உங்களை அறியாமலே சந்தர்ப்பவசத்தால் கொஞ்சம் சோர்வடைந்திருந்தால் என்ன நடக்கின்றது...?
அடுத்தவர்களை எண்ணி “இப்படிப் பேசுகிறானே... அப்படிப் பேசினானே...! என்று இதை எல்லாம்
எண்ணி வளர்த்துக் கொள்வோம்.
1.அப்புறம் எத்தனை நல்லது சொன்னாலும் கேட்கவிடாது.
2.சங்கடமும் சலிப்பும் வெறுப்பும் எடுத்துக் கொண்டால் நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள்
நல்லதை நினைக்க விடாது.
3.நல்லதைச் செய்யவும் விடாது. நல்ல சொல்லும் வராது. பார்வையிலும் சோர்வு இருக்கும்.
யாரைப் பார்த்தாலும் சோர்வுடனே பார்ப்போம். சோர்வுடன் வேலையைச் சொல்லும் பொழுது
நம்மிடம் வேலை செய்பவர்களையும் பலவீனப்படுத்தும்.
ஏனென்றால் இவைகள் எல்லாம்
1.இயற்கையின் செயலாக அந்த உணர்விற்குத்தக்க அது அது இயக்கும்.
2.அந்த உணர்விற்குத் தக்க தான் அவர்கள் வாழ்ககையும்
3.அந்த உணர்விற்குத்தக்க தான் நம் தொழிலும் இருக்கும்.
3.இதற்குக் காரணம் நாம் அல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் நம்மை
இயக்குகின்றது.
உதாரணமாக சும்மா ரோட்டில் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு விஷச் செடியில்
இருந்து வெளிப்படும் மணங்கள் அங்கே பரவிக் கொண்டு வருகிறது.
நமக்கு முன்னாடி நடந்து போனவர்களுக்கு ஒன்றும் இல்லை. நாம் பின்னால் போகிறோம்.
அந்தக் காற்று நம் மீது பட்டவுடனே நமக்கு எதிர் நிலையாகின்றது. மேலே பட்டவுடனே அரிப்பாகின்றது.
உடலிலே தடிப்பாகின்றது.
என்ன என்றே தெரியவில்லை...! நான் ஒன்றுமே செய்யவில்லை. ரோட்டில் தான் நடந்து வந்தேன்.
எனக்கு அரிப்பாகி உடலில் தடிப்பாகிவிட்டது என்பார்கள். இதெல்லாம் காற்றலைகளில் இருந்து
நமக்குள் வருவது.
அதே சமயத்தில் இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட சில கெமிக்கல் கலந்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால்
கவரப்பட்டு அலைகளாக மாறி அதுவும் படர்ந்து கொண்டே இருக்கின்றது.
ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் மாறி மாறி வெளிப்படுத்தும் பல கெமிக்கல் கலந்த
அலைகளின் தொகுப்புகள் ஒன்றைக் கண்டு மற்றது அஞ்சி ஓடி இப்படி ஒன்றோடு ஒன்று மோதி வேகத்
துடிப்பு அதிகமாகும்.
அது அடுக்கடுக்காக வரப்போகும் போது அந்தப் பக்கமாகச் சென்றால் யார் உடலில் இது
அதிகமாகப் படுகிறதோ சுவாசித்த பின்
1.எனக்கு எப்படியோ மயக்கம் வருகிறது.. என் சிந்தனை எல்லாம் குறைகின்றது...! என்றெல்லாம்
சொல்வார்கள்.
2.அந்த நேரத்தில் சுவாசித்த உணர்வுகளால் உடலில் நோயாகும் வாய்ப்பும் உருவாகின்றது.
3.ஏனென்றால் இன்று நம்முடைய காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மை அதிகமாகப் பரவி இருக்கிறது.
இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நமக்குள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் நாம் வீட்டை
விட்டுக் கிளம்பும் போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும். அது
எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணிவிட்டுத் தான் செல்ல வேண்டும்.
இந்த உபதேசத்தின் மூலம் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தை
எண்ணி ஒரு ஐந்து நிமிடம் அந்தச் சக்திகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐந்து நிமிடம் எடுத்து கொண்ட பின் அந்தச் சக்தி தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
என்று எண்ண வேண்டும்.
இதே மாதிரி மனைவியும் தன் கணவர் வெளியில் போகிறார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி அவர் உடல் முழுவதும் படர வேண்டும். அவரைப் பார்ப்போர் அனைவரும் நலமும்
வளமும் பெற வேண்டும் என்று எண்ணி இந்த வலுவைக் கணவருக்குப் பாய்ச்ச வேண்டும். இத்தகைய
வலு இருக்கும் போது மற்ற தீமைகளை விலக்கித் (REMOTE) தள்ளிக் கொண்டேயிருக்கும்.
ஆனால் நீங்கள் சோர்வாகப் போய்ப் பாருங்கள். நடந்து போகப் போக சோர்வு அதிகமாகும்.
1.மனக் கவலையுடன் இருந்தீர்கள் என்றால் உங்கள் காரியங்கள் தடைப்படும் நிலையாகிவிடும்.
2.நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் – “நம் சொல்லே...!” நமக்கு எதிர் நிலையாக வரக்கூடிய
தன்மையிலே வரும்.
இதைப்போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு அந்தத் துருவ
நட்சத்ததிரத்தின் சக்தியை அதிக அளவில் கொடுக்கிறோம். அதை நீங்கள் எடுத்து வளர்கக வேண்டும்.
ஒரு விதையைக் கொடுத்து வயலில் விதைத்து விளைவிக்கச் சொல்கிறோம். அந்த விதைக்குத்
தக்கவாறு இன்னென்ன காலத்தில் இன்னென்ன பருவத்தில் இப்படிச் செய்...! என்று சொன்ன பிற்பாடு
அதே முறைப்படி செய்தோம் என்றால் நன்றாக வெள்ளாமை வரும்.
இதைப் போன்று தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞான வித்தைக் கூர்மையாக உங்களுக்குள்
ஊழ்வினையாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
பதிவான பின் வாழ்க்கையில் சிக்கல் வரும் பொழுதெல்லாம் அந்த ஞானிகளின் எண்ணங்களை
எடுத்து எடுத்து அந்தப் பருவத்தினை ஏற்படுத்தினால் அது உங்களுக்குள் வளர்ந்து கொண்டே
இருக்கும். சாப்பாடு கிடைத்துக் கொண்டே இருக்கும்.
வெளியில் போகும் போதும் வியாபாரம் செய்யும் போதும் இரவிலே தூங்கப் போகும் எத்தனையோ
பல தீமைகளைப் பார்க்கின்றீர்கள். அந்தத் தீமைகள் உங்களைச் சேராமல் அவ்வப்பொழுது அதைத்
துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் உண்மையான தியானம்.
1.அது இல்லாதபடி... உட்கார்ந்து கொண்டு...!
2.”விடிய விடிய நான் தியானம் எடுப்பேன்...!” என்று சொன்னால் அது அர்த்தமில்லாத
தியானம்
3.ஆகையினால் ஒவ்வொருவரும் இங்கே கொடுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை விரயம்
ஆக்காது செயல்படுத்த வேண்டும்.