ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2015

அகஸ்தியர் அமர்ந்த பாறைகளில் எல்லாம் நீர்கள் உற்பத்தியாகின்றது

அகம் என்பது 
தன் உடலுக்குள் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இருக்கக்கூடிய ஆற்றலை
அறிந்துணர்ந்தவர் அகஸ்தியர்.

அந்த ஆற்றலின் நிலைகள் அவர் எங்கெல்லாம் அமர்ந்திருந்தாரோ அங்கெல்லாம் நீரின் சக்தியைத் தோன்றச் செய்தவர்.

அவர் உடலிலே விண்ணின் ஆற்றல்களைப் பெற்று அதன் துணை கொண்டு எங்கே அமர்ந்து அந்த ஆற்றல்களை ஈர்க்கின்றாரோ அப்பகுதியிலே அது பரவி, அதன்வழி கொண்டு
மேகங்களில் இருக்கக்கூடிய நீர்ச்சத்தைக் கவரச் செய்து,
அங்கே நீராக உருபெரும் சக்தியைச் செய்து வந்தவர் அகஸ்தியர்.

அவர் காட்டிய உணர்த்திய வெளிப்படுத்திய அந்த அருள் சக்திகளை நாம் அனைவரும் பெறவேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அகஸ்திய மாமகரிஷி எவ்வழிகளிலே ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று அவருக்குள் விளைய வைத்தாரோ, அந்த உணர்வின் சக்தியின் முழு அலைகளின் எண்ண ஒலியை நீங்கள் பெறுவதற்கு இதை உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வின் ஈர்ப்பால் அந்த மகரிஷிகள் அவர்கள் வெளியிலே உதிர்த்த அந்த அணுவின் அருள் ஒளியை உங்களிலே இப்பொழுது பதியச் செய்துவிட்டோம்.

இப்பொழுது ஒரு மாமரம் காற்றிலிருந்து எவ்வாறு அதன் சக்தியைத் தனக்குள் எடுத்து வளர்த்து பிஞ்சாகி, காயாகி, பழமாகும் பொழுது இனிக்கின்றது.

பிஞ்சாக இருக்கும் பொழுது துவர்க்கின்றது.
காயாகும் பொழுது புளிக்கின்றது.
கனியாகும் பொழுது இனிக்கின்றது.
ஆனால், இனிக்கும் சக்தி தனக்குள் வரும்போது அதனின் ஆற்றலின் சக்தியை வித்தாக மாற்றிக் கொள்கின்றது.

அந்த மாங்கனி எப்படி அதனின் சக்தியை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்று, அது காயாக இருக்கும் பொழுது துவர்ப்பு, நாம் அதை நுகர்ந்தாலோ வித்தியாசமான வாசனை வரும்.

அதனுடைய உணர்வுகள் திகட்டி உள் செல்வதற்கு கொஞ்சம் சிரமப்படும். ஆனால், காயாகும் பொழுது நம் வாயிலே போட்டவுடன் புளிப்பு ஏறச் செய்யும்.

கனியாகும்போது முக்கால் பருவம் வரும் போது புளிப்பும், இனிப்பும் கலந்திருக்கின்றது. முழுமையாகும் பொழுது இனிக்கும் சுவையைக் காட்டுகின்றது.

இதைப் போன்று மனித வாழ்க்கையில் சாதாரண மனிதன் துவர்ப்பின் தன்மைக்கும், அதிலே கூடுமான வரையிலும் தன் எண்ணத்தைக் கூட்டி இயக்ககூடிய சக்தி புளிப்பு.

தன் எண்ணத்தை இயக்கி எல்லாவற்றையும் தான் மகிழச் செய்யக்கூடிய தன்மைக்கு ஆற்றல்மிக்க சக்தி பெற்றவர்கள் – மெய் ஞானிகள்.

அந்த மெய் ஞானத்தை அறிந்து கொண்டவர்கள்தான் இயற்கையின் நிலைகளில் கனியாகின்றார்கள். கனி தன் நிலையை அடைந்த பின் சுவையான மணம் வீசுகின்றது.

இதைப் போன்று, மனித வர்க்கங்களிலே அகஸ்தியர் தனக்குள் சமைத்து அவர் உடலிலே வாழ்ந்த காலங்களில் மெய்யுணர்வைக் கண்டுணர்ந்த உணர்வின் அலைகளை அவர் மூச்சாலும், பேச்சாலும் உணர்த்திய ஆற்றல்மிக்க சக்திகள் நமது பூமியிலே படர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த அகஸ்திய மாமகரிஷி ஒளியாகச் சென்று
இன்று சப்தரிஷி மண்டலங்களில் ஒரு அங்கமாக
அங்கத்தினராக அங்கே சுழன்று கொண்டிருக்கிறார்.

அவரை எண்ணி அந்த் அருள் சக்தியை நாமும் பெற்று அவருடன் ஐக்கியமாவோம்.