உங்களுக்குள் அந்த மெய் ஞானத்தை வளர்ப்பதற்காக வேண்டி அந்த அகஸ்திய மாமகரிஷியின்
அருள் ஆற்றலைப் பதிவு செய்கின்றோம்.
அப்படிப் பதிவு செய்த பதிவின் வித்தைத்தான் உங்களுக்குள் இந்த ஆற்றலை நீங்கள்
கிரகித்து
புறத்திலிருந்துதான் இழுக்க முடியுமே
தவிர,
உள்ளுக்குள் இருந்து உந்திப் பெறுவது
கடினம்.
நம் உடலில் எண்ணிய அந்த சக்தியைத்தான் சேர்க்க முடியும்.
இன்று ஒரு மரத்தின் சத்தான நிலைகள் வரப்படும் பொழுது விஞ்ஞான அறிவைக் கொண்டு
என்ன செய்கின்றோம்?
பல பொருள்களை உருவாக்கி (உரம்) மண்ணிலே போட்டு, அதற்குத் தகுந்த நீரை
விட்டவுடன் அது ஆவியாகப் போனவுடன் பூமியின் ஈர்ப்பலைக்குள் அதனுடைய சக்திகள் மாறி
ஆவியாகி நீருடன் கலந்து மரத்திற்குள் செல்லும்.
உரம் இணைந்த பின்தான் காற்றிலிருந்து தன்
இனத்தைக் கவர்ந்து கொழு கொழு என்று இருக்கும்.
உரம் அதிகமாகப் போட்டால் இதை வேக வைத்துவிடும்.
உரம் அதிகமாகப் போட்டால் எல்லாவற்றையும் கருக்கிவிடும்.
அதைச் சிறிதளவு போட்டு, அதற்குத்தக்கவாறு ஆவியாக மாறி மரத்துடன் ஒட்டி தன் இனத்துடன் சக்தியை இழுக்கும். இல்லாவிட்டால்
இதையும் கொன்றுவிடும்.
நீங்கள் எல்லாச் சக்தியும் பெறவேண்டும் என்று மெய்ஞானியின் சக்தியை (உரத்தை)
அதிகமாகப் போட்டுவிட்டால் என்னவாகும்? இது மாதிரி கூடாது என்பதற்காகத்தான் சிறுகச்
சிறுக கொடுத்துக் கொண்டுள்ளோம்.
அவர்களுக்கெல்லாம் தெரிகிறது. எனக்குத் தெரியவில்லையே என்று சிலர்
சொல்வார்கள். இதைத் தாங்கக்கூடியவர்களுக்கு இதைப் பதிவு செய்யும் பொழுது இந்த
ஆற்றலைப் பெறமுடிகின்றது.
சக்தியைக் கொடுத்தாலும் பிரித்தாளும்
சக்தியின் நிலைகள் குறைவாக
இருப்பதனால் சிலருக்கு அதை மூடிக் கொண்டேயிருக்கின்றது. நாம் சிறுகச் சிறுக எடுத்துத்தான்
பெறமுடியும்.
திடீரென்று எடுத்துக் கொண்டால் இந்த மனித உடலில் எடுத்துக் கொண்ட உணர்வுகள்
அதனுடன் கலந்திருப்பதால் இது முழுமையாகப் போய்விட்டால் எதனுடன் கலந்து எண்ணத்தைப்
பதிவு செய்திருக்கின்றனரோ, பின் சிந்தனையை இழக்கச் செய்துவிடும்.
ஆகையினால், இதை மாற்றாதபடி இது சிறுகச் சிறுகச் சேர்ந்து நாம் எடுக்கும் புது உணர்வுடன் நினைவலைகளைக்
கொண்டு வருவதுதான் பொருந்தும்.
நாம் புறத்திலிருந்து எதையுமே அதை திடீரென்று மாற்றிவிடும் சக்தி செய்வது
தவறு.
ஆகையினால் தான் அவர்வர்கள் உணர்வுக்குத் தக்கவாறு நமது குருநாதர்
எப்படி எமக்குத் தாங்கும் சக்தியைக்
கொடுத்தாரோ
அதைப் போன்று பல ஆயிரம் பேர் இருந்தாலும்
அனைவருமே அந்த அருள் சக்தியைப் பெற்று
உங்களுக்குள் அறியாது சேர்ந்த, அறியாது வரும் துன்பத்தைப் போக்கவல்ல ஆற்றலாக நீங்கள்
மாறவேண்டும் என்றுதான் யாம்
பக்குவப்படுத்திக் கொடுக்கின்றோம்