உங்கள் குடும்பத்தில் குழந்தைகளுடைய செயல்களில் சில குறைபாடுகள் வந்தாலும் குறையாக அவற்றை எண்ண வேண்டாம்.
சந்தர்ப்பம் அவர்களை இயக்குகின்றது.
அந்தச் தீய சந்தர்ப்பத்தில் இருந்து அவர்கள் விலக
வேண்டும்,
மெய்ப்பொருள் காணும்
மெய்ஞானிகள் ஆகவேண்டும்,
அகப்பொருள் அறிந்துணர்ந்து
செயல்படும் ஞானியாக வேண்டும்
என்று உங்கள் குழந்தைகளை எண்ணி,
இந்த உணர்வின் தன்மையை
“ஓம் நமச்சிவாய” “சிவாயநம ஓம்”
என்று
உங்களில் விளைய வைத்த அருள் உணர்வுகளை
அவர்களின் உடலிலே பாய்ச்சுங்கள்.
ஆகவே, இதுதான் “விஷ்ணு தனுசு”.
இந்த உணர்வின் தன்மை கொண்டு
நமக்குள் தீமைகளை அடக்கி, அதே உணர்வின் தன்மையை அங்கே ஒளியாகப் பாய்ச்சி அவர்கள் தெளிந்த மனம் பெறவேண்டும்
அருள் ஞானிகளாக வளரவேண்டும் என்று நாம் எண்ணும்போது
அவ்வழியில் நம் குழந்தைகள் அருள் ஞானிகளாக ஆக்கப்படுகின்றனர்.
ஏனென்றால், கடந்த காலங்களில் நம்மையறியாமல் நமக்குள்
தீய உணர்வுகளைச் சேர்த்துத் தான்
பழகியிருக்கிறோமே தவிர அதை நீக்குவதற்குப்
பழகவில்லை.
இன்று யாம் செல்லும் பாதை இத்தனை காலம்
உங்களுக்குள் அருள் உணர்வைப் பாய்ச்சி உங்களை உங்களை அறியச் செய்து இந்த அருளுணர்வின் துணை கொண்டு
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
உங்கள் உடலுக்குள் பரப்பி
உங்கள் குடும்பத்தில் இத்தகைய
நிலையைப் பெறச் செய்யுங்கள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
அருளிய அருள்வழிப்படி நான் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பரானேன். அவர் அருள் வழிப்படியே
உங்களையும்
துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக்குகிறோம்.
கணவன் மனைவி நீங்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தில்
இரு மனமும் ஒன்றி, வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்திட வேண்டும். ஏனென்றால்
நீங்கள் திருமணம் செய்தபின் கவர்ந்த உணர்வுகள் கொண்டு ஒன்று சேர்ந்து இணைந்து அந்த
அருள் சக்தி பெற்று வாழ வேண்டும்.
நளாயினியைப் போன்று கணவன் மனைவியை
மதித்து நடப்பதும், மனைவி கணவனை மதித்து நடக்கும் அந்த உணர்வுகள் வரவேண்டும்.
நம்மை அறியாமல் தீமைகள்
வருமேயானால், உடனே “ஈஸ்வரா” என்று அந்த துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை நமக்குள்
பெருக்கி,
குரு அருளால் நமக்குள் பகைமை
உணர்வு வராமல் மாற்றி,
அருள் ஒளியைக் கூட்டி நமக்குள்
இருள் புகாது தடுத்து,
உணர்வினை ஒவ்வொரு
நிமிடத்திலும் அருள் பாதையில், அருள் வழியில் அழைத்துச் செல்லும் அணுக்களாக நமக்குள்
உருவாக்குதல் வேண்டும்.