ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2018

அகஸ்தியனுக்குச் சர்வ வல்லமையும் எப்படிக் கிடைத்தது…?


ஆதியிலே விஷத்தின் இயக்கம் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது தோன்றும் மோதலின் தன்மையை முதன் முதலில் அறிகிறான் அகஸ்தியன். அதே சமயத்தில் நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது “உயிர் உருவானது…!” என்றும் அறிகின்றான்.

இதை எல்லாம் எப்படி அறிந்தான்..?

தாய் கருவிலேயே அவனுக்குள் விளைந்த ஆற்றல்களால் தான் அவனால் அறிய முடிந்தது. அகஸ்தியனின் தாய் பல விஷ ஜந்துகளிடமிருந்து தான் தப்பிக்கும் உபாயங்களைக் கண்டு பல விதமான பச்சிலை மூலிகைகளை உபயோகப்படுத்தியது.

பாம்பு யானை தேள் கொசு போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான மூலிகைகள் உண்டு. அதன் மணத்தைக் கண்டதும் அவைகள் எல்லாம் விலகிச் சென்றுவிடும்.

உதாரணமாக நாம் இன்று கொசுவர்த்தியைப் பொருத்தி வைக்கிறோம் என்றால் அந்த வாசனை இருக்கும் வரை அங்கே கொசு வருகிறதோ...? இல்லை. ஆனால் கொசு சாவதில்லை.

சாகும் நிலை வந்தால் என்ன ஆகும்...? நம் உடலில் கொசு கடித்து உருவான பல அணுக்கள் உண்டு. அந்த அணுக்கள் இருந்தால் விஷத்தால் அது மடியும் போது விஷமான அணுவாக நம் உடலுக்குள் மாறும். குளவி கொட்டினால் எப்படியோ அதே போல நமக்குள் மாறும்.  இயற்கையின் நியதி இது.

எப்படிப் பார்த்தாலும் இது உடலுக்குள் மாற்றும். ஆனால் அத்தகைய விஷத்தை எல்லாம் வென்றவன் எவனோ… அவன் உணர்வை எடுக்க வேண்டும்…! அதை எடுக்கத் தவறினால் நமக்குள் மாற்றம் தான் ஆகும்.

அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் மிருகங்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல விதமான பச்சிலைகளைத் தன் குகைப் பக்கம் போட்டு வைக்கின்றார்கள்.
1.இதை நுகர்ந்த மிருகங்கள் விலகிச் செல்கிறது... மடிவதில்லை…
2.அந்த விஷத்தின் ஆற்றல் தணிகிறது.

ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். (தேய்க்கக் கூட வேண்டாம்) தேளைக் கையில் விட்டால் கொட்டவே கொட்டாது. வாலை அப்படியே சுருட்டிக் கொள்ளும். ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டு சுளுக்கு எறும்பு நம் மீது ஏறினால் அது நம்மைக் கடிக்கவே கடிக்காது.

ஆனால் சும்மா இருக்கும் பொழுது சுளுக்கு எறும்பு நம்மைக் கடித்தால் கடித்த இடம் அப்படியே வீங்கிவிடும். அந்தப் பச்சிலை வாசனை இருந்தது என்றால் அது நம்மை கடிக்காது.

ஒரு நூறு சுளுக்கு எறும்பு ஒருவரைக் கடித்தால் மரணமே ஏற்படும் அபாயம் உண்டு.  விஷம் பரவி விடும். விஷத்தின் தன்மையை நாம் எண்ணும் போது மனிதன் நாம் அதற்கேற்றாற்போல் தான் அடுத்த உடலுக்குள் போகிறோம்.

இயற்கையின் நியதிகள் எத்தனையோ நிலைகளில் அதன் உணர்வுகள்  இப்படி எத்தனையோ நிலைகளில் மாறிக் கொண்டிருந்தாலும்
1.இத்தகைய விஷத் தன்மையிலிருந்து மீளும் தன்மையை
2.அகஸ்தியன் தன் தாயிடமிருந்து கருவிலேயே பெற்றதால்
3.கருவிலேயே இரத்தத்தின் வழி நுகரப்படும் போது பலவிதமான சக்திகளை அவன் பெறுகின்றான்.

பிறந்த பின் விஷத்தின் ஆற்றல் தன் அருகில் வராதபடி அதன் இயக்கத்தை உற்று நோக்கும் உணர்வும்... அதை அறியும் பருவமும்... அவனுக்கு வருகிறது.

அந்த அகஸ்தியனின் உணர்வை நாமும் பெற்றால் அவனைப் போன்ற அகண்ட அண்டத்தின் ஞானமும் ஆற்றலும் அவனுடன் இணைந்து என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ முடியும்.

அதற்காகத் தான் இதைச் சொல்கிறோம்.