ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 2, 2015

ஞானகுருவின் பொன்மொழிகள் - December 2014

29.12.2014
நமது உயிர் நாம் எத்தகைய குணத்தை எண்ணுகின்றோமோ, அதனின் உணர்வைப் பிரித்து எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வலைகள் எதுவோ அது நம் உடலிலே இயக்கிக் காட்டுகின்றது.
28.12.2014
மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏகி, அந்த உணர்வு எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்ற நினைவின் ஆற்றலை நமக்குள் உட்செலுத்தும் பொழுது பிராணயாமம். 
27.12.2014
நமது உயிர் நமக்குள் அகக்கண்ணாக இருந்து நாம் எண்ணியதை நம் உடலுக்குள் அது அறியச் செய்கின்றது. புறக்கண் பிற நிலைகளில் நடக்கும் இந்த உணர்வை நுகர்ந்து, அந்த ஈசனான உயிருடன் காட்டப்படும் பொழுதுதான், அந்த அகம் உயிர் உள் நின்று கண்ணனாக இருந்து நம் உடலுக்குள் தெளிய வைக்கின்றது. 
26.12.2014
இந்த உலகில் வாழ்ந்து நஞ்சினை அடக்கி, உணர்வினை ஒளியாக்கி, இன்றும் இருந்து கொண்டிருக்கும் அந்த ஒளிச்சுடராக மாற்றும் “அந்த உணர்வின் அலையை” சூரியனின் காந்தசக்த்தி கவர்ந்து பூமிக்கு வருவதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் என்று காட்டினார்கள் ஞானிகள்.
25.12.2014
உயிரின் தன்மை கொண்டு, பேரண்டத்தின் உணர்வின் சக்திகளைத் தனக்குள் உருவாக்கி துருவம் சென்றடைந்தவர் துருவ மகரிஷி.
24.12.2014
மகரிஷிகள் காட்டிய கல்கி அவதாரத்தை அடைய முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

இந்த உடலே குப்பையானாலும், இந்தக் குப்பைக்குள் உணர்வின் தன்மையை மணியாக்கி, குப்பையை வயலில் போடும் பொழுது அதனின் சத்து மணியாவதைப் போன்று, பல உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்தாலும் நமது உடலுக்குள் வைரத்தைப் போல அதை மணியாக்க வேண்டும்.
23.12.2014
உடலான இந்திரலோகத்தில் பல சிருஷ்டிகளும் நடக்கின்றது. அதனதன் உணர்வுகள் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப நமக்குள் அதனின் தன்மைகள் உருவாகிவிடுகின்றது.

