை கூட வருகிறது.
1.தன் பையனை எண்ணி வேதனையைச் சேர்த்து உடல் உணர்வுகள் அனைத்திலும் நஞ்சு கலந்து
2.அடுத்து இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த நஞ்சையே அங்கேயும் உருவாக்கி
3.புகுந்த உடலையும் நோயாக்கி அவரையும் விழுத்தாட்டி விடும்.
எந்தப் பையன் தாய் தந்தையருக்குத் துரோகம் செய்தானோ... சொன்னபடி கேட்கவில்லையோ... அதே எண்ணத்தில் போனால் பையன் உடலுக்குள் ஆன்மா போய்விடும்.
அல்லது... குடும்பத்தில் பையன் திருமணமாகிப் போனாலும்
1.“இப்படிச் செய்கின்றானே...” என்ற எண்ணத்தில் தாய் தந்தையர் ஆன்மா பிரிந்தால்
2.அந்த உணர்வுகள் பாய்ந்து... எவ்வளவு பொருள் ஈட்டினாலும் பையனை வாழ விடாத நிலைகள் ஆக்கிவிடும்.
அல்லது... பையன் திருமணமான பின் சம்பாரித்துச் செல்வச் செழிப்போடு இருந்தாலும் அவன் மனைவி கர்ப்பமுற்றிருக்கும் போது அவன் தாய் தந்தையர் எங்களை எப்படி எல்லாம் செய்தாய்...! இடைஞ்சல் செய்துவிட்டு இன்று இப்படி இருக்கின்றாயே...! என்று எண்ணினால் போதும்
1.கர்ப்பமுற்ற தாய்க்கு இந்த உணர்வுகள் சாடப்படும் போது
2.அந்தக் குழந்தைகளின் நிலை சூனியமாகிவிடும்... அறிவற்றதாகவும் வளர்வதைக் காணலாம்.
இதைப் போல் மனிதர்களுக்குள் ஒன்றுக்கொன்று சந்தர்ப்பபேதத்தால் ஏற்படும் நிலைகளால் பல தீய விளைவுகளாகி அவர்கள் எதிர்காலமே இருள் சூழ்ந்த நிலைகளாகி மனித நினைவே இழந்திடும் நிலை வருகிறது.
இதை எல்லாம் அகற்றுவதற்குத்தான் “விநாயகர் சதுர்த்தி” என்று வைத்தார்கள் ஞானிகள். பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று “அருள் ஞானம் பெற வேண்டும்...” என்று தாய் தந்தையர் அன்றைக்கு எண்ண வேண்டும்.
தன் பிள்ளைகள் “இப்படி இருக்கிறார்களே... உன்னை நான் வணங்கினேனே...!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் அந்த வேதனை தான் வளரும்.
ஆகையினாலே
1.பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும்.
2.மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.
பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்...?
எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.
குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் மேலே சொன்ன பகைமைகள் உண்டானாலும்
1.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
2.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.
பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.
அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.
1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.
காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.
நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.
1.களிமண்ணால் செய்த விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்...!
ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தீய வினைகளைக் கரைக்கலாம்.