ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2016

சமையல் செய்யும் பொழுது, உணவு பரிமாறும் பொழுது ஆத்ம சுத்தி செய்யும் முறை

சமையல் செய்யும் பொழுதும் உணவு பரிமாறும் பொழுதும் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிட்டு ஒரு நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் சமைக்கும் உணவு முழுவதும் படர்ந்து இந்த உணவை உண்ணும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அவர்கள் அனைவரும் உடல் நலமும் மன பலமும் மன வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இந்த எண்ணத்தை ஒரு நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் நாம் சமையல் செய்யும் உணவுகளில் சுவை ஊட்டக் கூடிய நிலைகளாக ஏற்படுகின்றது. அதே சமயத்தில் உணவு உட்கொள்பவர்களிடத்தில் சாப்பிடும் உணவை நல்ல இரத்தமாக மாற்றிடும் நிலை ஏற்படுகின்றது.

அதனால் மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெற இந்தச் சந்தர்ப்பம் ஏதுவாகின்றது.