இன்று நாம் உணவாக உட்கொள்ளும் சாப்பாட்டில் அரிசி பருப்பு என்று வரப்படும்போது
சுவையாக இருக்கின்றது. ஆனால், நெல் அரிசிக்குப் பதிலாக ராகியும் சோளத்தையும், கம்பையும் சேர்த்துச்
சாப்பிட்டால் எப்படி இருக்கும்?
உணவிற்கு சுவையைக் கூட்ட குழம்பைக் கூட்டி அதைச் சுவையாக மாற்றுகின்றோம்.
அரிசி, பருப்பு, கம்பு, சோளம் எல்லாவற்றையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்ன ஆகும்.
அரிசி வகையிலும் எத்தனையோ வகை உண்டு.
ஒன்று சீக்கிரம் வேகும். மற்றொன்று
வேகாது.
இதைக்
கலந்துவிட்டு நான் ருசியாக்கிவிடுவேன் என்றால் ருசியாகுமா? பகுதி
வெந்திருக்கும். பகுதி வேகாதிருக்கும்.
ஆகவே, நாம் எதை எப்படிச் சமைக்க வேண்டும்.
சமைக்கும் பக்குவத்தை அறிந்துணர்ந்து செயல்படுத்த
வேண்டும்.
அதைப் போன்று நமது வாழ்க்கையில் எத்தனையோ குணங்கள் கொண்ட உணர்வுகளைப் பார்க்கின்றோம், சுவாசிக்கின்றோம். அது அனைத்தும் அணுக்களாக மாறி நம் உடலாக மாறுகின்றது.
அதில் தீமை செய்யும் அணுக்களை நீக்கிவிட்டு நல்லவைகளை வளர்க்க வேண்டும்.
ஆக, தீமைகளை வேக வைத்து நீக்கிடவும்
நல்ல உணர்வுகளைக் காத்திடவும்
ஆற்றல் மிக்க சக்தியாக அருள்ஞானப் பொக்கிஷமாக
இப்பொழுது உங்களுக்குள்
படைக்கப்படுகின்றது.
இந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அரும்பெரும் சக்தியாக
உங்களுக்குள் உருவாக்க இது உதவும். காலம் வரும்போது இந்தப் பொக்கிஷத்தைப் பயன்படுத்துங்கள்.
செல்வத்தைச் தேடி வைத்திருந்தால் நோய் என்று வரும்போது நோயை சீக்கிரம்
விரட்டிவிடலாம்.
செல்வம் இருக்கும் பொழுது தாராளமாகச் செலவழித்து விட்டால்
நோய் வரும்போது என்ன செய்வது?
கால நேரம் இல்லையென்றால் தவிக்கின்றோம். செல்வத்தைத் தேட வேண்டும் என்று
நினைத்து பிறரை இம்சித்து, செல்வத்தைத் தேடினாலும் செல்வத்தை எடுத்துச் சுவைக்கும்
தன்மை இழந்துவிடுகின்றது. இதையெல்லாம்
நாம் சிந்தனை செய்தல் வேண்டும்.
ஆகவே, அருள் ஒளி கொண்டுதான் இந்த உடலைச் சுத்தப்படுத்த வேண்டும்.
ஆனால், செல்வத்தைக் கொண்டு நறுமணங்களை வைத்து என் உடல் சுத்தமாக இருக்கின்றது என்றால்
நம் உணவாக உட்கொள்ளும் உணர்வுக்குள் மறைந்துள்ள நிலை பிறருக்குத்தான் மணமாகும்.
நமக்குள் இருக்கின்ற உணர்வு நோயாகும்.
இதைப்போன்ற நிலைகளிலிருந்து மீண்டிட நம் குரு காட்டிய அருள் வழிப்படி தியானத்தின்
நிலை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உங்கள் உடல்
முழுவதும் படரச் செய்யுங்கள்.
உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு கண் வழி துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உள்ளே செலுத்தி தீமையை அகற்றும் ஆற்றலை
வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஆக, நாம் என்றுமே பேரருளுடன்
ஒன்றி வாழ்தல் வேண்டும். துரித நிலை கொண்டு உங்களை உருவாக்க
வேண்டுமென்றுதான் இதைச் செய்வது.