ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 30, 2018

துருவ நட்சத்திரத்தின் ஆயுள்கால மெம்பராகச் சேர்ந்தவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும்…?


சலிப்போ சங்கடமோ வேதனையோ வெறுப்போ வந்தால் அல்லது  இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் அதை நாம் பார்க்க நேருகிறது என்றால் உடனே நேரம் நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு பேர் ரோட்டில் சண்டை போடுகிறார்கள். ஒருவன் அடிக்கிறான். அடுத்தவன் ஐய்யய்யோ… அம்மா…! என்று அலறுகிறான். அந்தப் பாவிப்பயல் இவனைப் போட்டு இப்படி அடிக்கிறானே…! என்று அந்த உணர்வுகள் உடனே நம்மைப் பேச வைக்கிறது.
1.நாம் பேசுகிறோமா…? நாம் பேசவில்லை…!
2.அந்த உணர்வு தான் நம்மைப் பேச வைக்கிறது.

அதே சமயம் எதிரி ஒருவன் நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் இப்படி அடி வாங்கிக் கொண்டிருந்தால் என்ன சொல்வோம்…?
1.அவனை அடித்தது சரிதான்…!
2.இன்னும் இரண்டு கொடுக்க வேண்டும்…! என்போம்.

இரண்டு பேர் பேசுகிறார்கள் என்றால் அந்த உணர்வை நாம் ஏற்றுக் கொண்ட பின் ஒருவன் இன்னொருவனைத் துரத்திக் கொண்டு சென்று அடித்தால்
1.தொழிலில் இவன் ஏதோ குறும்புத்தனம் செய்திருக்கிறான் அதனால் தான் அடிக்கிறான்…! என்போம்.
2.அப்போது அடிப்பதைக் கண்டு ரசிக்கிறோம்.

இந்த உணர்வுகள் எங்கே கொண்டு போகிறது…? இந்த உணர்வுகொப்ப அடிப்பதை ரசிக்கின்றது…!

ஆனால் பரிவு கொண்ட மனம் கொண்டவனை அடித்தவுடனே வேதனை என்ற உணர்வை நாம் நுகர்கின்றோம். ஆகவே இந்த நல்ல குணங்கள் “இரண்டு தரத்திலும் கொல்லும்…!” சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா…?

நல்ல எண்ணம் கொண்டு பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைத்தான் குருநாதர் என்னைக் காட்டுக்குள் அனுப்பி ஒவ்வொரு நிமிடமும் அறியச் செய்தார்.

1.நாட்டுக்குள் போகும் போது மனித உணர்வுகள் எப்படி இருக்கின்றன…?
2.அந்த உணர்விலிருந்து நீ தப்ப வேண்டுமல்லவா…? என்று
3.அவரைப் போலவே பைத்தியக்காரன் மாதிரி வேஷ்டியைக் கிழிக்க வைத்துச் சில நேரங்களில் போகச் சொல்லுவார்.

முதலில் என்னை சூட் (SUIT) போட்டுக் கொண்டு போடா… என்று சொன்னார். அப்புறம் வேஷ்டியைக் கிழித்துக் கொண்டு போடா… என்று சொன்னார். இதையும் போடச் சொல்லுகிறார். அதையும் போடச் சொல்லுகிறார்.

சூட்டைப் போடுடா…! என்கிறார். நான் (ஞானகுரு) வேண்டாம்… வேண்டாம்…! என்கிறேன்.

கிழிந்த வேஷ்டியைக் கட்டிக் கொண்டு போடா…! என்கிறார். கிழிந்த வேஷ்டியைக் கட்டிய பின் பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

சூட்டைப் போட்டு அதிகாரத்தின் துணை கொண்டு போனால் நீ அஞ்சி… அடுத்தவனையும் அஞ்சச் செய்யும் உணர்வைத் தான் நீ எடுப்பாய். ஆனால்
1.கிழிந்த உடையில் போகும்போது யாரும் உன்னைக் கவனிக்க மாட்டான்...!
2.இந்த உணர்வின் தன்மை வரும் போது… “அவன் உணர்வை நீ அறிய முடியும்…!” என்றார்.

