மனித வாழ்க்கையில் எங்கு சென்றாலும், நாம் தவறே செய்ய வேண்டியதில்லை.
ரோட்டில் போகும்போது தவறான விபத்துகளோ, அல்லது ரோட்டில் செல்லும்போது ஞாபகம்
இல்லாதபடி போய்க் கொண்டிருப்போம். அப்பொழுது நமக்கு முன்னால் ஒருவர் குறுக்கே
போய்க் கொண்டிருப்பார்.
நாம் வரக்கூடிய நண்பரிடம், “இப்படி ரோட்டின் குறுக்கே போய்க் கொண்டிருக்கிறார் பார்” என்று
சொல்லிக் கொண்டிருந்தாலும்கூட இந்த உணர்வின் நிலைகளுக்கு நாமும் நடு ரோட்டில் போய்க் கொண்டிருப்போம்.
நாம் போவது நமக்கே தெரியாது.
நம் பக்கத்தில் பஸ் வரும்போதுதான் நாம் உணர முடிகின்றது.
இந்த உணர்வின் அலைகளை பின்னி வராதபடி தடுத்துக்
கொள்வதற்குண்டான ஆற்றல், நமக்கு அந்த சக்தி இல்லை.
ஏனென்றால் இந்த விஷத்தின் அலைகள் கொண்டு எதிலே செல்கின்றோமோ, ஒரு தேள் கொட்டிவிட்டால் கடு கடு என்று இருக்கும். ஏதாவது வேலை செய்து
கொண்டிருக்கும்போது, அந்த சமயத்தில் தேள் அங்கே சென்றால் என்னவாகிப்போச்சோ! என்ற
நினைவுதான் அதிகமாக வரும்.
ஏனென்றால், விஷத்தின்
தன்மை கொண்டு அந்த உணர்வின்
இயக்கமாகத்தான் நாம் இருக்கின்றோம்.
இதைப்போன்ற இயக்கங்களைத் தடுத்துகொள்ளும் நிலையாக, அந்த மெய்ஞானியின்
அருள்சக்தியால் உங்களுக்குப் பாதுகாப்பான நிலைகள் கிடைக்கவேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள்சக்தி உங்களுக்குள் விளைய வேண்டும். மகரிஷிகளின் அலைகளை உங்களுக்குப் பாதுகாப்பாகக் கொடுக்கவேண்டும் என்று உங்கள்
உயிரை ஈசனாக மதிக்கிறேன்.
அப்பொழுது, உங்களுக்குள் இருக்கக்கூடிய உணர்வு எமக்கு அருள்பாக்கியம் உங்களிடமிருந்து
கிடைக்கின்றது.
ஏனென்றால், உங்கள் உயிரை ஈசனாக மதித்து
உங்களுக்குள் தீமையான உணர்வு உட்புகாது,
அவைகளைத் தடுக்கவேண்டுமென்ற எண்ணத்தை
எப்போது
நீங்கள் முன்னிலைப் படுத்துகின்றீர்களோ
நிச்சயம் நல் ஒளியின் தன்மையை நீங்கள் சுவாசிக்க முடிகின்றது.
மெய்ஞானியின் அருளையும் நீங்கள் பெறமுடிகின்றது.
ஆகவே, இதைப்போன்று அந்த நல்ல உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் பாதுகாப்பாகக்
கொண்டு வருவதற்குத்தான் யாம் திரும்பத் திரும்ப அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப்
பதிவு செய்கின்றோம்.