ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2015

இரவு தூங்கும்பொழுது கெட்ட கனவு ஏன் வருகின்றது?

திட்டியவர்களை நினைத்தால், என்னை இப்படியெல்லாம் திட்டினான் என்ற சோர்வு வந்து
அன்று இருக்கும் வேலைகள் எல்லாம் கெட்டுவிடும்.
நம்மால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது.
வீட்டில் ஏதாவது சொன்னால் சண்டைக்குப் போவோம்.
ஏதாவது சொன்னால் நண்பரிடத்திலும் பகைத்துக் கொள்வோம்.

உங்கள் வாழ்க்கையில், காலையிலிருந்து சண்டை போடுபவர்கள், வெறுப்படைந்தவர்கள், வேதனைப்படுகின்றவர்களை உங்களுக்குச் சம்பந்தமில்லாமலே பார்க்கின்றீர்கள்.
அவைகளைப் பதிவு செய்துகொண்டபின்
அந்த உணர்வுகள் இரவு நேரத்தில் வரும்.

இரவு தூங்கும்பொழுது நீங்கள் யாரிடமோ சண்டை போடுகின்ற மாதிரி கனவு வரும். இரவு தூக்கத்திலிருந்து எழுந்துவிடுவீர்கள்.

நுகர்ந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களுக்கு எதிர்மறையான நிலைகள் வரும்போது பயமும் பதட்டமும் வந்து திடீரென்று எழுந்துவிடுகின்றோம்.

நாம் நுகர்ந்த உணர்வை நமது உயிர் இரவில் இயக்குகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை அணுக்களுக்கொப்ப அதன் உணர்வை நுகர்வதற்கொப்ப செயல்கள் வருகின்றது. இந்த இயற்கையின் நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையில், நாம் எந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ, புலனடங்கித் தூங்கும் பொழுது அந்த அணுக்களின் உணர்ச்சிகள் அதிகமாகத் தூண்டும். அது ஆன்மாவாக மாறும்.

இது இரண்டும் கலந்து உயிரிலே படும் பொழுதுதான், எலக்ட்ரானிக்காக மாற்றி பல நிலைகளை நாம் தெரிந்து கொள்கின்றோம்.

தூக்கத்தில் இருந்தாலும்
சும்மா படுத்திருந்தாலும்
நாம் அமைதியாக இருக்கும் பொழுது,
இந்த ஆன்மாவில் உள்ளபடி,
நம் மனநிலையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.

அந்த மாதிரி நேரங்களில், அந்த உணர்வை, தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி ஆத்ம சுத்தி செய்து, அதை அகற்றும்படி நாம் செய்ய வேண்டும்