CIDஆக வருபவர்கள் என்ன செய்கிறார்கள்…? பிச்சைக்காரன் மாதிரி உடையணிந்து வந்து ரகசியங்களை எல்லாம் அறிந்து சொல்கின்றனர். இதே மாதிரித் தான் இந்த உணர்வின் இயக்கங்கள்…! என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஆகவே நீ எப்படி இருக்க வேண்டும்…? ஆனால் மற்றதை நீ நுகர்ந்தாலும் அதை நுகர்வதற்கு முன் நீ என்ன செய்ய வேண்டும்…? என்று வினா எழுப்பினார் குருநாதர்.

1.முதலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உனக்குள் வலு ஏற்றிக்கொள்.
2.அந்த வலுவான நிலைகளை ஏற்றுக் கொண்ட பின் தவறு செய்பவர்களை உற்றுப் பார்.
3.உற்றுப் பார்க்கும் போது அதிலுள்ள உணர்வுகளைப் பிரித்து நன்மை தீமைகளைக் காட்டும்.
4.தவறு என்று தெரிந்தால் மறுபடியும் “ஈஸ்வரா…!”என்று புருவ மத்தியில் எண்ணி அதை உள்ளுக்குள் போக விடாது நிறுத்திப் பழகு.

நிறுத்திய பின் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர். அப்பொழுது…
1.அருள் ஒளி என்ற நிலையில் அந்த உணர்வு மகிழ்ச்சியாகிறது.
2.சூட் (SUIT) என்பதைப் பின்னாடி தான் என்ன என்று கொடுக்கிறார்.

ஏனென்றால் ஒருவன் நம்மைத் திட்டினான்… திட்டினான்…! என்ற உணர்வு நமக்குள் இருக்கும் போது அவன் நினைவு வரும்போது அமெரிக்காவிலிருந்தாலும் அது இயக்குகிறது அல்லவா…!

அதே போல் அவனுடைய உணர்வு நமக்குள் இருக்கும் போது அவனை எண்ணினால் அந்தத் தீயதின் உணர்வுகளை எடுத்து நம் நல்ல உணர்வுகளை வீழ்த்தி அதைச் சாப்பிட்டு விடுகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று எண்ணி உள்ளுக்குள் நிறுத்தி விட்டால் இங்கே தடுத்து (BANDH) விடுகிறது. தீமையை இழுக்கும் சக்தியை இழக்கிறது.

அந்தத் தீயதை இழுக்க முடியாமல் தடை வரும் போது கொஞ்ச நேரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழகப் பழக தீமையான உணர்வுகள் விலகிச் செல்கிறது.

நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து  தீமைகள் விலகி விட்டால் அதைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து எடுத்துக் கொள்கிறது. மறுபடியும் தன் இனமான உணர்வுகளில் கலந்து அது பிரியும்.

ஆகவே எத்தனை வகையான தீமைகளைப் பார்த்தாலும் “ஈஸ்வரா…! என்று சொல்லி
1.எங்கள் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்.
2.எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும்.
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
4.இந்த மூன்று மண்டலத்தையும் நாம் எண்ண வேண்டும்.
5.இரத்தம் ஒன்று… உடல் இரண்டு… அணுக்கள் மூன்று…. இந்த மூன்றிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலக்கப்படும் போது
6.தீமைகள் அனைத்தும் மாறி நம் உடலில் ஒளியான அணுக்களாக உருவாகும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் கால மெம்பராக இருக்கும் நீங்கள் இதை அடிக்கடி செய்து வர வேண்டும். இதை வலுவான உணர்வோடு எடுக்க வேண்டும்.

எந்தத் தீமையான உணர்வும் உங்களுக்குள் வரக்கூடாது. அருள் உணர்வு உங்களுக்குள் வளர வேண்டும். குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் அதை மாற்றிப் பழக வேண்டும். உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

ஆகவே ஆயுள்கால மெம்பர்கள் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்திரத்துடன் இணைந்து இருக்க வேண்டும்.