ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2016

நம்மை நாம் யார் என்று அறிவோம். நாம் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துவோம்

காலத்தால் சாங்கிய சாஸ்திரங்கள் கொண்டு உண்மையின் உணர்வுகளை சாஸ்திரங்களை மறந்துவிட்டோம். இனியாவது தெரிந்தவர்கள் அந்த ஞானிகள் காட்டும் அருள் வழியில் ஆலயங்களுக்குச் சென்று வணங்குதல் வேண்டும்.

நம் உடலே ஆலயம்.
உயிரே ஈசன்.
உடலே சிவம்.

நமக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் வினை.
வினைக்கு நாயகனாக இயக்குகின்றது.
எதனின் குணத்தை அதிகமாகச் சேர்த்தோமோ அவை அனைத்தும் கணங்களுக்கு அதிபதியாக இயக்குகின்றது.

கண்களே கண்ணன்.
கண்களின் கருவிழி ருக்மணி.
கண்களுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு சத்தியபாமா, உண்மையை நமக்குள் தெரியப்படுத்துகின்றது.

உயிரே ஈசன்.
அதற்குள் ஏற்படும் வெப்பமே விஷ்ணு.
அதனால் ஈர்க்கும் காந்தமே லட்சுமி.

நாம் எண்ணும் உணர்வின் தன்மை உருவாக்கும் அணுவே பிரம்மம்.
அது தன் இனத்தைப் பெருக்கும் நிலையே அது.

உணர்வின் சத்து நம் உடலுடன் ஆகப்படும் பொழுது சிவமாகின்றது.
சிவன் அரவணைக்கின்றான் என்று இந்த நிலை பெறுகின்றது.

இதைப் போன்ற பேருண்மைகளைக் காட்டிய அருள் வழியில் நமக்குள் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

நம்மை நாம் யார் என்று அறிவோம். நாம் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துவோம். இருள் சூழா நிலைகளில் நம்மைக் காப்போம்.

ஆறாவது அறிவு கொண்டு சேனாதிபதியாக்கி அருள்ஞானிகளின் உணர்வைப் பெறக் கூர்மையாக நினைவினைச் செலுத்துவோம். அதன் வலுவை நமக்குள் வளர்ப்போம்.

பேரின்பப் பெருவாழ்வு வாழும் அந்த அவதாரமாகக் கல்கியாக ஒளியின் சரீரமாகப் பெறுவோம்.