ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2013

ஏகாதசி விரதம்

1. ஏகாதசி விரதம்
பிறருடைய உணர்வுகள் நமக்குள் வராதபடி, நாம் எல்லோரும் ஏகாந்தமாக இருக்கும் அந்த நிலை வரும்பொழுது,  பத்தாவது நிலை.
     
காலையில், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறும் பொழுது, எப்பொழுதுமே பகைமையை மறந்து,
அருள் உணர்வை உணவாக உட்கொள்ளும் பொழுது,
தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வராது,
விரதம் இருக்கின்றோம்.
இதுதான் ஏகாதசி விரதம்

இப்பொழுது நாம் என்ன செய்கின்றோமென்றால், 
தீமையை நமக்குள் வளர்த்துக் கொண்டு,
நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்காமல் விரதம் இருக்கின்றோம். 
எல்லாம் தலைகீழ் பாடமாக, மாறி விட்டது.

ஆகவே, காலையில் ஒவ்வொரு நாளும், இந்த ஏகாதசி விரதம் தேவை. அதற்குப்பின் வருவதை ஆத்ம சுத்தி செய்து, நமக்குள் இருள்சூழாத நிலையில் இந்த வாழ்க்கையை முழுமையாக்கி, இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலை அடைய, இங்கே உங்களுக்கு அருளைப் பெருக்கச் செய்யவும், வழியறிந்து செயல்படும் தன்மையும், சிந்தித்துச் செயல்படும் தன்மையும், அருள் வழியில் வாழும், அருள் ஞானம் பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவே, இதை உபதேசிப்பது.

இது உங்களுக்குள் விளைந்தபின், உங்களைச் சார்ந்தோருக்கும் இதனைப் பெறச் செய்யுங்கள். வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ, அதைப் போன்று, உங்கள் சொல் அவருக்குத் தெளிவான நிலை பெறும்படிச் செய்யுங்கள். அவர் தெளிவான நிலை பெறவேண்டுமென்று, எண்ணும்பொழுது, நம் மனம் முதலில் தெளிவாகின்றது. 
2. ஞானகுருவின் அருளாசி
நமது குரு காட்டிய அருள் வழியில்,
நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று,
இந்த வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்,
கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் பெற்று,
தெய்வீகப் பண்பும், தெய்வீக அன்பும்,
தெய்வீக சக்தியும் பெறும் அருள்ஞானம் பெற்று,
தங்கத்தைப் போன்று மனம் மங்காத நிலையும்,
வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும், செயலில் ஜொலிப்பும்,
வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற்று,
மலரைப் போன்ற மனம் பெற்று,
மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று,
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று,
துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து,
இப்பிறவியில், ஏகாந்த நிலை என்ற நல் வாழ்க்கை வாழ்ந்து,
என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் உணர்வுடன்,
உலக இருளை நீக்கிடும் அருள்ஒளி என்ற உணர்வு கொண்டு,
பிறவியில்லா நிலை அடைந்திடவும்,
குரு அருள் துணை கொண்டு,
மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, அருள்வழி வாழ்ந்திடவும்,
எமது அருளும், மாகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும்,
எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும்,
உங்கள் அனைவருக்கும்,
உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.