1.விபூதி வாசனை
2.எலுமிச்சை வாசனை
3.முருக்கு வாசனை
4.இந்தப் பொருள்களே அருகில் இல்லாமல் உங்களுக்கு
வாசனை வருகிறது என்றால் ஞானகுரு (சாமிகள்) அங்கே இருக்கிறார் என்று உணரலாம்.
சீராகத் தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும்
போதும் அல்லது மிகவும் இக்கட்டான நேரத்தில் அதிலிருந்து விடுபட வலுவான எண்ணத்துடன்
குருநாதரை நினைத்து அருள் உணர்வைச் சுவாசிக்கும் போதும் இந்த வாசனைகள் நிச்சயம் வரும்.
எனக்கு விபூதி வாசனையும் எலுமிச்சை வாசனையும் திருநெல்வேலி
- வள்ளியூருக்கு அருகில் மலை மீது உள்ள “நம்பி கோவிலில்” அகஸ்தியரை எண்ணித் தியானிக்கும்
பொழுது தான் வர ஆரம்பித்தது. அது எப்படி வந்தது என்றால்…
1.அங்கே தான் ஞானகுரு முதன் முதலாக (1988ல் எனக்கு)
2.”பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரின்
உணர்வை…!”
3.தியானத்தின் மூலமாக ஆழமாகப் பதிவாக்கி அதைப் பெறும்படியும்
செய்தார்.
4.(குபு… குபு… என்று விபூதி வாசனையும் எலுமிச்சை
வாசனையும் மூச்சு முட்டும் அளவிற்கு வந்தது. ஒரு பத்துப் பதினைந்து நிமிடம் இருக்கும்)
தியானத்தில்
சாமிகள் சொன்னது:-
1.இந்தப் பகுதி எல்லாம் அகஸ்தியன் வந்து சென்ற இடம்…!
அவன் காலடி பட்ட இடம்.
2.ஆகவே அகஸ்தியன் வாழ்ந்த அக்காலத்திற்கு உங்கள்
கண்ணின் நினைவாற்றலைக் கொண்டு செல்லுங்கள்
3,அகஸ்தியன் பெற்ற நஞ்சை வென்று ஒளியாக மாற்றிய
பச்சிலை வாசனைகளும் மூலிகை மணங்களும் அருள் தாவர இனச் சத்துக்களும் நாங்கள் பெற அருள்வாய்
ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள் என்று
சொன்னார்.
4.ஒரு அரை மணி நேரம் தியானம் நடந்திருக்கும்.
தியானம் முடிந்ததும் என்னிடம் குருநாதர் கேட்டார்.
வாசனைகளாக வந்தது என்று கூறினேன்.
இதற்குப் பின் பெரும்பகுதி வருடம் தோறும் மார்கழி
(நவம்பர் டிசம்பர்) மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னாடி குறைந்தது ஒரு மாதம் அளவிற்கு
இன்னதென்று சொல்ல முடியாதபடியாக மூலிகை வாசனை போன்று விட்டு விட்டு வந்து கொண்டே இருக்கும்.
எங்கே… எந்த நிலையில்… இருந்தாலும் வரும்.
வருடம் தோறும் குறிப்பிட்ட அதே காலத்தில் வரும்.
அந்தச் சமயத்தில் இரவு நேரத்தில் 7 மணி அளவில் வட கிழக்குத் திசையில் சப்தரிஷி மண்டலம்
உதயமாவதைப் பார்க்கலாம்
வாசனை வந்தபின் நான் மாதத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும்
பார்த்துத் தெரிந்து கொள்வேன். 2018ல் இப்பொழுதும் இன்றும் வாசனை வந்து கொண்டுள்ளது.
இது என்னுடைய அனுபவம்.