அதிகாலையில் விழித்தவுடன் உங்கள் நினைவு எங்கே இருக்கவேண்டும்?
உங்கள் உயிருடன்
ஒன்றி இருக்கவேண்டும்.
அம்மா அப்பாவை
முதலில் நினையுங்கள். புருவ மத்தியில் நினைவை வைத்து உயிருடன் தொடர்பு கொண்டு
துருவ நட்சத்திரத்தை எண்ணிப் பழக வேண்டும்.
கண்களைத் திறந்த நிலையிலேயே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதும்
படரவேண்டும், உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா
அணுக்களிலும் படரவேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.
திருப்பித் திருப்பி 5 தடவை இதைச் சுழற்றுங்கள். பின் கண்களை மூடி உடலுக்குள் இதைக் கலந்து பழக
வேண்டும். இதுதான் ஆத்ம சுத்தி.
கணவன் மனைவிக்கு
அந்த சக்தி பெறவேண்டும் என்றும், மனைவி
கணவனுக்குப் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் இரண்டு பேரும் செலுத்திப்
பழகவேண்டும்.
எங்கள் அம்மா
அப்பா துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். எங்களுக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் மாறவேண்டும், அவர்கள் மகிழ்ந்து வாழவேண்டும்.
அவர்கள் அருள் என்றுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் இப்படி இணைத்துப் பழகவேண்டும்.
எங்கள்
குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். உணமையின் உணர்வை
அறியும் அருள் சக்தியும் உலக ஞானமும் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணிப்
பழகவேண்டும்.
எங்கள்
குலதெய்வங்களான முன்னோர்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்
என்று ஆன்மாக்களை விண்
செலுத்திப் பழகவேண்டும்.
உலக மக்கள்
அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று, அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெறவேண்டும்
என்று தவம் செய்து பழக
வேண்டும்.
இரவு படுக்கப் போகும்போதும் இதே மாதிரி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று
என்ணிக் கொண்டே இருந்தீர்கள் என்றால்
அப்படியே தூக்கம்
வந்துவிடும்.
ஆனந்த நிலையாக
இருக்கும்.
மான் புலியைப் பார்த்து,
எப்படி மானின் உணர்வு புலியாக ஆனதோ
இதைப்போல, அருள்ஞானிகளின் உணர்வை நீங்கள் எடுத்துப் பழகிக் கொண்டால்,
அவர்கள் எப்படி ஒளியின் சரீரம் ஆனார்களோ
நிச்சயம் அந்த உணர்வை வளர்த்தால் ஒளியின் சரீரம்
ஆகின்றீர்கள். எமது அருளாசிகள்.