ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2018

தமிழ் மொழியின் பாரம்பரியம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...!


வேதங்களில் அதர்வண என்ற நிலைகளை எடுத்துக் கொண்டோம் என்றால் அது...
1.அடக்கி விட்டது...
2.அடங்கி விட்டது...
3.ஒடுங்கி விட்டது...! என்று பொருள். அது தான் அதர்வண என்பது.

சாம என்பது இசை. மணம் குணம் இத்தனையும் இதில் அடங்குகின்றது. இதைப் பொதுச் சொல்லாக வைத்துத் தான் அன்று ஆதிகாலத் தமிழில் காட்டினார்கள்.

முந்தைய தமிழை எடுத்தோம் என்றால் இப்படித்தான் இருக்கும். இன்று சொல்வது போல சமஸ்கிருதம் அல்ல. இது மறைக்கப்பட்ட உண்மைகள். மறைக்கப்பட்டு விட்டது.

இன்றைக்கு எதிலே வேண்டும் என்றாலும் பாருங்கள். சமஸ்கிருத ஏடுகளைச் சொல்லும் போது தமிழில் பேசுகிற மாதிரியே இருக்கும்.

அதிலே சில ஒலிகளை மாற்றிக் கொண்டார்கள். நமக்கு அர்த்தம் புரியாது. கேட்டால் இது “தேவநாகரி...” சக்தி...! என்று இன்றைக்குச் சொல்வார்கள். ஏனென்றால் யாம் யாரையும் குறை கூற வரவில்லை.

இது அரசர்களால் மறைக்கப்பட்ட பேருண்மைகள். இவர்கள் சில ஒலிகளை மாற்றி இதனுடன் இணைக்கப்படும் போது மாறுபடுகின்றது. இயற்கையில் உள்ள தமிழுக்கும் மற்றதுக்கும் மாறிவிடுகின்றது.

இன்றும் கூட
1.சமஸ்கிருதம் கற்றுக் கொண்டவர்கள் எழுதக்கூடிய தமிழுக்கும்
2.தமிழ் இலக்கணம் படித்தவர்கள் எழுதும் தமிழுக்கும்
3.சாதாரணமாகப் படித்தவர்கள் எழுதும் தமிழுக்கும் வித்தியாசம் அதிகமாகப் பார்க்கலாம்.
4.அதனுடைய சொல் வடிவுகள் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

இதைப்போலத் தான் அன்றைய மெய் ஞானிகள் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகள் முழுமையான எழுத்து வடிவிற்குப் பின்னாடி தான் வந்தது.

அந்தந்த உணர்வின் உணர்ச்சிகளின் இயக்கங்கள் இப்படிப்பட்ட வடிவில் தான் இருக்கும் என்ற நிலைகளை முழுமையாக உணர்ந்தவர்கள் நான்கு வேதங்களுக்கும் பெயரை வைத்தார்கள்.

ஆனால் வியாசகர் கொடுத்த அந்த வேதங்களில் உள்ள மூலங்களையும் அதனின் உண்மைகளையும் நுகர முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள் அரசர்கள்.

1.எதை அதிகமாக நுகர்ந்தோமோ அதனின் கணக்கின் பிரகாரம் தான்
2.”அடுத்த உடலின் ரூபம் அமைகின்றதுஎன்பதே வேதங்களில் காட்டப்பட்ட உண்மை.

வேதங்கள் என்று சொல்வது அன்று சாஸ்திரங்களில் தமிழ் சித்தாந்தம் வழி சைவ சித்தாந்தத்தின் தன்மை தான் அங்கே உருவாக்கப்பட்டது. பின் வேதங்கள் என்ற நிலைகள் உருமாற்றப்பட்டது.

ஏனென்றால் “சைவ சித்தாந்தம்...” என்பது அகஸ்தியனால் வெளியிடப்பட்டது.

அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டதை இவர்கள் வேதங்களாக இதே தமிழ் மொழியைத்தான் வடிவமைக்கும் தன்மைகள் மாற்றி ஒலியின் தன்மையை மாற்றி வேறு ஒரு ரூபத்தில் அலைகளாக மாற்றினார்கள்,

அகஸ்தியனால் வெளிப்படுத்தப்பட்ட அந்தச் சைவ சித்தாந்தத்தின் பேருண்மைகள் இன்றும் அழியாத வண்னம் நம் பூமியில் படர்ந்திருக்கின்றது. பிரபஞ்சத்திலும் படர்ந்துள்ளது.

அகஸ்திய மாமகரிஷி காட்டிய அருள் வழியில் அதை எல்லாம் நமக்குள் சேர்த்து விண்ணில் உருப்பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் கவர்ந்து உயிராத்மாவை ஒளியின் சுடராக மாற்றிடல் வேண்டும்.