ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2013

பேரண்டமும் பெருவீடும்

(பக்கம் 4-10)
வாழ்க்கையில், நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் சந்தோசமாகப் பேசுகின்றோம், சலிப்பாகப் பேசுகின்றோம், சங்கடமாகப் பேசுகின்றோம், கோபமாகப் பேசுகின்றோம், குரோதமாகப் பேசுகின்றோம், வெறுப்பாகப் பேசுகின்றோம், வேதனையாகப் பேசுகின்றோம், இவ்வாறெல்லாம் யார் பேசுவது?

நாம் ஒருவருக்கு பணம் கொடுத்து உதவி செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவரும் ஒரு மாதத்தில் தருகிறேன் என்று வாங்கிச் செல்கின்றார். சந்தர்ப்பவசத்தால், குறிப்பிட்ட காலத்திலே அவரால் கொடுக்க முடியவில்லை.

குறிப்பிட்ட காலத்திலே, அவர் திருப்பித் தராததை எண்ணி, நம்மையறியாமல் நாம் வேதனைப்படுகின்றோம். “ஒரு மாதத்தில் தருகிறேன்” என்று சொன்னதைக் கேட்டு, நாம் பிறிதொருவரிடம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்தோம்.

“குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கொண்டுவந்து, பணத்தைக் கொடுக்க வேண்டும்” என்று சொல்லித்தானே கொடுத்தோம். ஒரு மாதமாகிவிட்டது. மேலும் பத்து நாள் சென்றுவிட்டது. ஆனால், அவர் கொண்டுவந்து கொடுக்கவில்லையே? என்ற இந்த எண்ணம் வரும். நம்மை அறியாமல் வேதனைப்படும் நிலை வருகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. நல்லதைத் தான் செய்தோம். வாங்கிக் கொண்டு போனவரும் எப்படியும் கொடுத்துவிடவேண்டும் என்றுதான் வாங்கிக் கொண்டு போனார். ஆனால், அவரின் சந்தர்ப்பம் கொடுக்க முடியவில்லை. அப்பொழுது நம்மையறியாது வேதனைப்படச் செய்கின்றது. அந்த வேதனையான எண்ணத்துடன், போய்க் கேட்கலாம் என்று போகிறோம்.

பாலிலே விஷம் பட்டுவிட்டால், அதைக் குடித்தால் நினைவிழக்கச் செய்கின்றது. சுவையான பதார்த்தத்தில் அந்த விஷம் கலந்திருந்தால், என்ன சுவையாகச் செய்து சுவையான நிலையில் சாப்பிட்டாலும், அதற்குள் மறைந்துள்ள விஷம் நம்மை மயங்கச் செய்கின்றது.

நல்ல மனத்துடன் நாம் இருந்தாலும், உதவி செய்தாலும்,
அந்தக் “காலக் கெடு” ஞாபகம் வந்துவிட்டால்,
அவரை எண்ணும் பொழுது,
இந்த வேதனையுடன் கொஞ்சம் கோபம் வரும்.
கோபம் வந்தவுடன், நாம் சிந்திக்கும் திறனை இழந்துவிடுகின்றோம்.

நேராகச் சென்று அவரைப் பார்த்தவுடன், முதலில் அந்த உணர்வு நமக்குள் வெறுப்பை ஏற்படுத்துகின்றது. அவர் மேல் வெறுப்பான உணர்வு, இந்த வேதனை வெறுப்பாக மாறுகின்றது.

முதலிலே, பண்பாக பாசமாக இருக்கும் பொழுது, அவர் கேட்ட பணம் கொடுத்தது. அவர் மேல் இருக்கக் கூடிய இந்தப் பாசம், காலக் கெடு வந்ததும், நம்மை அறியாமலே வெறுப்பாக மாறுகின்றது.

இந்த வேதனை உணர்வும், வெறுப்பான உணர்வும் நம்மை அறியாமலே நாம் சுவாசிக்கின்றோம். இது எங்கிருந்து வந்தது? அவர் கொடுக்காதபொழுது, அந்த நினைவலைகள் வருகின்றது. நாம் அவரை எண்ணும் பொழுது, வேதனையான உணர்வும், வெறுப்பும் வருகின்றது. இப்பொழுது வந்த உணர்வல்ல.

நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றுகிற வரையிலும்,
ஏதாவது ஆகாரம் கிடைக்க வில்லை என்றால் வேதனை.
அதே சமயத்தில், மற்ற ஆகாரம் கிடைத்து,
தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது,
அடுத்து தன் இனமான நிலை வரப்படும் பொழுது அதை வெறுக்கும்.
அதை வெறுத்துவிட்டு, தன் உணவை எடுத்துக் கொள்ளும்.

அதிலே தோன்றிய இந்த உணர்வின் தன்மை தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக, பரிணாம வளர்ச்சியில் இது விளைகின்றது. அப்பொழுது, அந்த உணர்வின் சத்தும், ஒரு குணத்தின் தன்மை, தன்னைக் காத்திடும் உணர்வாக வளர்ந்து வருகின்றது.

முதலில் எலியாக இருக்கின்றது. பிறகு பூனையாக வருகின்றது, அடுத்து புலியாகவும் வருகின்றது. அவ்வாறு வரும் நிலையில், அந்த உணர்வின் செயலாக மாறுகின்றது.

புலியாக வரும் பொழுது வேகமாக இருக்கின்றது. ஆகாரம் எடுக்கும் பொழுது, இது அதைத் துரத்தும். இப்படியாக வந்த நாம், இந்த குணங்கள் விளைந்து, விளைந்துதான் இப்பொழுது நாம் மனிதனாக வந்திருக்கின்றோம்.

இவ்வாரு வந்த நாம் பண்பும், பரிவும், இரக்கமும், ஈகையும் நமக்குள் இருக்கும் நிலையில், ஈகையுடன் ஒருவருக்கு உதவியாகக் கொடுத்தாலும், அந்தக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கிடைக்கவில்லையென்றால், முன்பு விளைந்த அந்த உணர்வு வெறுப்படைகின்றது. அதன்பின் வேதனைப்படுகின்றது.

வேதனையும் வெறுப்பும் இந்த உடலில் எண்ணியபின், அவரை எண்ணும் பொழுதெல்லாம் இந்த வெறுப்பான உணர்வுகள் அந்த வேதனையுடன் கலந்து வருகின்றது.

அவர் செய்த செயலை நினைக்கும் பொழுது,
“இரண்டிலே ஒன்று பார்ப்போம்” என்ற உணர்வு கொண்டு,
அவருடைய சூழ்நிலையை அறியச் செய்யாது,
அந்த உணர்வின் வேகம் நேரே சென்று கேட்கும் பொழுது,
அவர், “இப்பொழுது இல்லை, பிறகு கொடுக்கிறேன் என்கிறார்”.

