வக்கீல்கள் எல்லாம் படித்துவிடுவார். சட்டத்தைப் படிப்பார். ஆனால் அவரிடம்
ஏராளமான நூல்கள் இருக்கும். கால நிலை வரும்பொழுது அதனுடைய உணர்வுக்கொப்ப படித்துக்
கொண்டே இருப்பார்.
காலநிலை - சூழ்நிலை சந்தர்ப்பம் எப்படி ஆனது? குற்றத்திலிருந்து இவனை எப்படிப் பிரிப்பது? என்பதுதான் வக்கீலினுடைய வேலை.
நன்மை செய்யும் உணர்வுகளைக் காக்கவேண்டும் என்ற உணர்வு கொண்டு அந்த நூல்களைப் படித்து
அவனைக் காக்கும் நிலை வந்தால்
வக்கீலையும் காக்கும் நிலை வரும்.
ஆனால், குற்றம் செய்தோரைக் காப்பாற்ற வக்கீல்கள் வாதிடலாம். காசையும்
பெற்றிடலாம். இந்த உணர்வுகள் எவருடைய துன்ப உணர்வுகளை உருவாக்கினாரோ இது முழுமையாகும்போது
என்ன ஆகும்?.
தீமை செய்வோர் மகிழ்வார்.
ஆனால், நன்மையின் நிலைகளில் உள்ளோர் சோர்வடைவர்.
அவனின் உணர்வு இங்கே பாயும்.
தீமை செய்யும் உணர்வுகள் இங்கே
சேரும்.
நன்மை மாறி விஷத்தின் தன்மை கொண்டால் என்ன ஆகும்? பாதாம் கீர் நல்லதுதான்
ஆனால், அதில் விஷம்பட்டால் அதை நாம் உட்கொண்டால் நம்மை மடியச் செய்துவிடும்.
நல்ல மனம் கொண்டவன் வேதனையை நுகர்கின்றான். அந்த நல்ல மனம் விஷம் தோய்ந்து கெடுகின்றது.
எவரால் இத்தகைய நிலை வருகின்றது? என்று உற்று நோக்குகின்றான். “அடப்பாவி, எனக்கு நீ தான்
துரோகம் செய்தாய்” என்று பதிவானபின் அது மீண்டும் மீண்டும் நினைவிற்கு வரும். ஆக, அந்த நிலைகள் பாதகமான நிலையை
உருவாக்கும்.
தீமை செய்பவர்களையும், குற்றம்
உள்ளவர்களையும்
இன்று சட்டங்கள் இயற்றிக் காக்கலாம்.
ஆனால், இவனுக்குள் நல்லதைக் காக்கத் தவறிவிடுவான்.
வக்கீல் குடும்பங்களில் பார்த்தால் தெரியும்.
அங்கே தீமையின் உணர்வு வந்து கஷ்டப்படுபவர்களைப் பார்க்கலாம்.
இவர் சோர்வடையும்போது
இவருடைய மக்கள் இவரைத் தாக்கும் உணர்வுகள் வரும்.
சுற்றுபுறச் சூழல்கள் இவருக்கு எதிரி என்ற நிலையை உருவாகும்.
வாழ்க்கை குறுகிவிடும்.
தீமையை அகற்றும் உணர்வின் தன்மை வலுபெற்றால் அவர் தன்னைக் காக்கும் நிலை
இருக்கும்.
திறமை என்ற நிலைகள் கொண்டு, தீமைகள் எப்படி என்று உணர்ந்து தீமை உள்ளவரை தீமை
இல்லாதவர் என்று வாதிட்டு ஜெயிப்பவர்களுக்கே இன்று நீதிபதி பதவி கிடைக்கின்றது.
நீதிபதி பதவி வரும்பொழுது இந்த உணர்வின் அனுபவம் பெற்றபின் எதிர் வக்கீலின்
உணர்வைக் கண்டபின் இந்த நுண்ணிய அறிவு கொண்டு தர்மத்தின் எல்லை வைத்தால் நீதியைக் காக்க முடியும்.
இன்று நீதிபதியாக உள்ளவர்களோ செல்வத்திற்குத்தான்
அடிமையாகின்றனர். அநீதியைத்தான் அவருக்குள் வளர்த்துக்கொள்ள முடிகின்றது.
அநீதியின் வழியில் செல்வம் தேடுவோர் குடும்பங்களில் மனநோய் அதிகரித்து அந்த
நீதிபதியின் உடல்நலம் கெடும். முடிவில்
நீதிபதியின் உடல் இந்த மண்ணுக்குத்தான் செல்லுகின்றது.
இந்த உடலை வளர்க்க செல்வத்தைத் தேடினார். செல்வம்
வந்தாலும், அந்தச் செல்வத்தால் எதிரியின் உணர்வுகளே அதிகரித்து விடுகின்றது.
சேர்த்துக் கொண்ட உணர்வுகள் மனிதனின் சிந்தனையைச் சிதறச் செய்து சிந்தனையற்ற
செயலின் தன்மை உருவானபின், இந்த உயிர் “நீ அதையே அனுபவி” என்று விஷமான உயிரினங்களுக்குள் செலுத்திவிடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.