ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2015

ஞானகுருவின் பொன்மொழிகள் January 2015

31.01.2015
பிரபஞ்சத்தை அறிந்த குருவானவர் தரும் ஞானத்தைப் பின்பற்றுவதில் நாம் காட்டும் வைராக்கியம் நம் ஆன்மாவையும் வாழ்வையும் ஜொலித்திடச் செய்யும்.
30.01.2015
ஆலயத்தில் தெய்வத்தைப் பார்க்கப்படும்பொழுது,
இந்த தெய்வ குணத்தைப் பெறவேண்டும்,
இந்த மலரின் மணம் பெறவேண்டும்,
கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும்,
அந்த மலரைப் போல எங்கள் உடல் முழுவதும் மணங்கள் மணக்க வேண்டும்,
அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் நல் மணமாக மாறவேண்டும்,
எங்கள் சொல்லின் தன்மை பிறரை இனிமைப்படுத்தும் நிலை பெறவேண்டும் என்று நாம் எண்ணும்பொழுது
நாம் எண்ணியதை அந்த உணர்வின் தன்மை தெய்வமாக மாற்றுகின்றது.
29.01.2015
பிரபஞ்சத்திற்கு சூரியன் குரு. உடலுக்கு உயிர் குரு. சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றதோ அதைப் போன்று நமது உயிர் நமது உடலுக்குள் ஒரு பிரபஞ்சத்தையே உண்டாக்குகின்றது.
முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலைப் பெற்றிருக்கிறோம். மிருக நிலைகளிலிருந்து மனித உடல் பெற்ற நாம் அந்த மெய்ஞானி பெருக்கிய உணர்வின் தன்மையை இந்த உடலுக்குள் பெருக்க வேண்டும்.
28.01.2015
நமது எண்ணம் கொண்டு நம்முள் உணர்வை உருவாக்கும் நிலைக்குத்தான் இராமேஸ்வரம் என்று ஞானிகள் பெயரிட்டார்கள்.
27.01.2015
நீங்கள் உங்களுடைய நெடுநாளைய நண்பரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டிருப்பீர்கள் என்றால், இதனின் உணர்ச்சிகள் நண்பரிடத்தில் தூண்டப்பட்டு நீங்களும் உங்கள் நண்பரும் சந்திக்கும் சந்தர்ப்பம் உருவாகும்.

இது போன்று அருள் மகரிஷிகள் அருள் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்கி தியானிப்பீர்கள் என்றால், மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பம் உருவாகும்.
26.01.2015
காடுகளில் வாழும் புலையர்கள் யானை புலி போன்ற மிருகங்கள் வெகு தொலைவிலிருந்து வரும் பொழுதே யானை வருகிறது, புலி வருகிறது என்று தங்களுடைய புலனறிவால் தெரிந்து கொள்கின்றனர். தங்களைக் காத்துக் கொள்கின்றனர்.
ஆனால், நகரங்களில் வாழும் மனிதர்களான நாமோ ஒருவரைப் பார்க்கும் பொழுது இவர் நல்லவரா, கெட்டவரா என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை.

ஆனால், நாம் துருவ நட்சத்த்திரத்தினை எண்ணி ஏங்கி தியானித்துப் பெற்ற பேரருள் உணர்வானது நம்முள் தீமைகள் வராது காக்கின்றது.
25.01.2015
அகஸ்திய மாமகரிஷி, வான்மீகி மாமகரிஷி போன்ற ஏனைய ஞானிகள் அனைவரும் சந்தர்ப்பங்களால்தான் தங்களுக்குள் மெய்ஞானத்தைப் பெற்றார்கள்.

இந்த மெய்ஞானிகளைப் போன்று நாமும் நம்முள் மெய்ஞானத்தைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பங்களை உருவாக்கும் ஆற்றல் நமது ஆறாவது அறிவிற்கு உண்டு.
24.01.2015
சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்று காவியங்களில் கூறப்பட்டிருக்கும்.

அதாவது, கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி உயிரான ஈசனை எண்ணி ஏங்கி அருள் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது, அறியாது சேர்ந்த தீமைகள் ஒடுங்குகின்றன என்பதே ஞானிகள் உரைக்கும் உண்மைகள்.
23.01.2015
எமனின் பாசக்கயிற்றிலிருந்து தப்பிப்பதற்காக மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைப் பிடித்துக் கொண்டான். ஆவடையைப் பிடிக்கவில்லை.

