ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 5, 2015

மகரிஷிகள் என்று யாரைச் சொல்கிறோம்...?

மகரிஷி என்பது தனக்குள் “மகம்” என்பது,
ஒவ்வொரு உயிரிலிருந்து அவரை மகிழச் செய்து
அந்த உணர்வின் ஆற்றலை தனக்குள் ஜீரணித்து
உங்கள் துன்பமோ, கஷ்டமோ மற்றவை அனைத்துமே
அதையும் கலந்து தனக்குள் எடுத்து
அந்த உணர்வாலே உங்கள் துன்பத்தைப் போக்கி
மகிழ்ந்த உணர்வின் ஆற்றலைப் பெற்று உயிராத்மாவாகி,
உயிராத்மா வெளியே சென்றபின் தான்
மகரிஷி என்ற பெயர் வருமே தவிர மனித உடலுக்கு வராது.

ரிஷி என்ற தத்துவமே சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது. கடவுளின் அவதாரம் மகரிஷி என்பதினுடைய தத்துவமே விண் சென்ற பின் தான்.

ஏனென்றால், எல்லாம் சேர்த்து விண் சென்றவர்கள். அனைத்தையுமே படைக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆகையினால் பொதுவாக எல்லோரையுமே மகரிஷி என்று அழைக்கின்றோம்.

எல்லா மகரிஷிகளையும் அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்லி தனித்து எடுக்க முடியாது. ஏனென்றால், எண்ணிலடங்காத பெயர்கள் உண்டு.

அந்த மகரிஷிகள் நல்ல உணர்வின் தன்மையை எவ்வாறு பெற்றார்களோ அது பொதுத்தன்மை. மகரிஷிகள் என்பது இந்த மனித உடலிலிருந்து விடுபட்டு விண் சென்றவர்கள்.

ஆனால், இன்று மனிதனாக இருந்து கொண்டு மகரிஷிகள் என்று பெயர் வைப்பதல்ல. இவர்கள் மனிதர்கள் மகரிஷிகள் ஆக முடியாது. இதையெல்லாம் புகழுக்கு வைத்துக் கொள்ளலாம்.

துன்பத்தை விலக்கி ஆற்றல்மிக்க சக்திகளைத் தனக்குள் பெற்று துன்பத்தை உருவாக்கும் நிலையைச் சுத்தப்படுத்தியது மகரிஷிகள்.

ஆகவே, அவர்களுடைய நினைவு கொண்டு “ஓம் ஈஸ்வரா” என்று உயிருடன் தொடர்பு கொண்டு நாம் அந்த மகரிஷிகளின் அருள் வழியில் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறவேண்டும்.

எமக்குள் ஏற்பட்டுத்தப்பட்ட அசுத்தங்களை நீக்குவதற்கு நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறச் செய்தார்.

அகஸ்திய மாமகரிஷி பெற்ற ஆற்றலின் நிலையைக் கண்டுணர்ந்து அதை உணர்வதற்கும் அந்த உணர்வின் ஆற்றலை எமக்குள் பெறச்செய்வதற்கும் குரு அருள் துணையாக இருந்தது.

அதைப் போன்று, அந்த அகஸ்திய மாமகரிஷியின் ஆற்றலை உங்கள் உடலிலே பதியச் செய்து அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்களும் பெற்று, நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் அதைக் கிடைக்கும்படி செய்கின்றோம்.