ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2016

தியானமும் ஆத்ம சுத்தியும் செய்ய வேண்டிய முறை

ஓ...ம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏக்க உணர்வுடன் ஏங்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கி இருங்கள்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவினைச் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.

இதைச் சாதாராணமாகப் பேசும் நிலைகளில் புற நிலைகளில் சொல்லாமல் (வாய் விட்டுச் சொல்லாமல்) அக நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற வலுவான எண்ணத்துடன் இழுத்துச் சுவாசித்து உங்கள் உடலுக்குள் நினைவினைச் செலுத்துங்கள்.

இரத்தத்தில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள், உடல் உறுப்புகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப உணர்வுடன் எண்ணி இழுத்துச் சுவாசித்து உங்கள் நினைவினை அலை அலையாக உள் செலுத்துங்கள்.

இப்படியே சிறிது நேரம் தியானியுங்கள்.

பின்னர் கண்களைத் திறங்கள்.

எதனை நலம் பெறவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அதனை எண்ணுங்கள்.

உங்களுக்கு எத்தகையை நோய் இருந்தாலும் உங்கள் குடும்பங்களில் எந்த வகையான இன்னல்கள் இருந்தாலும் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் மன பேதம் இருந்தாலும் தொழிகள் சீராக இயங்காமல் இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் முடக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் குழந்தைகளால் மனக் குறைகள் இருந்தாலும் புத்திர பாக்கியம் இல்லாமலிருந்தாலும் இவைகள் அனைத்தையும் உங்கள் எண்ணத்தால் மாற்றியமைக முடியும்.

மாற்றியமைப்பதற்கு மேலே சொன்ன முறைப்படி தியானித்து நீங்கள் செயல்பட வேண்டும்.

முறைப்படி தியானித்து உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உணர்வுகளுக்குள் வலுவாகப் பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பதிவின் துணை கொண்டு உங்கள் எண்ணங்கள் வலுப் பெற்று மன பலம் பெறுவீர்கள் உடல் நலம் பெறுவீர்கள் தொழில் வளம் பெறுவீர்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

உங்களையறியாது சேர்ந்த தீமையை விளைய வைக்கும் உணர்வுகளிலிருந்து விடுபட்டு மன மகிழ்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு பெற்று சொல்வாக்கு பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட முடியும்.

ஆக, வாழ்க்கையே தியானம். ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுது நம்முடைய பற்று அனைத்தும் அங்கே செல்கிறது.

நாம் உடலை விட்டுச் சென்றாலும் நம் நினைவின் ஆற்றல் அந்தத் துருவ நட்சத்திரத்திடம் ஒன்றிவிடுகின்றது. துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிவிட்டால் இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முழுமை அடைய முடியும்.