“நான் சொல்லித்தானே கொடுத்தேன்” என்ற அந்த உணர்வுதான் அங்கே வரும். அவர் எந்த நியாயத்தைச் சொன்னாலும், கேட்க முடியாது.

அந்த வெறுப்பின் தன்மை அதிகமாகி அவர், “நான் கொடுக்கிறேன் என்றுதானே சொன்னேன். என்ன செய்து கொள்கிறாயோ செய்துகொள், போ” என்கிறார்.

அப்பொழுது நமக்குள் இந்த வெறுப்பு, வேதனையும் கலந்து, கோபம் அதிகமாகின்றது. இந்த மூன்று குணமும்தான் வருகின்றது. நல்ல குணத்தை நாம் என்ன செய்தும், விளைய வைக்க முடியவில்லை.

நாம் நல்ல பயிரை விதைத்து இருக்கின்றோம் என்றால், அதன் பக்கத்திலேயே களை முளைக்கின்றது. களை அருகிலே முளைத்ததனால், நல்ல பயிர் சிறந்த பயனைக் கொடுப்பதில்லை.

இது போன்று, நாம் நல்லதை எண்ணினோம். இருப்பினும் இதுபோன்று களைகள் முளைத்து விடுகின்றது. அப்பொழுது, இந்த வேதனையான உணர்வுகளக் கொண்டு, நல்ல குணத்தைச் செயல்படுத்த முடியவில்லை.

சற்றுக் கோபம் வந்து, “நீ எல்லாம் நன்றாக இருப்பாயா?” என்கிறோம். இதை அவர் கேட்கும் பொழுது, அவர் குணத்திலும் பதிந்து நாம் எண்ணிய அந்த எண்ணங்கள், அங்கே வந்துவிடுகின்றது.

“ஓம் நமச்சிவாய, சிவாய நம ஓம்”, அவர் நான் தான் கொடுக்கிறேன் என்று சொன்னேனே, என்ன செய்துகொள்கிறாயோ செய்துகொள், போ” என்கிறார்.
நாம் சொல்லிய இந்த எண்ணம்
அதே உணர்வுகள்
அங்கே போய் வெறுப்பின் தன்மை உண்டாக்குகின்றது.

இதெல்லாம் வாழ்க்கையில் வருகின்றது. நாம் தவறு செய்யாமலேயே இதெல்லாம் நம்மிடம் வருகின்றது. உதவி செய்தோம். அந்த சந்தர்ப்பம் அவரால் கொடுக்க முடியவில்லை. நமக்கு அவர் திரும்பச் சொன்னவுடன், நமக்கு ஆத்திரம் அதிகமாக வருகின்றது. அந்த ஆத்திரம் அதிகமானவுடன் என்ன செய்கின்றது?

அது சிறுகச் சிறுக விளைந்து, நம்மை எதிர்த்துப் பேசிவிட்டார் என்ற நிலையில் குரோதம் விளைகின்றது. அவரைப் பற்றி நம்மிடம் யாராவது நல்லதாகச் சொன்னால் நம்மால் கேட்க முடியவில்லை. எதிர் உணர்வு வருகின்றது. அவரைப் பற்றி மோசமாகவே பேசச் சொல்லும்.

அவருக்கு யாராவது, ஏதாவது நன்மைகள் செய்வதாக இருந்தால், அதைச் செய்யவிடாதபடி தடுக்கும் நிலையில், நம்மைப் பேசச் சொல்லும். எம்மிலிருந்து எல்லா மனிதருக்கும், இதைப் போன்ற நிலைதான். நாம் தவறு செய்யவில்லை.

ஆனால், ஒரு முறை உதவி செய்தோம். அதற்கடுத்து, கொஞ்சம் வேதனை என்ற விஷம் கலந்தபின் சிந்திக்கும் திறன் இழந்து, நாம் வழியறியாதபடி “எவ்வாறு பெறவேண்டும்” என்று சிந்தித்துப் பெறமுடியாதநிலை வருகின்றது.

ஆயிரத்தில் ஒருவர்தான் வலுவாகச் சிந்திக்கும் திறனுடன், இதிலிருந்து மீளக்கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற எல்லோருக்கும் சிந்திக்கும் திறன் இழந்து, வேதனை, வெறுப்பு, ஆத்திரம் இந்த உணர்வாக மாறும்.

ஆக, நல்லதை எண்ணினோம். இந்த உணர்வெல்லாம் நம் நல்ல குணத்தில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து, மேல்வலி, கைகால் குடைச்சல், கண்வலி, காது வலி, இடுப்பு வலி, இது எல்லாம் வலிக்கும். நாம் எத்தனை வேதனைப்பட்டோமோ. அதெல்லாம் இவ்வாறு வரும்.

இதையெல்லாம் சேர்த்து, மனிதனாக வளர்ந்த நாம் “யானை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல” நமது நல்ல குணத்தில் விஷமான உணர்வுகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து,
நமது நல்ல குணம் சிறுகச் சிறுகத் தேய்ந்து,
அழகான உடலும் தேய்ந்து,    
நம் சொல்லிலும் பேச்சிலும் தரம் குறைந்து,
நம்மை அறியாமலேயே வேதனை என்ற நிலையில் கவலைப்பட்டு, இந்த உணர்வு அதிகமாகும் நிலையில், எந்த வியாபாரத்திற்குப் போனாலும், பணம் திரும்ப வராது. சண்டை போட்டுத்தான் வாங்க வேண்டும்.

இதைத்தான், கீதையிலே “நீ எதை நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய்” என்று சொல்லப்படுகிறது. நாம் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் அன்றாட வாழ்க்கையில், இதைப் போன்று நமக்குள் சேரும் தீமைகளை அவ்வப்பொழுது சுத்தப்படுத்த வேண்டும். அதற்குத்தான், ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாம் நுகரும் உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது என்று அறிந்து, நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே வந்தோம் என்றால், எந்தத் தீமைகளையும் வெல்லாம். மகிழ்ந்து வாழமுடியும், மகரிஷிகளின் அருள் வட்டத்துடன் இணைய முடியும்.
(பக்கம் 10-13)
நாம் புழுவிலிருந்து மனிதனாக வருகின்ற வரையிலும் நாம் அறிந்து கொள்வதற்காக, அந்த சந்தர்ப்பத்தில் மிருகங்களுக்கு உடல் பலம் அதிகம். அதே போல மனித உடல் பெற்றபின், எண்ணங்களுக்கு வலு அதிகம். மிருகங்களில் யானை மிகப் பெரியது. அதே போல அதற்கு வலுவும் அதிகம்.

