சூரியன் தனக்குள் எடுத்துக் கொண்ட சக்தியினுடைய நிலைகளை அல்ட்ரா வயலட் என்று
சொல்கின்றனர்.
சூரியன், தான் எடுத்துக்கொண்ட ஆற்றல்மிக்க சக்தியினுடைய சக்தி வெளிப்படும்
பொழுது
பிரபஞ்சத்தில் உள்ள விஷத்தின் சக்தியை
சூரியன் தனக்குள் வராதபடி
தன் உணர்வின் சக்தியால் மோதி
அதை வேகவைத்து
அலைகளாக வெளிபரப்பச் செய்வதுதான்.
சூரியன் தான் தெளிவான நிலைகள் கொண்டது. அதில் அசுத்தங்கள் எதுவும் இல்லை. மிக
குளிர்ச்சியான பூமி. அதிலே நீர்வளங்களும் ஏராளமாக இருக்கின்றது.
சூரியன் எடுத்துகொண்ட ஆவியின் தன்மைதான் திரவகம், அதாவது நாம் பாதரசத்தைத்
தொட்டால் ஐஸ் மாதிரி இருக்கும்.
அந்தப் பாதரசத்தை சகல சக்தியினுடைய நிலைகள் எடுத்து அது ஊடுருவி,
ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி,
அதனுடைய சக்தியைத் தனக்குள் கவர்ந்து,
மற்றொன்றுடன் இணைத்துவிட்டு
இது பிரிந்து கொண்டேயிருக்கும்.
சூரியனிலிருந்து வெளிப்படும் நிலைகள் மற்ற பொருளுடன் மோதியவுடன் வேகமான
நிலைகளில் அது வெப்பமாகி, அந்த வெப்ப
நிலைகளிலே பல நிலைகளுக்காகி, இதைப் போன்று மற்ற
உணர்வுக்குத்தக்கவாறு அந்த அணுக்கள் சேர்க்கும். செயலின் தன்மைக்குத் தக்கத்தான்
அந்த வெப்பத்தின் தன்மைகள் இருக்கும்.
நம் பூமியில் எடுத்துக் கொண்டாலும் மற்ற கோள்களிலிருந்து வெளிப்படும் அலைகள்
கூட சூரியனுடைய காந்த அலைகள் வரும் பொழுது இதையெல்லாம் பாதரசத்துடன் சம்பந்தப்பட்டது.
ஆனால், அந்த அலைகள் மோதும் பொழுது எந்தக் கோளின் ஆற்றல் இருக்கின்றதோ அந்தக்
கோளுக்குத் தக்கவாறு இது பட்டவுடன் இங்கு வெப்பத்தின் அலைகளைப் பார்க்கலாம்.
ஏனென்றால், நாம் நினைக்கலாம்
சூரியன் அருகில் வந்துவிட்டது, சூடு அதிகமாகினறது என்று.
எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால்
இருந்தாலும், ஒரு சூடுதான்.
இதை விஞ்ஞானிகள் கண்டு கொள்வதற்கு வெகு காலமாகும்.
அங்கே இருக்கக்கூடிய பாதரசத்தின் தன்மையும் மற்ற கோள்களின் தன்மைகளை பூமி
கவர்ந்து தனக்குள் வரும்போது
இந்த வெப்பகாந்த அலைகள் சேர்வதற்குத்
தக்கவாறுதான்
இது ஒன்றுடன் ஒன்று மோதி நீராக,
ஆவியாக மாற்றச் செய்யக்கூடிய சந்தர்ப்பம்.
அதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் சக்தியின் நிலைகள்
கொண்டுதான் ஒவ்வொரு நிலைகளும் ஏற்படுகின்றது.