ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2018

எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும் தீமைகள் நமக்குள் எப்படிப் புகுகின்றது...?


1.நம் வாழ்க்கையிலும் சரி... உடலுக்குள்ளும் சரி...!
2.குறைகள் எத்தனையோ வகையில் வருகின்றது.
3.ஆனால் நமக்கு அது தெரிவதில்லை.

ஏனென்றால் நாம் ரோட்டிலே நடந்து சென்றாலும் காற்றில் வரும் எத்தனையோ அசுத்தங்களை நுகர நேர்கின்றது.

உதாரணமாக ஒரு இடத்தில் அசூசையாக (அசுத்தமான) இருந்தால் அதன் மீது சூரிய ஒளிக்கதிர் தாக்கப்பட்டு அதிலுள்ள நாற்றத்தை அந்தச் சூரியனின் ஒளிக் கதிரில் உள்ள காந்தம் கவர்ந்து கொள்கின்றது. அலைகளாக மாற்றுகின்றது.

அந்த அலைகள் அங்கிருந்து தொடர்ந்து அது காற்றாக வரப்படும் போது சந்தர்ப்பத்தால் ரோட்டிலே நாம் செல்லும் பொழுது அதை நுகர்ந்து விட்டால் நமக்குள் நாற்றம் உட்புகுந்து விடுகின்றது. (ஆனால் நாம் தவறு செய்யவில்லை)

அது தீமையின் நிலைகளாக விளைந்திருந்தால் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அது அணுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது. அணுவான பின் மீண்டும் அதை நுகரும் ஆற்றல் பெற்று நுகரத் தொடங்கி விட்டால் என்ன ஆகின்றது...?
1.நம்மை அறியாமலே அந்தத் தீய எண்ணங்கள் வருவதும்
2.தீய உணர்வு கொண்டு தீய செயல்களைச் செயல்படுத்தும் உணர்வாகவும் எத்தனையோ மாறும் நிலைகளாக வருகின்றது.
3.நாம் தவறு செய்யாமலேயே இத்தகைய நிலைகள் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் அறியாது புகும் தீமைகளிலிருந்து நம்மை மீட்டிட அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து வலுவாக்கிக் கொண்டு தீமைகளை அடக்கிட வேண்டும்.

ஓர் குழம்பை வைக்கிறோம் என்றால் காரம் புளிப்பு உப்பு என்று எல்லாவற்றையும் இணைத்துச் சம அளவுடன் செயல்படுத்தும் பொழுது தான் சுவை வருகின்றது. ஒன்று கூடிவிட்டாலோ குழம்பின்  சுவையை மாற்றி விடுகின்றது. சாப்பிட முடிவதில்லை.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையிலும் சந்தர்ப்பத்தில் சில குறைபாடுகள் வந்தாலும் அதைச் சமப்படுத்தும் உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்.

அப்படிச் சுவை மிக்க நிலைகளை உருவாக்கியவர்கள் மெய் ஞானிகள். வெறும் சொல்லால் அல்ல. சொல்லும் செயலும் ஒன்றாக இணைத்து வாழ்ந்தவர்கள் அவர்கள். எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றும் திறன் பெற்றவர்கள் அந்த மெய் ஞானிகள்.

அந்த மகா ஞானிகளின் உடலில் விளைந்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்றும் நம் பூமியில் அலைகளாகப் பரவி உள்ளது.

அந்த மகா ஞானிகளின் உணர்வலைகளைப் பெறுவதற்கே இதை யாம் (ஞானகுரு) உபதேசமாகக் கொடுக்கின்றோம். அருள் ஞானிகளின் உணர்வை உபதேசிக்கும் போது இதைப் படித்துணரும் உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இருந்தால் ஞானிகளின் அருள் வித்துகள் ஆழமாக உங்களுக்குள் பதிவாகின்றது.

அந்தப் பதிவை மீண்டும் நினைவு கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் அல்லது உங்கள் குடும்பத்தில் சிறு குறைகள் ஏற்பட்டாலும் அந்தக் குறைகள் வளராது அதை அடக்கி தன்னுடன் இணைத்துப் பகைமையற்ற நிலைகளாக உருவாக்க இது உதவும். நமக்குள் பேரின்பத்தை ஊட்ட இது உதவும்.