இதைப் போல் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரக்கூடிய சந்தர்ப்பத்தில், தன்னைக் காத்திடும் எண்ணங்கள் கொண்டு வலுவான நிலைகள் பெற்று, உடல் சிறுத்து, வலுக் கொண்ட எண்ணங்களாக விளைந்தது.

இதற்குத்தான் யானையின் தலையையும், மனிதரின் உடலையும் போட்டு விநாயகரைக் காட்டியது. மிருகங்களில் யானை மிகவும் பெரியது, வலுவானது. அதுபோல, உயிரினங்களிலே மனிதன் எண்ணத்தில் மிகவலிமை பெற்றவன். ஞானத்தின் நிலைகள் வளர்க்கப் பெற்றவன்.

தன் எண்ணத்தின் ஞானத்தின் வலிமை கொண்டு, பெரிய மலையையும், இன்று அவனுடைய சிந்தனையுடைய வலிமை கொண்டு, ஒரு நொடியில் சுக்குநூறாகத் தகர்த்து எறிகின்றான். 
தன்னுடைய சிந்தனை கொண்டு,
இன்று அணுவின் தன்மை தனக்குள் வளர்க்கப்பட்டு,
அந்த ஞானத்தின் தொடர் கொண்டு,
தன் எண்ணத்தின் வலுவால் கண்டறிந்ததைக் கொண்டு,
நூறு மைல் சுற்றளவு கொண்டதையும்
தகர்த்து எறியும் தன்மை பெறுகின்றான்
விஞ்ஞானத்தின் நிலைகொண்டு இவ்வாறு செய்கின்றான்.

அதேபோல, தன் எண்ணத்தின் வலுகொண்டு, விண்ணை நோக்கி பல இலட்சக்கணக்கான மைல் தூரத்தில், நமக்கு எட்டாத தூரத்தில் உள்ள நட்சத்திரத்தையும், தன் எண்ண வலு கொண்டு நுகர்ந்தான் மெய்ஞானி.
அப்படி அதை நுகர்ந்து, அந்த வலுவினைக் கொண்டு, இந்த மனித வாழ்க்கையில் வரும் வேதனை, வெறுப்பு,
இதைப் போல கடுமையான செயலையும் அடக்கி,
தன் எண்ண வலு கொண்டு,
விண்வெளியில் ஒளி எவ்வாறு இருக்கின்றதோ,
அவ்வாறே அவன் எண்ணங்கள் ஒளி பெற்று,
ஒரு பொருளுக்குள் மறைந்த நிலையை
ஊடுருவிக் கண்டறிகின்றான் மெய்ஞானி.

இன்று விஞ்ஞானி தான் கண்டுபிடித்த “எக்ஸ்ரே”யை, உடலுக்குள் பாய்ச்சும் நிலையில் ஊடுருவிச் சென்று, எலும்புக்குள் உள்ள ஊனையும் காட்டுகின்றது.

நரம்பைக் காட்டுகின்றது, நரம்புக்குள் உள்ள நிலையையும் காட்டுகின்றது. குடலுக்குள் உள்ள பழுதையும் காட்டுகின்றது. இதயத்தையும் எடுக்கின்றது. இதயத்தில் உள்ள பிழையையும் காட்டுகின்றது. இவன் காட்டிய அந்த உணர்வின் ஆற்றல்மிக்க எக்ஸ்ரே,
ஆக ஒன்றைப் பிளந்து, அதற்குள் நுண்ணிய அலைகள் எது இருக்கின்றதோ, அந்தக் கருவியின் துணை கொண்டு, இதை அவன் படமாக எடுத்து, நோயின் தன்மையை அறிகின்றான்.

அவ்வளவு ஆற்றல் பெற்ற விஞ்ஞானி, இதைக் கண்டுணர முடிகின்றது. அதைக் கண்டுணர்ந்து அப்புறப்படுத்த முடிகின்றது. அதைச் சரி செய்யவும் முடிகின்றது. எண்ண வலு கொண்டு நோயை நீக்கவும் முடிகின்றது.

ஆனால் இவன் உடலில் விளைவித்த, இந்த உணர்வின் சக்தியை அகற்ற, இவனுக்குச் செயலில்லை. அவன் கண்டுணர்ந்த செயலின் ஆற்றலால், அதை நிவர்த்தி செய்யவும் இயலவில்லை.

அன்று மெய்ஞானி, விண்ணில் எட்டாத தூரத்தில் இருக்கும் ஆற்றலையும் தான் கவர்ந்து,
தன் உடலில் அதைப் பாய்ச்சி,
தன் உணர்வின் நினைவலைகளை ஒன்றுக்குள் பாய்ச்சி,
எக்ஸ்ரே போன்று, ஒரு மனிதனுக்குள் எண்ணங்களைச் செலுத்தி,
எண்ணத்தை ஊடுருவி,
அவனுக்குள் இருக்கும் நோயையும், செயல் சக்தியையும்
தான் நுகர்ந்துணர்ந்து,
அதற்குத் தன் ஒளியாலே, விழியாலே,
தன் எண்ணத்தை வலுக்கூட்டிப் பாய்ச்சி,
அத்தகைய தன்மையை நீக்கினான் மெய்ஞானி.

விண்ணின் ஆற்றலை, எண்ணிலடங்காத தூரத்திலிருந்து வரும் விஷத்தன்மையை தன் ஒளிக் கதிரின் சுழற்சியால் வீழ்த்தி, தன் உணர்வின் சாந்த நிலைகள் கொண்டு, தன் உணர்வின் ஒளிச் சரீரமாக வளர்த்துக் கொண்டார்கள் மெய்ஞானிகள்.

அந்த மெய்ஞானிகள் வெளிப்படுத்தும் உணர்வின் எண்ண அலைகள், மனிதனில் தோன்றிய எண்ண அலைகள் போல, அதற்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்மிக்க இந்த சக்தி விண்ணிலே மிதந்து சென்றாலும், விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் ஆற்றலை, தன் அருகிலே வராதபடி அதை வீழ்த்தி, அதைத் தனக்குள் சாதகப்படுத்திக் கொண்டு, விஷத்தை வீழ்த்தும் தன்மை கொண்ட அணுக்களாக, அது படருகின்றது.

அந்த மெய்ஞானிகள், தனக்குள் வளர்த்த  விண்ணின் ஆற்றலை நாமும் பெறுவோம். எமது அருளாசிகள்.
(பக்கம் 14-16)
விண்ணிலே இருக்கும் மெய்ஞானி, மண்ணிலே தான் இருக்கும் பொழுது, விண்ணின் ஆற்றல்மிக்க சக்தியைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு, இந்த நிலையை ஆற்றல் மிக்க சக்தியாகத் தனக்குள் மாற்றி, இன்றும் ஒளியின் சரீரமாக இருக்கின்றார்,

ஆனால், அவர் ஒளியின் சிகரமாக அங்கு இருந்து கொண்டிருக்கும், அந்த உணர்வின் ஆற்றல், நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அதை நுகர்ந்தறிந்து நாம் எடுப்பதற்கு, நம் எண்ணத்திற்குத் திறன் இல்லை. ஆக, நாம் எண்ணிக் கொண்டிருக்கும் ஆற்றலை, நுகர்ந்தறிவதற்கு அருகே போனாலும், அது நம்முடைய எண்ணத்தை வீழ்த்திவிடும்.

