ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2015

பேரானந்த நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்றுதான் நான் விரும்புகின்றேன் - ஞானகுரு

உங்களை அறியாது வந்த தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட,  யாம் உபதேசிக்கும் அருள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யும் இந்த நிலையை நீங்கள் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு
உங்கள் வாழ்க்கையில் நினைவு கொண்டு எண்ணும் போது,
தெளிந்திடும் நிலையாக
குரு அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

இருளைப் போக்கும் உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் பெருகும். அது பெருக வேண்டும் என்றே உங்களுக்குள் கிடைக்கச் செய்வதற்கு உங்கள் உயிரை ஈசனாக மதித்து அவன் கட்டிய கோட்டை உங்கள் உடல் என்று யாம் மதிக்கின்றோம்.

உங்களுக்குள் கட்டிய கோட்டைக்குள் பல உணர்வு கொண்டு நல்ல குணங்களின் சக்தி உங்களுக்குள் உண்டென்றும், அந்த அருள் நான் பெறவேண்டும் என்றும், குரு அருள் உங்களுக்குள் கிடைக்க வேண்டும் என்றும் உங்களை தியானிக்கின்றேன்.

அந்த தியானத்தின் நிலைகள் கொண்டுதான் மகிழ்ச்சி பெறும் தன்மையும் அந்த பேரானந்தநிலை பெறும் தன்மையும் வருகின்றது.

ஏனென்றால், எனக்குள் பல தீமைகள் செய்த உணர்வுகள் உண்டு. தீமைகளான உணர்வுகள் எனக்கு தீமை உணர்த்தக்கூடிய உணர்வுகள் உண்டு. இதைப்போல ஏனைய மனிதர்கள் அனைவருக்குள்ளும் உண்டு.

அருள் ஞானியின் உணர்வை நாம் தெரிந்துகொண்டோம் என்றால் நமக்குள் தீமை செய்யும், தீமையை விளைய வைக்கும் அல்லது உணர்த்தும் நிலை உணர்த்துவதுபோல காட்டிவிட்டு,
அந்தத் தீமையான உணர்வுகள் வளராது
நமக்குள் நன்மை செய்யும் சக்தியாக மாறும்.

அப்படி நன்மை செய்யும் சக்தியாக மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் தியானப் பயிற்சி என்று கொடுத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

இப்பொழுது கல்வியில் பாடசாலைகளில் நாம் படிக்கும்போது ஒன்றை - இன்னது இன்னது செய்யும் என்று விஞ்ஞான அறிவால் நாம் கண்டுணர்கின்றோம்.

ஆனால், கண்டுணர்ந்தாலும் TECHINICAL வழியில் ENGINEERகள் இதனுடைய நிலை வரும்போது
ஒரு இயந்திரம் - இதனுடைய ஓட்டம் எது?
என்று சித்திக்கப்படும்போது
இதற்குண்டான நிலைகளைச் சீர்படுத்தும் நிலைகளைச் செய்து
அதனின் இயக்கங்களைச் சீராக்குகின்றார்கள்.

இதைப்போல அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்களுக்குள் வரும்போது, உங்களை அறியாது இயக்கச்செய்யும், திசையை மாற்றச் செய்யும் உடலையும் அல்லது அந்த உணர்வின் சக்தியையும் சீர்படுத்தும் நினைவாற்றல், அந்த ஆற்றல்கள் உங்களுக்குள் பெருக வேண்டும் என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.

உதாரணமாக, இன்று சாதாரணமாக எனக்கு என் நண்பரைப் பிடித்துவிட்டால் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆனால், நண்பரை எனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் கஷ்டப்படுவதை எல்லாம் கண்டு நான் ரசிப்பேன். பெரும்பகுதி எல்லோருக்கும் இது இப்படித்தான் உண்டு.

அந்த மாதிரி ரசிக்கப்படும்போது, பிறர் கஷ்டப்படுவதைக்கண்டு நாம் ரசிப்போமே என்றால் அவர் உடலிலே விளைந்த கஷ்டம் எல்லாம் நமக்குள் அது ரசனையாக வந்துவிடுகின்றது.
பின் அதனின் உணர்வுகள் நமக்குள் விளைந்து
நன்மை செய்யும் நிலைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

ஆகையினால் நம்மை அறியாது ஒருவர் மேல் பகைமை கொண்டால் அவர்களை அடிக்கடி நாம் எப்படி எண்ணுகின்றோம்?
அவன் கஷ்டப்படுகின்றான்,. தொல்லைப்படுகின்றான்
என்று பார்த்தோம் என்றால் உடனே நாம் மகிழ்ச்சி பெறுவோம்.
இது எல்லா மனிதருக்குண்டான குணம்.

ஆனால் அத்தகைய கஷ்டமான உணர்வுகள் நாம் கேட்டுக்கொண்டு இருந்தோம் என்றால் நமக்குள்ளும் அதே கஷ்டம் பெருகி, நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை அழிந்துவிடுகின்றது.

ஆகவே, நம் குருநாதர் காட்டிய வழிகளில்,
அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும்,
உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
மெய்ப்பொருள் காணவேண்டும் என்று எண்ணி
அதில் நான் மகிழ்ச்சியைச் செலுத்துவேன் என்றால்
எனக்குள் வரும் தீமைகள் அகற்றி,
எனக்குள் நல்ல உணர்வின் தன்மை ஓங்கி வளர்ந்து,
அருள்ஞானியின் உணர்வு ஊக்கச்சக்தியாக எனக்குள் மாற்றும்
என்ற இந்த நிலையைத்தான் குரு எனக்கு உணர்த்தினார்

ஒரு வலுகொண்ட நிலையையும் கரைக்கும் சக்தி கொண்டு  ஒரு கரையான் அதனுடைய மலத்தை அதன் மேல் இட்டு இயற்கையில் விளைந்த அந்த சத்தை ஆவியாக மாற்றி அது உணவாக உட்கொள்கின்றது.

இதைப்போல தீமைகளை அகற்றி அந்தத் தீமைகளைக் கரைத்த அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தி இந்த உணர்வின் நினைவுகொண்டு வரப்படும்போது, இதை இயக்கச் சக்தியாக மாற்றி
உங்களுக்குள் இருக்கும் தீமைகளை,
கரையானாக அது கரைத்து,
அருள்ஞானியின் உணர்வுடன் நீங்கள் மகிழ்ந்து
அவர்கள் அடைந்த பேரானந்த நிலையை நீங்கள் அடைய வேண்டும்
என்றுதான் நான் விரும்புகின்றேன்.
அந்த மகிழ்ச்சியைத்தான் உங்களிடம் நான் காணவேண்டும்.

குரு அருளை உங்களுக்குள் கண்டு நான் ஆனந்தப்பட வேண்டும். நான் மட்டும் என்று எண்ணாது இதைக் கேட்டுணர்ந்தோர் நீங்களும் இந்த வழியில் சென்று பாருங்கள்.

வராகன் (பன்றி) அது சாக்கடையைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்கின்றது. நாம் அனைவரும் சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் நுகர்ந்து அறியும்போது வராகன் சாக்கடையைப் பிளந்தது போன்று, தீமையான உணர்வுகளைப் பிளந்திடும் ஆற்றல் நீங்கள் பெறுகின்றீர்கள்.

அருள் ஞானியின் உணர்வுகளை நீங்கள் பெறுவீர்கள். உங்களுக்குள் அது சென்று, அவர்கள் கண்ட மகிழ்ந்த உணர்வான நிலைகள் நீங்கள் பெறுவீர்கள். எமது அருளாசிகள்.