ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2015

சூரியன் எதன் மேல் பள்ளி கொண்டிருக்கின்றான்? விஷத்தின் மேலே

இரும்பை உருக்க வேண்டும் என்றால் வெப்பம் அதிகம் தேவை.

இன்று எப்படி மற்ற உலோகத்தின் தன்மைகளையும், களிமண்ணையும் ஒன்றாகச் சேர்த்து, நிலக்கரியைப் போடுகிறான். அதை வேகவைத்து அதனுடைய உணர்வின் தன்மை வரப்படும்போது சிமெண்டாக உற்பத்தி செய்கின்றார்கள்.

ஆக வெப்பத்தைத் தனக்குள் கூட்டி சமநிலைப்படும்போது அதனுடைய நிலைகள் வேறுவிதமாக மாறுகின்றது.

இதைப்போல, பூமி சுழலச் சுழல ஆதியும் அந்தமும் பரவெளிகளே ஒன்றுமே இல்லாத நேரத்தில் தனக்குள் எடுத்து அது ஒரு நீராகி, திடப்பொருளாகி, பரம்பொருளாகி, பரம்பொருள் கோளாகி,
எல்லையே இல்லாத இடத்தில் எல்லையாகி, சீவலிங்கமாகி,
அதற்குள் சேர்த்துக்கொண்ட வெப்பத்தின் தன்மை அதிகமாகின்றது.

அதன் இயக்கம் அதற்குள் சேர்த்துக்கொண்ட உலோகங்களை உருவாக்கும் நிலையும் கனமான சக்தியினுடைய உணர்வை வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறு தனக்குள் ஆன பிற்பாடு, இது சுழற்சியினுடைய வேகம் கொண்டு விண்ணிலே செல்லக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையையும், தனக்குள் கவர்ந்து, அந்த விஷத்தின் ஆற்றலை அது பொசுக்கி சூரியனாக மாறுகின்றது.

அது சூரியனாக மாறும்போதுதான், இன்று நாம் பார்ப்பதெல்லாம், பாதரசம்தான், வெய்யிலாகப் பார்ப்பதும் பாதரசம்தான், ஒரு பொருளுக்குள் இருப்பதும் பாதரசம்தான். அதிலே பலவிதமான ரசங்கள் உண்டு,

சூரியனின் பூமியோ குளிர்ந்திருக்கின்றது.

அதிலிருந்து தோற்றுவித்த அந்த உணர்வின் தன்மைதான் இது எப்படி ஆரம்பத்திலே நீராகி கோளாக மாறியதோ இதைப்போன்றுதான் இந்தப் பிரபஞ்சத்திலே, சூரியனில் விளையவைத்த இந்த உணர்வின் தன்மைகள் ஆற்றல்மிக்க அணுக்கள் சூரியனின் பிடிப்பலைகளில் சிக்கியது தான் கோள்கள். அதன்வழி கொண்டு வளர்ச்சி ஆனதுதான் நட்சத்திரங்கள்

ஒரு பிரபஞ்சமாக தனக்குள் அமைத்து, அந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியன் உயிராக நின்று அது செயல்படுகின்றது. சூரியன் என்பது. நாராயணன். சூரியன். அவன் எது மேலே படுத்திருக்கின்றான். ஆதிசேஷன் – விஷம்.

ஆக, பேரண்டமே விஷத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வின் ஆற்றல்தான் வளர்ச்சி பெற்றது. விஷத்தை அடக்கி தனக்குள் அந்த ஆற்றல்மிக்க நிலைகள் சிருஷ்டிக்கும் தன்மை பெறுகின்றது நாராயணன்.

அதனால்தான் நாராயணன் - சூரியன் எதன் மேல் பள்ளி கொண்டிருக்கின்றான்?

விஷத்தின் மேலே.

ஒரு அணுவுக்குள் அந்த விஷம் இல்லை என்றால் இயக்கத்தின் சக்தி கிடையாது.

சூரியனைச் சுற்றியிருக்கக்கூடிய விஷத்தின் இயக்கம் தான் சூரியனை அவ்வளவு வேகமாக இயக்கச் செய்கின்றது.

சூரியன் தன் உணர்வின் தன்மை விஷத்தின் ஆற்றல் கொண்டு,
ஒவ்வொரு அணுவின் தன்மையை இயக்கி
அது உமிழ்த்திய நிலைகள் கொண்டு
பிரபஞ்சத்தை உலகத்தையே சிருஷ்டிக்கும் தன்மை வருகின்றது.