அவர்களின் ஒளியான ஆற்றலை, நாம் நுகர்ந்தறிந்து,
நம் உடலுக்குள் செலுத்திவிட்டாலோ,
நாம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது அறியாமல் சேர்ந்த
துன்பங்களை, வேதனையான உணர்வின் தன்மைகளை,
அந்த மெய்ஞானியின் உணர்வின் ஆற்றல்
நம் உடலுக்குள் சென்று வீழ்த்திவிடும்.
நம் எண்ணத்தை, பொருளறிந்து செயல்படும்
ஆற்றல்மிக்க சக்தியாக வளர்த்துவிடும்.

நாம் எண்ணிய நிலைகள் எதுவுமே, தீய உணர்வு கொண்ட நிலைகள் இருந்தாலும், தன்னைப் பாதுகாத்த நிலையில் அந்த மெய்ஞானியின் ஆற்றலை நுகர்ந்து, அதை உடலுக்குள் செலுத்திக் கொண்டபின், நம்முடைய உடலிருந்து வெளிப்படும் “மணம்” சக்திவாய்ந்ததாக மாறும்.

ஏனென்றால், அந்த ஞானியின் ஆற்றல்மிக்க இந்த உணர்வின் சக்தியை, நமக்குள் பதிவு செய்து கொள்ளும் பொழுதுதான், அதைப் பெற முடியும்.
நம் எண்ணத்தால் விண்ணின் நிலையை ஏங்கி, மெய்ஞானியர்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது, அந்த மெய்ஞானியின் உணர்வின் அணு நமக்குள் இருப்பதால், அது வீரியம் அடைந்து, உடலிலிருந்து வெளிப்படும் மணம் “நரசிம்ம அவதாரம்” - தீமைகளைப் பிளக்கும் ஆற்றல் என்று கடவுள் அவதாரத்தில் காட்டியுள்ளனர் ஞானிகள்.

தம் உடலுக்குள், தீயவற்றை நுழையாமல் காக்கும் அந்த நிலைகள் பெற்று, விண் சென்றவர்கள்தான் மகா ஞானிகள்.

மற்றவர்கள் செய்யும் தவறான நிலைகளை,
கண் நுகர்ந்து இழுத்தாலும்,
மெய்ஞானிகள் காட்டிய அருள்வழிப்படி,
அதே கண் கொண்டு விண்ணிலே செலுத்தப்படும் பொழுது, அந்த விண்ணின் ஆற்றல் நம்முள் சென்று, உள்ளிருந்து வீசும் அந்த வீரிய சக்தியின் தன்மை நம் உடலிலிருந்து வெளிப்படும்.

அந்த வீரிய சக்தியின் தன்மை வரப்படும் பொழுது, நம்மை அசுத்தப்படுத்தும், வேதனைப்படச் செய்யும், நோய்வாய்ப்படச் செய்யும், சிந்தனையற்றுச் சீர்குலையச் செய்யும், இதே உணர்வினுடைய நிலைகளைப் பிளந்து அதையெல்லாம் நம்முள் அடங்கச் செய்துவிடும்.

நாம் ஒரு கருணைக் கிழங்கை வேகவைத்து, அதன் விஷத்தை மாய்த்து, பின் சுவைபட உணவாக உட்கொள்ளுகின்றோம்.

அதைப் போல, சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வின் அலைகளை, நமக்குள் கூட்டப்படும் பொழுது, உடலிலிருந்து வெளிப்படும் மணம்.,
தீய வழியில் நம்மை இட்டுச் செல்லும்
விஷத்தின் தன்மையைப் பிளந்து,
நல்ல சுவாசமாக நம் உடலை மாற்றச் செய்யும்.
(பக்கம் 16-19)
இரும்பு இருக்கின்றது என்றால், இன்று விஞ்ஞானி கடினமான பாறைகளையும், இந்த இரும்பைக் கொண்டு மிக எளிதாக அறுத்து எறிகின்றான். ஒரு மரத்தை, நாம் ரம்பம் கொண்டு அறுக்க கடினமாக இருக்கின்றது.

ஆனால், விஞ்ஞானியோ, இரும்பைச் செறிவு ஏற்றி, அதை மிகவும் ஆற்றல்மிக்கதாக மாற்றி, மிகக் கடினமான பாறைகளையும் எளிதில் அறுத்து எறிகின்றான். எவ்வளவு எளிதாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு எளிதாகச் செய்துவிடுகின்றான் விஞ்ஞானி.
இன்றைக்கு மிக எளிதாக வளைக்கக்கூடிய, சற்று வலுவாகத் தட்டினால் வளைந்து, நெளிந்துவிடக் கூடிய உலோகமான அலுமினியத்தை, விஞ்ஞான அறிவு கொண்டு, இரும்பு – எஃகு எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றதோ, அதைப் போன்று இந்த அலுமினியத்தைச் செருகேற்றி, வலுகொண்டதாக மாற்றுகின்றான் விஞ்ஞானி.

இதைப் போல கரும்பிலே வரும் அழுக்கின் தன்மையை, சில உலோகத்தின் நிலைகளை அந்தக் கரும்புச் சாற்றுக்குள் கலந்து, அதனின் அழுக்கைப் பிரித்து, சர்க்கரையாக, சுவை கொண்டதாக மாற்றுகின்றான்.

இயற்கையில் விளைந்து,
அதற்குச் சுவை கொண்ட நிலைகள் கொண்டும்,
சுவையைப் பாதுகாக்கும் நிலையை,
மற்றொன்று அழித்திடாதவண்ணம்
காத்திட்ட அந்தச் சக்தியினை,
விஞ்ஞானி செயற்கையில் செய்யப்பட்ட இந்த அமோனியம் சல்பேட், அதற்குள் பொட்டாசியம் கலக்கப்படும் பொழுது, அதிலிருந்து பிரித்து இந்த அழுக்கை நீக்க்குகின்றான்.

அப்படி அழுக்கை நீக்கினாலும், இந்த அழுக்கான கழிவை விஞ்ஞான அறிவால், மற்ற பொருள்களைச் சேர்த்து பிளாஸ்டிக்காக உருப்பெறச் செய்கின்றான். அவ்வாறு உருப்பெறச் செய்தால், இந்த பிளாஸ்டிக் அழிவதில்லை.