இந்த உடலான இந்திரலோகத்தில் நல் உணர்வுகள் அதனின் நிலைகளில் இயங்குவதை தேவாதி தேவர்கள் என்றனர் ஞானிகள்.
22.12.2014
ஒன்றுக்குள் அறிந்திடவும், ஒன்றை நீக்கிவிடவும், ஒன்றை இணைத்திடவும் ஆறாவது அறிவு பயன்படுகின்றது. 
நமது உயிரான நிலைகள் மனித உணர்வின் இருளை வென்ற அந்த மெய்ஞானிகளின் உணர்வை நாம் கவர்ந்து கொள்வதை பிரம்மமாக்கி சிருஷ்டித்து இருள் சூழ்ந்த நிலையை நீக்கி, மெய்ஞானியின் உணர்வை நம்முடன் இணைக்கும் திறன் பெற்றது ஆறாவது அறிவு.
21.12.2014
மனிதனுக்குள் இருக்கும் உணர்வின் தன்மைதான் அர்ச்சுனன். அந்த அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாக இருக்கிறான். சகல கலைகளையும் கற்றுணர்ந்தவன் அர்ச்சுனன் என்றார்கள்.
நமது உடலிலிருந்து வரக்கூடிய ஆறாவது அறிவு சகல கலைகளையும் கற்றுணர்ந்தது என்ற நிலையை உணர்த்த மகாபாரத்த்தில் இதை எடுத்துரைத்தார்கள்.
20.12.2014
நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் பிரம்மமாகி நமக்குள் "ஓ" என்று ஜீவனாக்கி "ம்" என்று சிவனாக உடலாக மாற்றிவிடுகின்றது. இதுதான் ஓம் நமசிவாய
19.12.2014
உணர்வின் இயக்கங்கள் மாற்றமாவதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சிருஷ்டிக்கும் நிலை. இயற்கையின் நிலைகள், ஒவ்வொரு உணர்வின் ஆற்றலின் நிலைகள் மாற்றங்கள் எவ்வாறு வருகின்றது என்ற நிலையை அறிந்து கொள்வதற்குத்தான் மகாபாரதத்தை வியாசக பகவான் அருளினார்.
18.12.2014
நாராயணன் என்பது சூரியன். பாற்கடல் என்பது விண்வெளி. ஆதிசேஷன் என்றால் விஷம். இதைத்தான் மெய்ஞானிகள் பாற்கடலில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன் என்று காட்டினார்கள்.
17.12.2014
மகரிஷிகள் பண்டைய காலங்களில் அவர்களது நுகரும் சக்தியால் தம் எண்ணத்தைப் பூமிக்குள் செலுத்தி, அதற்குள் இருக்கும் தாவர இனச் சத்தையும் பாறைகளின் நிலையையும் அறிந்துணர்ந்தார்கள்.
16.12.2014
குரு காட்டிய அருள் வழி கொண்டு அவர் சென்ற பாதையில், அவர் அருள் பெற்று அவர் துணை கொண்டு விண்ணின் ஆற்றல் பெருக்கவே பௌர்ணமி தியானம்.
15.12.2014
மெய்ப்பொருள் கண்ட மெய்ஞானியின் உணர்வை நாம் பின்பற்றி நமக்குள் ஆட்சி புரியும் நஞ்சினை வென்று, அந்த நஞ்சினை அடக்கி ஒளியாக மாற்றிச் சென்ற மெய்ஞானியின் உணர்வை நாம் குரு பலம் கொண்டு பருக வேண்டும்
14.12.2014
வைரம் எப்படி தன் நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சிகரமாக இருளை விலக்கி பொருள் காணும் நிலையாகக் காட்டுகின்றதோ, அதைப் போன்று விண் உலகில் வரும் ஆற்றல்மிக்க நஞ்சினை தனக்குள் மாற்றி ஒளியின் சிகரமாக என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்து மெய்ஞானிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.       
13.12.2014
நாம் மிருக நிலைகளிலிருந்து மனிதன் ஆனோம் என்பதைக் காட்டுவதற்கு மிருகத்தின் தலையை மனித உடலில் பொருத்தி முழுமுதல் கடவுள் மனிதன் என்றனர். முதல் கடவுள் என்றால் நாம் எண்ணியதைச் செயல்படுத்தும் முதன்மை பெறுகிறோம்.
12.12.2014
இயற்கையின் ஞானங்கள், கடந்த காலங்களில் வெளியிட்ட அந்தச் சக்திகள் இன்றும் அழியவில்லை. நம் குரு காட்டிய அருள் வழி கொண்டு தாவர இனச் சத்துக்களும், உயிரின் இயக்கங்களும் உணர்வின் இயக்கங்களும், உணர்வின் மாற்றங்களும் நாமும் அறிந்துணர முடியும்.
11.12.2014
தாவர இன சத்து ஐம்புலனறிவு கொண்டது. அந்தப் புலனின் சத்தை மிருகங்கள் உணவாக உட்கொள்ளும் பொழுது அதனின் சத்தே, அதனின் மணமே, எண்ணமாக ஆகின்றது.
10.12.2014
மனிதனான நாம் இயற்கையில் விளைந்த நிலையை மாற்றி
அதை வேக வைத்து, திசை திருப்பி, உணர்வின் சுவையாக்கி,
அச்சுவையின் மணத்தால் எண்ணத்தை உருவாக்கி,
அந்த எண்ணத்தின் மகிழ்ச்சி நிலைகள் கொண்டு நாம் எண்ணும் பொழுது அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் உருவாகி, அந்நிலைகளால் எண்ணத்தால் எண்ணும் பொழுது அந்த ஆனந்தமான சுவாசத்தை நாம் எடுத்து, அந்த உணர்வின் மகிழ்ச்சியான நிலைகளில் நம் எண்ணம் சொல் இவையெல்லாம் இயக்கச் சக்தியாக மாற்றிக் கொள்கிறது.
09.12.2014
நமது உடலுக்குள் நாம் எண்ணிய எண்ணங்கள் வித்தாகப் பதிவாகின்றன. நமது உடல் நிலத்தைப் போன்றது. 