அதாவது, லிங்கம் என்பது உயிர். மார்க்கண்டேயன் உயிரைப் பற்றிக் கொண்டான். உயிரைப் போன்றே தன் உணர்வுகளை ஒளியாக்கி, இருளான உணர்வுகளிலிருந்து விடுபட்டு என்றும் பதினாறு என்ற பெருவீடு பெருநிலையைப் பெற்றான் என்பதே ஞானிகள் உரைக்கும் உண்மையாகும்.
22.01.2015
அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் அதனின் உணர்வுகள் கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம் சிறிது நேரம் இருந்து மறைந்துவிடுவது போன்று, நம்மிடத்தில் சிறிது நேரம் மட்டுமே இயக்கமாக இருக்கும்.

ஆதலால், அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை நம்மிடத்தில் திரும்பத் திரும்ப பதிய வைக்க வேண்டும், நினைவுபடுத்த வேண்டும். இதன் தொடர்கொண்டு நம்மிடத்தில் அருள்ஞானமும் மகிழ்ந்திடும் சக்தியும் பெருகும்.
21.01.2015
பிரபஞ்சத்திலிருந்து வரும் உணர்வுகளை நம் பூமி துருவத்தின் வழியாகக் கவர்வதை அகஸ்தியர் தம்முள் உணர்ந்து, துருவத்தின் வழி வரும் விண்ணின் ஆற்றலை நுகர்ந்து, கவர்ந்து துருவனானார்.

அந்தத் துருவனின் அருளைப் பெற்று விண்ணின் ஆற்றலை நம்முள் பெறுவோம்.
20.01.2015
நாம் எதனின் உணர்வை எண்ணுகின்றோமோ, அதனின் உணர்வுகள் நாம் அமர்ந்துள்ள தரையிலும் சுவரிலும் பதிவாகின்றது. நாம் நமது இல்லத்தில் கவலையை, வேதனையைப் பதிவு செய்வோமானால் அங்கே கவலையும் வேதனையும் தான் பெருகும்.

அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமது இல்லங்களில் பதிவு செய்வோமானால், நமது இல்லங்களிலும், இல்லத்திலுள்ளோர்களின் உடல்களிலும் அருள்ஞானமும், அருள் சக்தியும் பெருகும்.
19.01.2015
குப்பைக்குள் விழுந்து மறைந்துள்ள மாணிக்கம் போல, அசுர உணர்வுகளுக்கு மத்தியில் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் மறைந்துள்ளது.

அதை தியானித்து நம்முள் பெறும் பொழுது நாம் தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறமுடியும்.
18.01.2015
ஒருவர் நம்மைக் கடுமையாகத் திட்டியிருந்தாலோ அல்லது துரோகம் செய்திருந்தாலோ, அவரைப் பற்றிய நினைவு நம்மிடத்தில் அடிக்கடி வரும்.

அப்படி வரும்பொழுதெல்லாம் அவர் திட்டிய வார்த்தைகளோ அல்லது துரோகம் செய்த சம்பவங்களோ தொடர்ந்து நினைவுகளாக நமக்குள் வந்து நம்மிடத்தில் வேதனைகளை உருவாக்குகின்றது, அந்த நேரத்தில் நாம் ஒரு நல்ல செயலைச் செய்ய முடியாதபடி தடையேற்படுகின்றது.

மாறாக, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குவோம் என்றால் அச்சமயம் நமக்குள் தெளிந்த ஞானமும் மகிழ்ச்சியும் உருவாகும். 
17.01.2015
எண்ணங்களைக் கூர்மையாக விண்ணை நோக்கிச் செலுத்தப் பழகிக் கொள்கின்ற பொழுதும், விண்ணின் சக்தியை நமக்குள் வலுப் பெறும் நிலையாக மாற்றுகின்ற பொழுதும் கார்த்திகை தீபம் போன்று நம் ஒவ்வோருவரின் எண்ணங்களும் தெளிவு பெறும் நிலைக்கு வருகின்றது.