ஆக, இந்த இனிப்பான சத்தைக் கவர்ந்து கொள்ளும் இச்சக்தியினை, விஞ்ஞானி பிரித்து, அதை மற்ற பொருள்களுடன் இணைக்கப்படும் பொழுது, இணைந்த நிலைகளில், அதைப் பிளாஸ்டிக்காக மாற்றி, அதை மண்ணிலே போட்டாலும் மக்குவதில்லை.

ஆனால், இரும்பு உலோகமோ மண்ணிலே போட்டால் அது மக்கிவிடுகின்றது. ஆனால், இரும்புக்குள் மற்ற உப்புச் சத்தின் நிலைகள் பட்டாலோ, இரும்பு மண்னைப் போல ஆகிவிடும்.

ஆனால், அதையும் தனக்குகந்த அமிலத்தின் தன்மையை, காற்றலைகளாக மாற்றி, அந்த காற்றலையின் அழுத்தத்தை இரும்புக்குள் பாய்ச்சி, இரும்பு துருப்பிடிக்கும் நிலையை இழக்கச் செய்து, அதை “எவர்சில்வர்” ஆக மாற்றுகின்றான் விஞ்ஞானி.

ஏனென்றால், யாம் இதையெல்லாம் புத்தகத்தில் படிக்கவில்லை. பார்க்கிறோம், படிக்கவில்லையென்றாலும், நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு பார்த்தோம்.
அதை எவ்வாறு செயல்படுத்துகின்றனர்? அந்த உணர்வின் தன்மை எவ்வாறு மாறுகின்றது? என்பதை குருகாட்டிய வழியில், அவரின் ஆற்றல்மிக்க அந்தச் சக்தியின் துணைகொண்டு, அந்த உணர்வின் தன்மை கொண்டுதான், இதை யாம் அறிந்திட முடிகின்றது.

உங்களுக்கு அதை உபதேசிக்கவும் முடிகின்றது. உங்களுக்கு உணர்த்திடவும் முடிகின்றது. ஆகவே, விஞ்ஞானிகள் மிகச் சக்திவாய்ந்த நிலைகளைச் செய்கின்றனர். இதைத்தான், அன்று சாதரண மனிதனாக இருக்கும் பொழுது, பிறிதொரு மனிதனின் நோயை நீக்கச் செய்தான் மெய்ஞானி.

ஒவ்வொரு கட்டத்திலும், அந்த மனிதன் சந்திக்க நேரும் குணங்கள், சந்தர்ப்பத்தால் மனிதனாக வளர்ந்திட்ட பண்பையும், பாசத்தையும், பரிவையும், அன்பையும், அறிவையும், துணிவையும், ஞானத்தையும் இழக்கச் செய்யும் விஷத்தின் தன்மை, அது மனிதனின் உடலில் தீய விளைவுகளை விளைவிக்கின்றது.

அந்தத் தீயவிளைவுகளை நீக்க, அன்று சித்தனாகச் சிந்திக்கச் செய்யும், சிந்தனையுடைய நிலைகள் கொண்டு சிந்தித்து, அந்தத் தீயவிளைவுகளின் நிலையை புடமிட்டு, அதை நீக்குவதற்கு தன் எண்ணத்தைக் கூட்டி, அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்று, அந்த ஆற்றலின் வலுகொண்டு, அந்த விண்ணின் ஆற்றலால், தாவர இனச்சத்துக்களின் கூட்டமைப்பால், அந்த வீரிய செயல்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்றும், கண்டுணர்ந்தான் மெய்ஞானி.

அந்த வீரிய செயலுக்குள் தாவர இனத்திற்குள்
இந்த உலோகங்களின் அமைப்புகள் எவ்வாறு உள்ளது என்றும்,
இந்த உலோகத்திற்குள் பிறிதொன்றாக மாற்றிடும்
அந்த விரிய சக்தியைக் கண்டுணர்ந்து, நுகர்ந்து,
அதனின் ஆற்றலைத் தனக்குள் எண்ண வலுவாகக் கூட்டிக் கொண்டு, அதைக் கொண்டுதான் .தாவர இனச் சத்தை இந்த உலோகங்களுடன் கலந்து, புடமிட்டு, அதன் தரத்தை வலுவுடையதாக்கி, பிறிதொரு மனிதனின் நோயை நீக்குகின்றார் மெய்ஞானி.
(புடமிடுதல் – மறைமுகமாக வெப்பமாக்கி, சுட்டு இணைத்தல்)
(பக்கம் 24-30)
கதிரியக்கச்சக்தியை, தன் எண்ணத்தால் அதை அடக்கி,
அந்த உணர்வின் தன்மையை
தன் செயலுக்குக் கட்டுப்படுத்தச் செய்து,
இந்த வீரியத் தன்மை கொண்டு,
விண்ணுலகில் தோன்றும் விஷத்தின் தன்மையை ஒடுக்கி,
ஆற்றல்மிக்க சக்தியாக, இந்த உணர்வின் தன்மை
ஒளியின் கலையாக மாற்றி,
அன்று விண் சென்றனர் மகரிஷிகள்.

அவர்கள் வாழ்க்கையில் தன் எண்ணத்தாலே, மனிதன் துன்பப்படும் நிலையிலிருந்து மீட்கவேண்டும் என்ற எண்ணத்தை, எவ்வாறெல்லாம் தனக்குள் வளர்த்துக் கொண்டார்களோ, அது அவர்களுக்குள் வளர்கின்றது.

அந்த எண்ணத்தால் தோன்றிய உணர்வின் எண்ண அலைகள்,
பொருளைக் கண்டுணர்ந்து, பொருளறிந்து,
பொருளில் உள்ள கெட்டதை நீக்கி, நல்லதாக ஆக்கி,
அதனின் உணர்வின் எண்ணங்களை செயலாக்கும் சக்தியாக
அவர் கண்டுணர்ந்து,
அந்த ஒவ்வொரு வீரியத்தின் தன்மையும் பஸ்பமாக்கி,
அதை மனித உடலுக்குள் செலுத்தும் பொழுது,
மனிதன் தன்னையறியாது சேர்த்த
விஷத்தின் தன்மையால் துன்பப்படுத்தும் இந்த உணர்வை
அந்த பஸ்பத்தைக் கொடுத்து,
அவன் உடலில் இருக்கும் தீமைகளை நீக்க அவர் எண்ணினார்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு, அவரிடத்தில் விளைந்த இந்த உணர்வின் அலைகளைக் கொண்டு, தீமைகளை நீக்கி, அவர் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி, எதையுமே எண்ணும் போது, அந்த எண்ணத்தின் நிலைகள் கொண்டு, ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று விண் சென்றார்.

