இங்கே ஆறாவது அறிவு
கொண்டு முருகன் சேனாதிபதி இந்த உடலைக் காக்கக்கூடியவன் என்று அவனைக்
காட்டுகின்றார்கள்.
அவன் சேனாதிபதி என்றால்
அவனுக்கு விரோதியாக வருபவர்களையும் தீமைகளை உருவாக்கும் அவனை பிரம்மா என்ற நிலையை
அவன் அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டான்.
யார்..,? பிரம்மாவைச் சிறைப்படுத்திவிட்டான்
சேனாதிபதி.
இந்த ஆறாவது அறிவிற்குள் நாம்
அந்த அருள் ஞானியின் உணர்வையும் இந்த வைரத்தைப் போல ஜொலிக்கும் உணர்வுகளையும் இந்தத்
தெய்வீகப் பண்புகளையும் தான் நுகர்ந்து அந்த உயிரான ஈசனிடம் இணைக்கப்படும் பொழுது “உருவாக்கும்
சக்தி பெற்றவன்”.
இந்த ஆறாவது அறிவால் தான்
கார்த்திகேயா.
இதையெல்லாம் தெரிந்து அதை
நுகர்ந்து உயிருடன் இணைத்து அதை உருவாக்கும் சக்தி பெற்றவன்.
யார்..,? இந்தச்
சேனாதிபதி.
ஏனென்றால் வரும்
தீமைகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் நிலையும், அதே சமயத்தில் அவன்
பிரம்மாவைச் சிறைப்பிடித்துவிடுகின்றான் இந்த ஆறாவது அறிவு.
தனக்குள் உருவாகும் சக்தி
உருப்பெறும் சக்தியைக் கையில் எடுத்துக் கொள்கின்றான்.
நாம் அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி பெறவேண்டும் அந்த வைரத்தைப் போல ஜோலிக்க வேண்டும், இந்தத் தங்கத்தைப்
போல என் மனது மங்காது இருக்க வேண்டும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
இந்த வலிமை மிக்க சக்தியால் எடுத்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது இது “வள்ளி”
இவ்வாறு உடலுக்குள்
சுவாசித்த பின் தெய்வ ஆணையாக இந்த உடலுக்குள் இயக்கப்படுகின்றது. இந்த உணர்வின்
தன்மையைப் பெற்று தீமைகள் தன்னை அணுகாது அந்த உணர்வின் வலிமையால் நீக்குகின்றான்
சேனாதிபதி.
எவ்வளவு தெளிவாக நம்
ஞானிகள் கொடுத்துள்ளார்கள்? நாம் உணர்ந்தோமா?
ஆகவே, காவியத்
தொகுப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பேருண்மைகளை நாம் தெரிந்து கொண்டால் இந்த
வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளையும் வராது தடுக்க முடியும்.
இதைத்தான் நம் ஆலயங்களில்
காட்டப்பட்டுள்ளது. அந்த ஞானிகள் காட்டிய முறைப்படி அந்த அருள் சக்திகளைச்
சுவாசித்தால் நாம் அந்தத் தெயவ நிலையை அடைய முடியும்.
நீ எதை எண்ணுகின்றாயோ
அதுவாக நீ ஆகின்றாய். “நீ தெய்வமாகு” என்பதே ஆலயத்தில் காட்டப்பட்டுள்ளது.