புத்திக் கூர்மை இல்லாத உணர்வின் எண்ணங்கள் நமக்குள் நோயாக மாறுகின்றது.
16.01.2015
உயிரின் கருணையால் உடல் அமைகின்றது. ஜீவனின் வினைப்பயன் உயிரின் கருணையால் ஆகின்றது. உயிரின் நிலைகள் கொண்டுதான் அனைத்தும் இயங்குகின்றது.

மனதைக் கல்லாக்கிவிட்டோம். இனியாகிலும் உயிரைக் கடவுளாக மதிப்போம். மகா ஞானிகளின் உணர்வை நம் மணமாக்குவோம்.
15.01.2015
சாக்கடையான இந்த உடலைப் பிளந்து மெய் ஒளியின் தன்மையுடன் நம் உயிரணுவின் தன்மையை இணைத்து என்றும் நிலையான ஒளியின் சரீரம் பெறவேண்டும்.
ஒளி சரீரம் பெறுவதே இன்று நமது வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும்.
14.01.2015
அன்னை தந்தை அவர்கள் நம்மை வளர்த்து, புனிதமான நிலைகளில் எப்படி வளரவேண்டும் என்று எண்ணினார்களோ அவர்கள் அருளாசி நமக்குள் வினையாகி அந்த உணர்வின் தன்மை நமக்குள் வினையாகச் சேர்த்தால், கனியான சப்தரிஷிகளின் அருள் வட்டத்தில் நம் உயிரின் உணர்வுகள் அனைத்தும் கனியாகி, நாம் என்றும் ஒளி சரீரம் பெறமுடியும். 
13.01.2015
 குருநாதர் காண்பித்த அருள் வழியில் நாம் அனைவரும் நம் உடல் நமக்குச் சொந்தமில்லை என்று உணரவேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வை அருள் ஒளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும். 
மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும். 
நமது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.
07.01.2015
குருவின் துணையால் மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம்
குருவின் துணையால் மகரிஷிகளின் அருள் வழி செல்வோம்
குருவின் துணையால் மெய்வழி செல்வோம்
குருவின் துணையால் மெய்ப் பொருளை அடைவோம்
06.01.2015
நமது கண்களைக் கண்ணனாக மதித்து, நல்வழி காட்டியாக அந்த நல் உணர்வின் தன்மைகள நமக்குள் வளர்த்து, கெட்டதை உடல் மலமாக மாற்றி, அந்த ஆறாவது அறிவின் தன்மையாக வந்த அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, நம்மையறியாது வந்த - வரும் விஷத்தின் தன்மையைப் பிளந்து, மெய்வழி காணும், மெய்வழி செல்லும், மெய் உணர்வின் தன்மையில் நாம் செல்வோமாக.
05.01.2015
உங்களை நீங்கள் நம்புங்கள்.
உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் மிக மிக சக்தி வாய்ந்தது.
04.01.2015
மெய்ஞானி வாக்கினைக் கொடுத்தால், அந்த உணர்வால் எத்தகைய கொடிய நோயாக இருந்தாலும் வாக்கின் உணர்வின் வித்து அங்கே விளைந்து அந்த வாக்கினைப் பெற்றவர்கள் அதை எண்ணி ஏங்கி அந்த உணர்வின் சக்தி அங்கே வளர்ந்து தன் உடலிலே உள்ள நோய்களை மாய்க்கச் செய்கின்றது. இது மெய்ஞானிகள் செய்த நிலைகள்.
03.01.2015
ஊழ் என்றால் என்ன? நமது எலும்புக்குள் (மேக்னட்) காந்த சக்தி உண்டு. இந்த உடலிலே நாம் பதிவு செய்வது அனைத்தும் நமது எலும்புக்குள் ஊழ்வினையாக “ஊழ்” ஆக இருக்கின்றது. 
02.01.2015
நமது உயிர் நாம் எண்ணுவதை எவ்வாறு இயக்கி நம் உடலாகச் சேருகின்றது என்ற இந்த உண்மையினை பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அணுவின் ஆற்றலும், அணுவின் பெருக்கமும், அணுவின் இயக்கம் என்ற நிலையில் அகத்தியர் தன் உடலில் விளைந்த உணர்வை வெளிப்படுத்தினார்