இன்று விஞ்ஞானி, அணுவின் தன்மை கொண்டு ஒவ்வொரு உணர்வின் தன்மைபடும் பொழுது, ஒளியாக மாற்றிடும் தன்மை பெற்றான். ஆனால், அவனையே அழித்திடும் நிலையை விஞ்ஞானி கண்டு கொண்டாலும், அவனுக்குள் சிக்குபவனையும் அழித்துவிட்டு, எவன் செய்தானோ அவனையும் வீழ்த்திவிடும்.

இதைப் போல அழித்துவிடும் நிலைகள் கொண்டு, ஒன்றைக் கட்டுப்படுத்தும் நிலை இருந்தாலும், அவன் கண்டுணர்ந்த உணர்வின் சக்தி, இன்று காற்று மண்டலங்களில் நச்சுத் தன்மையாக மாறி, இந்தப் பூமியின் தன்மை, துரித நிலைகள் கொண்டு முதுமையடையும் நிலைகள் வந்துவிட்டது.

ஆக, இத்தகைய கதிரியக்கச்சக்தி விண்ணிலிருந்து வரும் பொழுது, மற்ற பொருளுடன் இயக்கப்படும்போது, சூரியனால் அது மாற்றப்படும்போது, எலெக்ட்ரானிக்காக மாறுகின்றது. வெப்ப காந்தமாக மாறுகின்றது. ஆனால் அதை மாற்றினாலும், அதே எலெக்ட்ரானிக்கின் செயல், ஒரு கோளின் சக்தியை தனக்குள் எடுக்கப்படும் பொழுது, அது அணுத் தன்மைகளாக மாறுகின்றது.

அதைப் போல விண்ணின் ஆற்றல், கதிரியக்கச்சக்தி கொண்ட, மற்ற பேரண்டத்திலிருந்து வரக்கூடிய, விஷத்தின் சக்தியை முறித்திடும் சக்தி கொண்ட நட்சத்திரங்கள், அதனின் ஆற்றலை அது பருகி, அது பிரபஞ்சத்திற்குள் கொண்டு வரும் பொழுது, இந்தச் சூரியனிலிருந்து வரும் எலெக்ட்ரானிக் அது தனக்குள் அடக்கி, அதை இழுத்து இணைத்துக் கொள்கின்றது.
அப்படி இணைத்து, இதனுடன் சேர்த்துக் கொண்டு, வெப்பமும்
அதனதன் எடுத்துக் கொண்ட எலெக்ட்ரானிக்கின் தன்மையும்
ஜீவன் உள்ளதாக மாற்றி,
எப்பொருளுடன் அது கலக்கின்றதோ, அதனின் ஈர்ப்பு அலையில்
அந்தச் சக்திவாய்ந்த உலோகமாகவோ,
சக்திவாய்ந்த மணலாகவோ அது மாற்றுகின்றது.
ஆக, இதைப் போல ஜீவன் உண்டாக்கும் இந்த நிலையை, சூரியன் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

ஆனால், இன்று விஞ்ஞானியோ, இது போன்ற கதிரியக்கச்சக்தியின் நிலையை, மண்ணுக்குள் மறைந்த இந்தச் சக்தியை இந்த அணுவின் தன்மையை மற்ற பொருளுடன் சேர்த்து, இதை வீரியத் தன்மை கொண்ட எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றான்.

அவ்வாறு மாற்றிய இந்த எலெக்ட்ரானிக், சூரியனிலிருந்து வெளிப்படும் ஒரு அணுவுக்குள், இந்த உணர்வின் ஆற்றல் பாய்ச்சப்படும் பொழுது, அது ஊடுருவி, மற்ற பொருள்களுக்குள் ஒரு அணு எப்படி அணுவின் தன்மையைப் பிளக்கச் செய்து உருகச் செய்கின்றதோ, இதைப் போல, இந்த எலக்ட்ரானிக்கை “லேசர் – LASER” ஆகவும் மாற்றுகின்றான்.
இந்த உணர்வின் அழுத்தத்தை அதிகமாகக் கூட்டப்படும் பொழுது, எவ்வாறு மின்னல் தாக்கப்படும் பொழுது, ஒரு பொருளின் தன்மையைப் பிளக்கச் செய்கின்றதோ, (ஒரு மரமானாலும், ஒரு நொடிக்குள் வெடிக்கச் செய்கின்றது) இதைப் போலத்தான் எலெக்ட்ரானிக் என்ற நிலையை ஊடுருவி, மனிதன் உற்பத்தி செய்து, அவ்வாறு உற்பத்தி செய்த அந்தப் பொருள், அது மற்ற பொருளுடன் ஊடுருவிப் போகும் பொழுது, அதைப் பிளக்கின்றது.

இவ்வாறு பிளந்திடும் சக்தி, சூரியனின் காந்த சக்தியினால் கவரப்படும் பொழுது, நமது பூமிக்குள், இவ்வாறு வீரிய உணர்வு கொண்ட பல நிலைகள், கதிரியக்கச் சக்தியாகவும், எலெக்ட்ரானிக்காகவும் மாறுகின்றது.

இன்று, எலெக்டரானிக்கின் தன்மையில் பல போர்கள் நடந்துள்ளது.
நடந்த யுத்தங்களால் ஏற்பட்ட இந்த நிலைகள் அனைத்தும்,
சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு,
துரித நிலைகள் கொண்டு, பூமியில் இது பரவிக் கொண்டுள்ளது.

இவ்வாறு பரவிய இந்த நிலைகள்தான், பூமிக்குள் ஊடுருவி பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தும் தன்மைகளும், நாம் இன்று காணும் பல மாடிக் கட்டிடங்களும் சீர்குலையும் நிலைகளும் வந்து கொண்டிருக்கின்றது.
ஆக, எவ்வளவு கண்டு இரசித்தோமோ, எதை அழித்துவிடவேண்டுமென்று எண்ணினானோ, அதுவே அழித்திடும் நிலைகளுக்கு, அவன் கட்டிய கட்டிடங்கள் பலமாக இருந்தாலும் அவனுக்குள் பாதுகாப்பு நிலைகள் எதுவாக இருந்தாலும், அவன் இருக்கும் இடத்திலும் இந்த அதிர்வுகள் ஏற்பட்டு, இவனை அழித்திடும் நிலையே வருகின்றது.

