கோவிலுக்குச்
சென்று நாம் எப்படி வழிபடுகின்றோம்? காவியத் தொகுப்புக்களில் நம் ஞானிகள் எதைக்
காட்டியுள்ளார்கள்? உண்மையான தவம்
எது?
கோவிலுக்குச்
சென்று எனக்கு இப்படிச் செய்தார்களே, எனக்கு இப்படி இருக்கிறதே என்ற உணர்வின்
தன்மை கொண்டு வேதனையைத் தவமாக எடுத்தால் என்ன செய்யும்?
என்னை அப்படிப்
பேசினார்கள், அப்படியெல்லாம் உதவி செய்தேன் எனக்கு இப்படியெல்லாம் தொல்லை வந்தது
என்ற இந்த உணர்வை நீங்கள் சுவாசித்தால் இதுவும் தவம் தான்.
அந்தத்
தவமிருந்தால் நம்மை எங்கே அழைத்துச் செல்லும்?
இந்த உடலின் பற்று
கொண்ட உணர்வின் தன்மை கொண்டு நாம் மீண்டும் மறு பிறவிக்கு இழுக்கும் நிலைகளும் நம்
ஆசையின் எல்லை எதுவோ இது சாகாக்கலையாக இந்த மனித உடலில் உருவாகி இன்னொரு
உடலுக்குள் செல்ல செய்யும்.
இன்னொரு
உடலுக்குள் சென்றவுடன் இந்த உடலில் என்னென்ன ஆசைகளை நினைவில் வைத்தோமோ இதே ஆசை
புகுந்த உடலுக்குள் அது உருவாக்கி அந்த உடலையும் கெடுத்து அந்த ஆசையை அங்கே
தூண்டச் செய்து அதை வீழ்த்த உதவும்.
இது பேயாகச்
சென்று இந்த உணர்வின் ஆசைகளை உருவாக்கி இங்கே நோயை உருவாக்கும். பின் அதை
வீழ்த்திய பின் உடலை விட்டு வந்த பின் நமக்குள் தீமையின் விளைவே அங்கே உருவாகும்.
மீண்டும் மனிதனல்லாத
உருவைத் தான் நம்மைப் பெறச் செய்யும். ஆகவே, இதை மாற்ற வேண்டுமென்றால் என்ன செய்ய
வேண்டும்?
நம்முடைய காவியத்
தொகுப்புகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும். ஆலயத்தில் நாம் எவ்வாறு
வழிபடுதல் வேண்டும் என்று தெரிந்து கொள்தல் நல்லது.
ஆகவே, இந்தப்
பேருண்மைகள் உணர்த்தியது அனைத்தும் மகரிஷிகள்.
அந்த மகரிஷிகளின் உணர்வை நாம்
பின்பற்றி இந்தத் தெய்வ குணத்தை நாம் பெறவேண்டும், மலரைப் போல் மணம் பெறவேண்டும்
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி
பெறவேண்டும், அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும். அவர்கள் தொழிகள்
வளம் பெறவேண்டும் என்று பிறரை நீங்கள் இந்த முறைப்படி எண்ணினால் போதும். இது
பக்தி.
நாம் எடுப்பது
தியானம். தியானித்து அதை நமக்குள் பெறுகின்றோம். ஆனால், ஆலயத்திற்குள் வரும்
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று இதைச் சொன்னால் “தவம்”.
எல்லோரும் நலமாக
இருக்க வேண்டும் என்ற நம்முடைய சொல் அனைத்துமே தவமாக அமைகின்றது. அப்பொழுது தவத்தின்
தன்மை என்ன?
வலிமை கொண்டு
சுவாசித்து நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற தவமிருக்கும் பொழுது நமக்கு நன்மை
ஏற்படுகின்றது.
இதைத்தான் ஆறாவது
அறிவு கொண்டவன் வள்ளியைக் காதலிக்கின்றான் என்று காட்டப்பட்டது. அப்படி என்றால்
என்ன அர்த்தம்?
தன்னைப்
பாதுகாக்கும் வலிமை மிக்க சக்தியைத்தான் இந்த ஆறாவது அறிவு கொண்டு நாம் நேசிக்க
வேண்டும்.
அதை நாம் பற்றுதல்
வேண்டும். அதை நாம் சுவாசித்தால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் தெய்வ ஆணையாக நம்
உடலினின்று அது இயக்கப்பட்டு இந்த ஆறாவது அறிவின் தன்மையைச் செயலாக்கும் தன்மைக்கே
வருகின்றது, மாற்றுகின்றது.