நாராயணன் மறு அவதாரமாக விஷ்ணுவாகப் பிறக்கிறான் ஆக நாராயணனுக்கு சங்கு
சக்கரம்தான், விஷ்ணுவுக்கும் சங்கு சக்கரம்தான். சூரியனோ தான் சுழலப்படும்போது
ஏற்படுத்தப்பட்ட நிலைதான் – சக்கரம்.
ஆக ஆதியிலே சொன்னது ஒரு பரம்பொருளாக உருவாகும்போது பரமசிவம். ஒரு
திடப்பொருளாகி சீவலிங்கம்.
அதற்கு அடுத்து அது வளர்ச்சியின் தன்மை பெறும்பொழுது நட்சத்திரம். நட்சத்திரம்
ஆன பிற்பாடு சூரியன். சூரியனாகும்போது சர்வேஸ்வரன்.
சூரியனைப் பார்க்கும்போது சிவம் - சிவசக்தி. ஆனால் சிவசக்திக்குள் சீவலிங்கமாக
மாறி, பின் சர்வேஸ்வரனாக மாறுகின்றது. சர்வத்தையும் உருவாக்கக்கூடிய ஆற்றல் சூரியன்.
சூரியன் சுழலப்படும்போது சுழற்சி ஆவது சக்கரம் அதிலிருந்து வெளிப்படும் நாதம்
சங்கு. அதைப்போல நம் பூமி அது சுற்றும்போது ஏற்படக்கூடிய அந்த சுழற்சியின் நிலைகள்
சக்கரம். சுழலும்போது வரக்கூடிய நாதம் சங்கு,
இதிலே ஏற்படக்கூடிய வெப்பம் நாமம் – சிவப்பு (நெற்றியிலே) நாராயணனுக்கு
அதுதான். விஷ்ணுவாக மறு அவதாரம் எடுக்கின்றான்.
அதாவது இந்த அவதாரத்தன்மையை, சூரியன் தோன்றி மற்ற கோள்கள் ஆகும்போது ஒவ்வொரு
அவதாரமாக மாறி வருகின்றான் என்ற நிலையைக் காட்டியுள்ளார்கள் மெய்ஞானிகள்.
அதேபோன்று நமது உயிருக்குள் துடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும்
அந்த வெப்பம் விஷ்ணுதான். ஆக அது இயக்கச்சக்தி – ஈஸ்வரன்.
இயக்கத்துக்குள் ஏற்படும் வெப்பமோ
விஷ்ணு.
ஆக அந்த வெப்பத்தின் தன்மை கொண்டு
ஈர்க்கும் காந்த ஈர்ப்பின் தன்மை கொண்டு தனக்குள் சுழலச்செய்து,
நம் உடலுக்குள் இந்த சுவாசத்தை இயக்கச் செய்கின்றது – சக்கரம்.
நாம்
சுவாசித்து உயிருடன் மோதும்போது அது ஜீவன் – நாதன்.
நாம் எடுத்துக்கொண்ட சுவாசம்
உயிருடன் மோதப்படும்போது பிரம்மம்.
நாம் எந்த குணத்தின் தன்மையை உயிருடன் மோதச் செய்கின்றோமோ அதை பிரம்மா
சிருஷ்டிக்கின்றார்.
அதைத்தான் நாராயணன் மறு அவதாரம் விஷ்ணுவாகி, அடுத்து இவன் ராமனாகப்
பிறக்கின்றான் என்ற இந்த தத்துவத்தை அன்று மெய்ஞானி வான்மீகி நமக்குத் தெளிவாகக்
காட்டினார்.