ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2015

பதஞ்சலி முனிவர் – திருமூலர் – தில்லை நடராஜா – ஓங்கார நர்த்தனம்

திருமூலர் என்று சொல்லும்போது அதற்கு முன் பதஞ்சலி முனிவர் அவர் ஓர் அரசனாக வாழ்ந்தவர்.

அரசனாக இருக்கும்போது தன் சுயநலங்களுக்காக வேண்டி மந்திர சக்தியின் உணர்வின் தன்மையை எடுத்து மந்திர சக்தியின் துணைகொண்டு செயலாக்கி தன் ஆசாபாசங்களுக்குப் பயன்படுத்தியவன் அந்த “பதஞ்சலி”.

வன் தான் கற்றுக்கொண்ட மந்திரத்தின் நிலைகள் கொண்டு, இந்த நாடி சாஸ்திரியைப் போலத்தான், கூடுவிட்டுக் கூடு பாயும் நிலையை தனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டவன்.

போர்முரசு வரப்படும்போது, அந்தப் போர்முறைகளில் தான் வீழ்ச்சியடையும்போது உடலைவிட்டு தன் உயிராத்மாவை கூடுவிட்டு கூடு பாய்ந்து தப்பித்து வெளி வந்த நிலைகள்.

வெளியே வந்து மனித உடலுக்குள் புகுந்தாலும் மற்றவர்கள் கண்டுணர்ந்து கொள்வார்கள் என்று பாம்பின் உடலுக்குள் புகுந்து பொந்திற்குள் புகுந்து வெளியே வந்தவர்.

அப்படி வந்தபின் அந்த உயிரினுடைய நிலைகள் கொண்டு மறுபடியும் தன் மனித உடலுக்குள் எப்படியும் செலுத்திக் கொள்ளலாம் என்று உடலை மறைத்து வைத்த இடத்திற்குச் செல்கிறார்.

ஆனால், அதற்கு முன்பு, அவரது சேனாதிபதிகளோ அரசனின் உடலை அழித்துவிட்டால் நமக்கு அரச பதவி கிடைக்குமென்று பதஞ்சலியின் உடலை அழித்து விடுகிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு இந்த ரகசியம் தெரியும்.

தன் மனித உடல் அழிந்தபின் பதஞ்சலி இந்தப் பாம்பின் உடலுக்குள் இருந்து தன் உடல் கிடைக்கவில்லையென்று சுழன்று சுழன்று வருகின்றார்.

ஏனென்றால், மறு உடலுக்குள் புகுந்து தன் எண்ண அலைகளைப் பரப்ப வேண்டுமென்ற உணர்வின் சக்தியை தனக்குள் வளர்த்துக்கொண்டவர்கள் அவர்கள்.

பதஞ்சலியின் உயிராத்மா பாம்பின் உடலுக்குள் வந்து. திருமூலர் என்ற அந்த மாடு மேய்ப்பவன் உடலைக்கொத்தி அந்த பாம்பின் விஷத்தின் துணை கொண்டு அந்த உடலில் ஏற வைத்து, விஷம் கலந்து இந்த உயிராத்மா அந்த உடலுக்குள் செல்கின்றது.

சென்றபின் விஷத்தின் ஈர்ப்புக்குள் அந்த உடலுக்குள் புகுந்து அந்த திருமூலருடைய நிலைகளில் தன் ஞானங்களை அங்கே பேசவைத்து அங்கு வரப்படும்போதுதான் உணர்கின்றான்.

ஆக, பேராசையினுடைய நிலைகள் கொண்டு மந்திரத்தின் துணையால் தான் பல ஆற்றல்மிக்க நிலைகளைச் செய்தாலும் நாம் அந்த “உண்மையை அறிய முடியவில்லையே”
என்று உண்மைக்கு மாறாக
தான் சுகபோகங்கள் அனுபவித்த நிலைகளைச் சிந்திக்கின்றான்.

இந்த உடலுக்குள் வந்த பின்தான்,  “திருமூலம்”
“நடராஜா”, “தில்லை” என்று
இந்த பூமியின் சுழற்சி வேகத்தை,
ஈர்த்துக்கொண்ட இந்த உணர்வின் தன்மைகள்,
இந்த மனிதனாக தோன்றியபின் நாம் என்ன செய்கின்றோம்?
என்ற நிலையை அவன் காட்டியது

தில்லை என்பது இந்த பூமியின் ஒரு எல்லை.
நடராஜர் என்பது பூமியினுடைய தன்மை இயக்கம் - ஓடிக்கொண்டே இருக்கின்றது.

நடராஜா, சிதம்பரத்திற்குப் பெயர் “தில்லை” தில்லையம்பலம், இந்த பூமி நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பது. இதுதான் “ஓங்கார நர்த்தனம்” என்ற நிலைகள் கொண்டு அங்கே எழுதினான்.

ஓங்கார நர்த்தனம். அசுரனைக் காலிலே போட்டு அது இயக்கும் தன்மை. அதாவது, பூமி சுற்றும்போது ஏற்படக்கூடிய அதீத வெப்பம், பூமிக்கு - ஓசோன் திரை என்பது.

விண்ணிலே தோன்றிய விஷத்தின் ஆற்றல்
பூமிக்குள் மோத வரும்போது
அந்த அசுர சக்தியை மாய்க்கும் நிலைதான் “சிவ தாண்டவம்”, என்று அங்கே காட்டினார்கள். “திருப்பாச்சி” என்பது கவர்ந்துகொண்ட நிலை என்று அவர்கள் செய்து வைத்திருப்பார்கள்.

“சிவகாமி நடனம்” நம் உடலான சிவம் – காமி.
நாம் கோபமான உணர்வை எடுத்துச் சுவாசிக்கும் போது,
உயிரிலே பட்டவுடன் அந்த எரிச்சல்,

அப்போது அந்த எரிச்சலின் உணர்வுகள் உடலுக்குள் பட்டவுடன் நல்ல குணங்களான சக்தியுடன் பட்டவுடன் அந்த நாதத்தின் நிலைகள் இயக்குகின்றது.

ஓங்கார நர்த்தனம் என்று இந்த உடலான சிவம் என்ன செய்கின்றது? இந்த அங்கங்களை எப்படி இயக்குகின்றது என்ற பேருண்மையை அன்று உணர்த்தினார்கள்.


அதுதான் “சிவகாமி” உடலான நிலைகள், அந்த காமி, அந்த சக்தி. சிவகாமியின் நடனத்தை வைத்துப் பல காவியங்களை எழுதியிருப்பார்கள். இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.