மனித வாழ்க்கையில்
அந்தத் தீமைகளை வென்ற வலிமையான சக்தியை நாம் எடுப்பதற்காக வேண்டித்தான் “சுக்ரீவன்”
என்று காட்டுகின்றார்கள்.
துருவ
நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை (சுக்ரீவன்)
நாம் நுகர்ந்து வலிமைமிக்க விஷத்தை அடக்குதல் வேண்டும். ஆகவே, வாலியை அடக்கினான்.
இதுவும் சீதாலட்சுமி தான்.
மனிதன்
வேதனைப்படும் பொழுது அந்த வேதனையின் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
கொண்டால் சீதா லட்சுமி ஆகின்றது.
அதே சமயத்தில் மனிதனில்
தீமைகளை வென்றவன் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதையும் சப்தரிஷி மண்டலத்தில்
இருந்து அதிலிருந்து விளைந்த உணர்வை சூரியன் காந்த சக்தி கவர்ந்து வருவதை நாம்
கவர்ந்து நம் எண்ணத்தால் எண்ணினால் சுக்ரீவன்.
அவன் உணர்வின்
தன்மை கொண்டு அதை நாம் நுகரும் பொழுது அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அந்த
உணர்ச்சிகள் நமக்குள் ஊடுருவி அந்த நஞ்சு கொண்ட உணர்வை அடக்குகின்றது.
அதைத்தான் சுக்ரீவன்
துணை கொண்டு வாலியை அடக்கினான். ஏனென்றால், வாலி அண்ணன் சுக்ரீவன் தம்பி.
முதலில் விஷத்தின்
இயக்கத்தால் தொடர்ந்து வந்தவன் தான் அண்ணன். ஆக மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக்கிய
பின் பின்னாடி பிறந்தது தான் ஒளி.
இவ்வளவு தெளிவாக
எடுத்துக் காட்டுகின்றார்கள். அதனால்தான் வாலியையும் சுக்ரீவனையும் சகோதரர்கள்
என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.
அவனின் (சுக்ரீவன்)
துணை கொண்டு அடக்கப்படும்போது இது இணைந்து தீமைகளை (வாலி) நன்மை செய்யும் சக்தியாக
நமக்குள் மாற்றுதல் வேண்டும்.
நம்முடைய காவியத்
தொகுப்புகள் இதுதான்.