ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2015

உங்கள் எண்ணத்தால் ஊடுருவி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்துக்கொள்ள வேண்டும்

நாம் சில செடிகளைப் பார்க்கின்றோம். இன்று மழையே இல்லை என்றால் கூட ஆகாயத்தில் நீங்கள் கட்டித் தொங்கவிட்டு விட்டால் காற்றிலே இருக்கக்கூடிய சக்தியின் தன்மையை எடுத்து வளரும்.

கருவேல முள் (சீமை முள்) என்று பார்க்கின்றோம்.
காற்றிலே இருக்கக்கூடிய நீர் சக்தியை
வடித்து எடுக்கக்கூடிய ஆற்றல் அதற்குள் இருப்பதால்
நீர் இல்லையென்றாலும் அதனுடைய தன்மை இருக்கின்றது.

பூமியில் அது தன் வேரை ஊன்றினாலும், அதனுடைய வளர்ச்சியின் தன்மைகள் நீர் இருக்கக்கூடிய இடத்திற்கு, துரிதமான நிலைகளில் தன் இனத்தை ஈர்ப்பதற்கு மிக ஆழமாக ஓடுகின்றது. இது இயற்கையின் சில நியதிகள்.

இதைப்போன்றுதான், பாதுகாப்பான நிலைகளைப் பெறுவதற்கு, நாம் எங்கிருந்தாலும் நம் எண்ணத்தின் உணர்வினுடைய தன்மைகள் கொண்டு ஊடுருவி துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த ஆற்றலை நாம் பெற வேண்டும்.

ஏட்டு புத்தகத்தில் பார்த்து, “அ.., ஆ...” படித்து
இப்படி பெருக்கிப் பார்த்து
உங்களிடம் சொல்லி – எடுத்து,
அப்படி யாரும் பெறுவதற்கு முடியாது.

அதனால்தான் உங்களுக்கு புத்தக வடிவில் எதும் கொடுப்பதற்கு மாறாக உங்களுக்குள் ஞானத்தின் நிலையைப் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

எல்லா அன்பர்களும் புத்தகம் வேண்டும், வேண்டும் என்று கேட்பதனால்தான், புத்தகமே எழுதுகின்றோமே தவிர, முன்னால் உங்களிடம் பேசும் பொழுதெல்லாம் அர்த்தம் புரியாத அளவுக்கு பேசியதின் நோக்கமே இதுதான்.

இப்படி கேட்டுத் தெரிந்து என்ன பண்ண போகின்றீர்கள்?

அந்த பதிவின் நிலைகளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்வதற்குக் கொண்டு வருகிறோம்.

இந்த அர்த்தத்தினுடைய நிலைகள் நீங்கள் கண்டுணர்ந்து எடுக்க முடியாது.

இந்த மெய்யுணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவு செய்யப்போகும்போது,
சரியான முறையில் தியானித்தால்,
உணர்வின் சக்தியினுடைய நிலைகள் உங்களுக்குள் பதிவாகின்றது.

அப்படிப் பதிவான பின், உங்களுக்குள் அடிக்கடி யாம் சொன்ன நினைவு கொண்டு அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து சுவாசித்தால், அந்த எண்ண அலைகள் உங்களுக்குள் ஞானத்தை பேசும்.

அப்படி நீங்கள் சுவாசித்த
அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள்
துன்பத்தைப் போக்கக்கூடிய உணர்வின் ஞானமாக
உங்களுக்குள் தோற்றுவிக்கும்.