இராமன் நவமியிலே பிறந்தான் என்ற காவியத்தை வான்மீகி
எழுதுகின்றார்.
அதாவது,
ஒன்பது கோள்களின் தன்மை கொண்டு இந்த உடலின் தன்மை அமைந்தது.
இந்த
உடலுக்குள் எடுத்துக்கொண்ட நிலைகள் கோள்களிலிருந்து வெளிப்படும் உணர்வின்
சத்தைத்தான் நாம் உடலாக வைத்து, இந்த உடலுக்குள் விளைந்த இந்த உணர்வின் தன்மைகள்
அணுக்கள் நட்சத்திரங்களாக மாறுகிறது.
இந்த
நட்சத்திரங்களின் தன்மை நம் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது நாராயணன் இராமனாகப்
பிறக்கின்றான்.
நம்
உயிரோ – சூரியன், நாராயணன்.
அதே
சமயத்தில் நாராயணனின் தொடர் கொண்டவன் – ஈசன்.
நாம்
எடுத்துக்கொண்ட உணர்வின் சத்து நம் உடல் – கோள். நமக்குள் எடுத்துக்கொண்ட உணர்வுகள் இயக்கச்
சக்தியாகப்படும் போது நட்சத்திரம்.
எல்லாம்
சேர்த்து உயிருடன் சேர்க்கப்படும்போது – இராமன். இராமன் சாந்தமானவன்.
ஆனால்,
விஷ்ணுவோ – அக்னி, நாராயணனோ - கோபமுள்ளவன். ஆக அதெல்லாம் நெருப்பு.
நாம்
எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மை
இந்த நெருப்புக்குள் சமைக்கப்பட்டு
உயிருடன்
சேர்த்துக்கொண்ட இந்த உணர்வுதான் இராமன்.
இராமன்,
பரசுராமன், பலராமன் அந்த இராமன் என்று பலராமன்கள். எடுத்துக்கொண்ட எண்ணத்தின்
தன்மை தான் அங்கே செயல்படுகின்றது என்ற நிலையில்,
நாம்
எந்தெந்த உணர்வின் சக்தியை நமக்குள் எடுக்கின்றோமோ
அவையனைத்துமே
நம் உயிருடன் சேர்க்கப்படும்போது
இராமனாக எண்ணமாகப் பிறக்கின்றது.
ஆக,
இராமன் என்பது எண்ணம். எண்ணத்தின் வலிமைகொண்ட அந்த நிலைக்கு இராமனின் பக்தன்,
தூதுவன் - ஆஞ்சநேயன்,
அதற்குள் ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு எண்ணத்தின் ஒவ்வொரு உணர்வின் செயல்கள்
எவ்வாறு செயல்படுகின்றது என்று வான்மீகி காட்டினார்.
இப்பொழுது
மனிதனாக இருக்கக்கூடிய நான் எண்ணுவது, நான் பேசுவது இராமன். எந்த எண்ணம் எந்த
நிலைகளில் நாம் எடுத்துப் பேசினாலும், இது இராமனின் செயல். இது சாந்தம்.
ஆனால்,
இந்த உணர்வின் தன்மை பிறருடைய உணர்வுகளில் சேர்க்கப்படுகின்றது.
இராமனுடைய
வலுவை ஊடுருவிச் செயல்படுத்தி
இயக்கச் செய்வது, இயக்கத்தன்மை பாய்வது -
ஆஞ்சநேயன்.
ஒவ்வொரு
உணர்வின் தன்மையும் எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையும். சூரியன் எப்படி ஒரு பிரபஞ்சமாக்கியதோ
இதைப்போல உயிரணு ஆனபின் உணர்வின் நிலைகள் கொண்டு எண்ணங்களாக எவ்வாறு வடிவெடுத்தது
என்ற நிலையைத்தான் வான்மீகி இராமாயணத்தை எழுதினார்.