ஆகவே, இவன் கண்டுணர்ந்த விஞ்ஞானமும், அவன் எண்ணத்தின் நிலையில் அழித்திடும் நிலையே உருப்பெறச் செய்து, அவன் எடுத்த மூச்சலைகள், சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து கொள்கிறது.
மனிதனின் உணர்வுக்குள் அது எண்ணங்களாகச் செயல்படுத்தப்பட்டு,
நினைவலைகள இயக்கும் நிலையும்,
மற்றதை இயக்கி கருக்களை உருப்பெறச் செய்யும் இச்சக்தியும்,
மீண்டும் மனிதனுக்குள் வந்து,
அதே எலெக்ட்ரானிக் பொருள்போல அதன் சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக் கடிகாரம், இதைப் போன்ற மற்ற பொருள்களின் “எலெக்ட்ரானிக்” என்ற செயலின் நிலைகளும் இந்த மனிதனுக்குள் ஊடுருவி, அவனுடைய எண்ண அலைகள் இங்கே செயல்படத் தொடங்கிவிட்டது. செயல்படத் தொடங்கினாலும் பூமிக்குள் ஊடுருவிச் சென்றுவிடுகிறது.

இதையே சூரியக் குடும்பத்திற்குள், பிரபஞ்சத்திற்குள் இவர்கள் வெடித்துப் பரிசீலித்துப் பார்த்த இந்த அணு குண்டுகளும், அதைப் போல மிகச் சக்திவாய்ந்த நச்சுத் தன்மை கொண்ட நிலைகள் விண்வெளியில் பரப்பப்பட்டு, தொடர்ந்து பரீட்சிக்கும் மானிட்டர்களிலிருந்து, அதனின் செயலாற்றலையும் இவர்கள் உணர்ந்தறிகின்றார்கள்.
ஆனால், அப்படி உணர்ந்தறிந்தாலும், பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கும் அந்த நச்சுத்தன்மைகள், சூரியனின் சுழற்சி வட்டத்திற்குள், சூரியனின் ஈர்ப்புக்குள் சென்று, சூரியனுக்குள்ளும் சென்று, இன்று, அங்கே எரிமலைகளாக வெடிக்கும் நிலைகள் வளர்ந்துவிட்டது.
ஆக, சூரியன் ஒளி தரும் சக்தியாகவும், மற்றதை இயக்கும் சக்தியாக இருந்தாலும், மனிதனால் ஏற்பட்ட இந்தச் சக்தி, சூரியனும் நஞ்சின் தன்மை அடைந்து கொண்டே வருகின்றது.

இந்தச் சூழ்நிலையில், இன்று நாம் மனிதன் சுவாசிக்கும் அனைத்து உணர்வுகளிலும் அது கலந்து கொண்டே உள்ளது. மற்ற கோள்கள் விஷத்தன்மை கொண்டது. மற்ற கோள்களில் விஷத்தின் தன்மை கொண்டு, வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த உயிரணுக்களைப் போல நாமும் ஆக நேரிடும்.

இவ்வாறு இந்தக் காற்று மண்டலத்தில் சேர்த்துக் கொண்ட இந்த நச்சுத்தன்மையான உணர்வுகள், நம் உடலில் கலந்து, இந்த உணர்வின் ஆற்றல், இந்த உடல் இழந்தாலும், உடலில் கலந்த இந்த நச்சுத்தன்மையான உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி, அதன் செயலாக இயக்கி, வேதனைகளை அனுபவித்ததே ஆக வேண்டும் (உயிருடன் ஒன்றிக் கொண்டு).

ஆக, எந்த விஞ்ஞானியாக இருந்தாலும் சரி, இன்று பல நிலைகளில் அற்புதங்களைக் கண்டு கொண்டான், பிறர் வியக்க அற்புதச் செயல்களைக் கண்டோம்; தன் ஆற்றலை வெளிப்படுத்தினான்; என்ற நிலைகள் இருந்தாலும்,
இதைப் போல நச்சுத்தன்மையான உணர்வின் சக்தி,
அவன் உடலிலும் விளைந்து,
வேதனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
(பக்கம் 30-33)
இந்த உடலில் எந்தெந்த செயல்கள் செய்கின்றோமோ, அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி, நாம் நிலையான வேதனைகள்பட்டே தீரவேண்டும். ஒரு உடலுக்குள் சென்று இதை மாற்றிக் கொள்ள எண்ணினாலும், அந்த உடலையும் வேதனைப்படச் செய்து, அங்கும் வேதனையான உணர்வுகளை வளர்த்து, அந்த மனிதனையும் வீழ்த்தி, உயிராத்மா வெளியே வரப்படும் பொழுது, இந்த வேதனையையே உணவாக உட்கொண்டு, வேதனையை அனுபவிக்கும் உணர்வின் சரீரமாக நம் உயிர் மாற்றிவிடும்.

சூரியன் இன்று விஷத்தன்மையாகி, அது செயலிழக்கும் தன்மை, துரித நிலைகளில் வந்துவிட்டது. விஞ்ஞானிகள் பல காலத்தை அளவிட்டார்கள். அந்த அளவுகோலுக்கு நிற்காது.

ஆனால், அவன் அளவிடுவதற்கு முன் சூரியன் நஞ்சாக மாறும் பொழுது, இங்கு பூமியில் மனிதனின் சிந்தனைகள் முழுமையாக மாறி, மிகவும் வேதனைப்படும் நிலையும், வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையும், பூமிக்குள் துரித நிலைகளில் வருகிறது.

நமது குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, அவர் எமக்கு எவ்வாறு எல்லாவற்றையும் காட்டினாரோ, அதையெல்லாம் கண்டுணர்ந்துதான், உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறோம்.
நமக்கு இந்த மனித உடல் கிடைத்தது பெரிய பாக்கியம்.
ஆனால், கிடைத்த இந்த பாக்கியத்தை
சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
ஏனென்றால், நாம் வயல்களில் எவ்வாறு களைகளை நீக்குகின்றோமோ, அதைப்போல வாழ்க்கையிலே தோன்றும் விஷத்தன்மையான களைகளை நீக்கவில்லை என்றால், அது நமக்குள் இரண்டறக் கலந்து, நம் நல்ல உணர்வுகள் அழிக்கப்பட்டு, துன்பமே வாழ்க்கை என்ற நிலைகள் ஊடுருவி, அதுவே வளர்ந்துவிடும் நிலைகள் ஏற்பட்டுவிடுகின்றது.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் மீளவேண்டும் என்று நமது குருநாதர் காட்டிய, அவர் கண்டுணர்ந்த நிலையில், அவர் உடலிலே துன்பத்தை நீக்கிய வழிகளில்தான், செயல்படுத்துகின்றோம். 

நமது குருநாதர், இந்த உலக மக்களை மீட்பதற்கு, நல்லதை எண்ணி ஏங்கினார். அவர் எம்மிடம், மக்கள் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அந்த மெய் ஒளியின் தன்மையை உனக்குள் கூட்டி, அந்த நச்சுத் தன்மைகள் உனக்குள் வளராது தடுத்து, அந்த உணர்வின் சக்தியை உனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அதை உனக்குள் வளர்க்கப்படும் பொழுது, இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும், வாழ எண்ணும், நல்லதை எண்ணும் அந்த நல்ல உள்ளங்களில் அந்த மெய் உணர்வுகள் வளரவேண்டும் என்று நீ ஏங்கி ஒலிபரப்பு.

