வான்மீகியினுடைய உணர்வைத் தனக்குள் பதிவு செய்த காந்திஜி சாந்ந குணத்தின் வலிமை
பெற்றார். சாந்தத்தின் வலிமை கொண்டே நம் நாட்டின் சுதந்திரத்திற்காகச் செயல்பட்டார்.
எத்தகைய தீமைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபட வேண்டும். நாடு காக்கப்பட வேண்டும்.
மக்கள் காக்கப்பட வேண்டும். மனிதப் பண்புகள் வளர வேண்டும். நாட்டை ஆளும் அரசுக்குள்
பகைமை வரக் கூடாது. உயர்ந்த பண்புகளினுடைய நிலைகள் அரசியலில் வளர வேண்டும் என்று தான்
எடுத்துரைத்தார்.
1.இவரின் வலிமையான உணர்வுகள் தான் ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் எண்ணத்திற்குள்
ஊடுருவி
2.பகைமை உணர்வை மறக்கச் செய்து
3,இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.
அன்று பட்சியின் பாச உணர்வுகள் வான்மீகியின் உடலுக்குள் ஊடுருவி அந்தப் பாச உணர்ச்சியைத்
தூண்டி அவன் செய்யும் கணைகளை எய்ய முடியாது தடுத்து தவறு செய்யும் கொலைகாரனையும் கொலையற்றவனாக
மாற்றியது.
அதைப் போல இளம் வயதில் தவறான வழியில் நடந்த காந்திஜியும் சந்தர்ப்பத்தால் (தென்னாப்பிரிக்காவில்
தீமையால் வாடும் மக்களைக் கண்டபின்) வான்மீகியின் உணர்வை நுகரப்படும் பொழுது தனது உடலுக்குள்
வந்த தீமையின் விளைவிலிருந்து மீட்டினார்.
அரசியல் நிலைகளில் மக்களை வாட்டிக் கொண்டிருக்கும் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை
மீட்டிடும் உணர்வுகள் பெறவேண்டும் என்று வான்மீகியின் உணர்வுகள் கொண்டு சாந்த குணத்தின்
வலுவை ஒவ்வொருவருக்கும் உணர்த்தினார்.
1.பகைமை கொண்ட குணங்களை நாம் ஏன் வளர்க்க வேண்டும்...?
2.பண்பு கொண்ட உணர்வுகளைத்தான் வளர்க்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைத்தான் எல்லோருக்குள்ளும்
வளர்த்தார்.
இவரின் நினைவின் நிலைகள் இவ்வாறு வளர வளர ஆங்கிலேயர்களுக்கும் இதை உணரத் தொடங்கினார்கள்.
அவர்கள் இந்த யுத்தம் முடிந்தால் உனக்குச் சுதந்திரம் கொடுக்கிறேன் என்றனர். யுத்தமும்
முடிந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றது.
காந்திஜி தன்னம்பிக்கை கொண்டு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார். தன் உடலையும்
அர்ப்பணித்தார். உலகையே சிந்திக்கும்படி செய்தார்.
ஆனால் சுபாஷ் சந்திர போஸ் போர் மூலமாகத்தான் சுதந்திரம் பெற முடியும் என்று செயல்பட்டார்.
இவர் போர் முறைகள் எடுக்கப்படும் போது பிரிட்டனின் ஐந்தாம் படைகள் அவரைச் சூழ்கின்றது.
அதிலிருந்து தப்பித்து ஜப்பான் சென்றார்.
அன்று ஜப்பானும் பிரிட்டனிடம் அடிமையாக இருந்த நிலையில் அவர்களுடன் சேர்ந்து பிரிட்டனை
எதிர்த்துப் போரிட வேண்டும் என்று முயற்சித்தார்.
அந்தச் சமயத்தில் பிரிட்டனுக்கு எதிரியாக இருக்கக்கூடிய ஜெர்மனியும் அதை வரவேற்றது.
படைகளையும் ஆயுதங்களையும் கொடுத்து உதவியது. மீட்ட முடிந்ததா...? சுதந்திரம் பெற முடிந்ததா...?
என்றால் இல்லை.
இவ்வாறு சுபாஷ் சந்திர போஸ் நாட்டின் நிலைகள் வலிமை கொள்ள வேண்டும் என்று அவர்
தன் உணர்வு கொண்டு செயல்பட்டாலும்
1.காந்திஜி அவருடைய நிலைகள் திருந்த வேண்டும்...
2.பண்பு கொண்டு உணர்வுகள் அங்கே வளர வேண்டும்.
3.போர் செய்து மற்றோரை மடக்கி விடக்கூடாது.
4.போர் என்ற நிலையில் “எதிரி...” என்ற நிலையைத் தனக்குள் வளராதபடி
5.பண்பு கொண்ட.உணர்வுகள் வளர வேண்டும் என்றார்.
6.அவருடைய உணர்வின் வலிமையால் நாடு சுதந்திரம் பெற்றது.
ஆனால் அந்தச் சுதந்திரம் இன்று இருக்கிறதா...? இது அறியாத மக்கள் இன்று நாம் என்ன
செய்கின்றோம்...?
சுக போகத்தை அனுபவிக்கும் நிலைகளும் மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்யும் நிலைகளும்
உண்மையின் உணர்வுகளை உணராது மக்களின் பண்புகளை அறியாது ஞானிகள் காட்டிய பண்புகளை இழந்து
செயல்படும் நிலை தான் உள்ளது.
1.வலிமை கொண்டு மற்றோரை அடக்கி ஆட்சி புரியும் நிலையாக அன்று பிரிட்டன் எதைச் செய்ததோ
2.அதே உணர்வின் தன்மை தான் இன்று மக்கள் மத்தியில் வந்து
3.மக்கள் ஆட்சி என்ற நிலைகள் கொண்டாலும் மக்களை அடக்கும் மக்களாக வந்து
4.அசுர உணர்வு கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளது.
தன் அருகிலே இருப்பவர்களை இரக்கமற்றுப் பண்பு கெட்டவர்களாக மாற்றுகின்றோம் பண்புள்ளவராக
இருந்தாலும். பண்பு கொண்ட நிலைகளை மாற்றி விட்டுப் பகைமையை ஊட்டுகின்றோம்.
அன்று காந்திஜி எப்படி வான்மீகியின் உணர்வைத் தனக்குள் எடுத்து எதை எடுத்தாலும்
ஹரே ராம்... ஹரே ராம்...! என்றார். ராமா... ராமா... என்றால் நம்முடைய எண்ணங்கள் தான்
அவ்வாறு வருகின்றது.
ஆகவே அத்தகைய சாந்த குணங்களை நாம் சுவாசித்தோம் என்றால் சீதாராமா. இராமன் அம்பை
எய்தான் என்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். அதாவது
1.எந்த குணத்துடன் நாம் பேசுகிறோமோ
2.அந்த உணர்வே நமக்குப் பதிலாக வரும்.
3.மற்றவர்கள் உயர வேண்டும் என்ற எண்ணம் வந்தால்
4.அந்த உயரும் எண்ணமே நமக்குத் திருப்பி வரும்.
5.பண்பின் தன்மையாக அந்த பேரன்பின் தன்மை வளரும்.
ஆகவே இன்று நாம் வாழும் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து மீள காந்திஜியின் நினைவு
கொண்டு மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நாம் தியானிப்போம்...
தவமிருப்போம்...!