நாம் பதிவு செய்த உணர்வின் எண்ணங்கள் தன் தன் இனத்தைக் கவர, நம் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி பரமாத்மாவிலிருந்து இழுத்துத் தனது ஆத்மாவாக மாற்றும்.
08.12.2014
உயிரின் தன்மை எப்படி இயங்குகின்றது என்றும்,
நாம் கொடுப்பதை நம் உயிர் எப்படி ஜீவனாக்குகிறது என்றும்,
ஜீவ உணர்வின் அணுக்களை நமக்குள் எவ்வாறு விளைய வைக்கிறது என்ற உண்மைகளை நாம் அறிந்து கொள்ள பேராற்றல்மிக்க இச்சக்திகளை காவியங்களாகத் தீட்டியவர்கள் மகா ஞானிகள்.
07.12.2014
பிறருடைய நலம் காக்க, அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை  உருவாக்கினால் நமக்குள் நலம் காக்கும் சக்தி வளர்கின்றது. தீமையை உருவாக்கும் உணர்வுகள் வளராது தடைப்படுத்துகின்றது.

இதைத்தான் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று கீதையிலே கூறப்பட்டுள்ளது.
06.12.2014
ஞானிகளின் அருள் சக்திகளைக் கூட்டிக் கொண்டால் புறச் செல்வத்தை நுகரும் தன்மை இழக்கப்படுகின்றது. வேதனை என்ற உணர்வை இழக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. மெய்ஞானிகளின் அருள் உணர்வை வளர்க்கும் ஆற்றல் பெருகுகின்றது.
05.12.2014
நஞ்சினை வென்றிடும் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து, நாம் விடும் மூச்சலைகள் மனித உடலில் விளைய வைத்த நஞ்சினை வென்றிடும் சக்தியாக மலர வேண்டும்.
04.12.2014
மனித வாழ்க்கையில் நஞ்சினை ஒடுக்கி ஒளியாகச் சென்றது வேகாநிலை. அந்த வேகாநிலையைப் பெற ஒவ்வொரு நிமிடமும் நாம் மகரிஷிகளின் அருள் ஒளியைச் சேர்த்து, நாம் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலைவிட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் ஆன்மாக்களை, விண்ணுலகமான சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்திடச் செய்யவேண்டும்.
03.12.2014
ஒரு கனம் கொண்ட கடினமான தேரை நாம் அனைவரும் சேர்ந்து எப்படி இழுக்கின்றோமோ இதைப் போன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஞானியின் எண்ணத்தை வலுவேற்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியைத் தூண்டி எல்லோரும் சேர்ந்து ஏக்க உணர்வுடன் இருக்கும் பொழுது ஆற்றல்மிக்க மகரிஷிகளின் உணர்வலைகள் நமக்குள் பாய்கின்றன.
02.12.2014
புழுவிலிருந்து மனிதனாவதற்கு, மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உணர்வும் ஆற்றலாவதற்கு உயர்ந்த தாவர இனச் சத்துகளே காரணமாக இருந்தன.
01.12.2014
மெய்ஞானிகள் அனைவரும் தன் வாழ்க்கையில் எதிர் கொண்ட நிலைகள் கொண்டு, தனக்குள் தீமை விளைவித்த அச்சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி, நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக்கி, ஒளியின் சிகரத்தால் பொருள் கண்டுணர்ந்து தெளிந்திடும் ஆற்றல் பெற்று உணர்வின் தன்மையை வளர்த்து உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள்.