ஆக, “நீ எடுக்கும் இந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து, ஒவ்வொரு உள்ளத்திலும் விளையட்டும்” என்று எம்மிடம் கூறினார் குருநாதர்.

சிறுதுளி பெருவெள்ளம் போன்று, ஒரு நெல்லை விதைத்தால் அது விளைந்து நெல்கள் பலவாகி, அந்தப் பல நெல்களையும் விளைவித்து எடுத்துக் கொண்டால்தான் மலைபோல் குவிகின்றது. அப்படி மலைபோல் குவிந்தால்தான் அவரவர்கள் பசிக்கு, அளவுக்குத் தககவாறு உணவாக எடுத்து உட்கொள்ள முடியும்.

நீ ஒரு நெல்லாக இருக்கின்றாய். அந்த நெல்லின் தன்மையை பலவாக வளர்த்துக் கொண்டு, அந்த உணர்வின் சக்திவாய்ந்த உணர்வின் ருசியை, ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் ஊட்டு.
ஒவ்வொரு உள்ளத்திலும் விளைந்து,
அந்த உணர்வின் எண்ண அலைகளாக வெளிபரப்பும்
அதை ஒன்று சேர்த்து,
அந்தத் தீமையை நீக்கும்
மெய் உணர்வுகளாகப் பரப்பச் செய்,
என்று கூறினார் நமது குருநாதர்.
அப்படிப் பரவும் அந்த மூச்சலைகள், காற்று மண்டலத்தில் கலந்திருக்கும், “நச்சுத் தன்மைகள் அனைத்தையும் பிளக்கட்டும்”.

நச்சுத் தன்மைகளைப் பிளக்கும் எண்ணங்கள் கொண்ட, பல ஆயிரம் பேர் சேர்ந்து, அந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளும் நிலையில், அவர்களிலிருந்து வெளிப்படும் சக்தியின் தன்மை, நாம் இன்று கூட்டு அமைப்பாக வளர்ந்து தியானிக்கும் இந்த உணர்வின் எண்ண அலைகள், நம் பூமி முழுவதும் பரவும்.

அப்படிப் பரவி, விஞ்ஞானிகளால் வெளிப்படுத்தப்பட்ட, சூரியனால் கவரப்பட்ட நஞ்சான அணுக்களையும், “இன்று மனிதனை மனிதனே கொன்று குவித்திடும், இரக்கமற்ற நிலையில் செயல்படுத்தும் இந்த எண்ண அலைகள், ஒவ்வொரு மனிதனின் உடலிலும் விளைந்து வெளிப்படும் நச்சுத் தன்மையாக படரும் நிலைகளையும் தடுத்து, மக்களை மீட்கச் செய்யும், என்று உணர்த்தினார் குருநாதர்.

அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம். எமது அருளாசிகள்.
(பக்கம் 34-41)
இந்தப் பிரபஞ்சம் முதுமையடையும், இந்த நிலையிலிருந்து அதைச்  சிறிதேனும், சிறிது பேரையாவது மீட்டுக் கொள்ளலாம், மீட்டிட வேண்டும் என்ற நோக்குடன், “மெய்ஞானியின் அருள் ஆற்றலை உனக்குள் வளர்த்துவிடு.” என்று நமது குருநாதர் எம்மிடம் சொன்னார்.

வளர்த்த ஆற்றலை, ஒவ்வொரு உள்ளத்திலும் வயலைப் பண்படுத்துவது போல மனதிலே பண்படுத்து. இதைப் போல கண்டறிந்த உணர்வின் சக்தியை, அவர்களைக் கூர்ந்து கவனித்திடச் செய். அந்த மனத்தினுடைய நிலைகளை ஒரு நிலைப்படச் செய். அந்த நிலைகளை ஏங்கவை. அந்த உணர்வுக்குள், இந்த ஞானிகளின் அருள் வித்தைப் பதியச் செய்.
அப்படிப் பதிந்த உள்ளம் கொண்டு அவர்களும்,
தமக்குள் துன்பத்தை நீக்கிட வேண்டும் என்று எண்ணினால்,
அவர்கள் விண்ணை நோக்கி எண்ணும் பொழுது,
அந்த உணர்வின் ஆற்றலால்,
விண்ணின் ஆற்றல் அவர்களுக்குள் பெருகி,
அவர்களை அறியாது வந்த துன்பங்களை நீக்கி,
அந்த ஞானிகள் அருள் வட்டத்தில் செல்ல,
இது உதவியாக இருக்கும் என்று குருநாதர் சொன்னார்.

ஆகவே, நாம் எல்லோரும் இந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்றால், இந்தக் கூட்டமைப்பின் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான், கூட்டமைப்பை உருவாக்கி, ஒவ்வொரு உள்ளத்திலும் அறிந்தோ, அறியாமலோ சேர்ந்த, தீமையை விளைய வைக்கும் இந்த உணர்வினை மாற்ற, யாம் செயல்பட்டு வருகின்றோம்.

நாம் எல்லோருமே, எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல. நானும் எல்லாம் அறிந்தவன் இல்லை. நான் அறிந்துதான், இதைப் பேசவும் இல்லை. ஆக, நான் கல்வி கற்கவில்லை. கல்வி கற்காதவனுக்கு, இத்தகைய ஞானத்தின் உணர்வை நமது குருநாதர் பாய்ச்சினார்.

அவர் பாய்ச்சிய நிலைகள் கொண்டு, அந்த அணுவின் ஆற்றல்மிக்க நிலையை, அந்த விண்ணின் ஆற்றலை நுகர முடிகின்றது. அதை உங்களுக்கு, தெளிவாகச் சொல்லவும் முடிகின்றது.

அதே சமயம் உங்கள் உள்ளத்துக்குள் கவரப்பட்டு, ஆழமாக உங்கள் மனதினைப் பண்படுத்தி, ஞானிகளின் அருள் ஆற்றல்மிக்க சக்தியை, உங்களுக்குள் பதியச் செய்யவும் முடிகின்றது. பதிவானதை நீங்கள் நினைவுபடுத்தி, அந்த அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆகவே, நீங்கள் எங்கே சென்றாலும், எந்த நிமிடம் ஆனாலும், இதைக் கேட்டுணர்ந்தவர்கள், “எனக்கு இவ்வாறு துன்பம் செய்தார்” என்று அவர்களை எண்ணாதபடி, “எனக்குத் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது” என்று எண்ணாதபடி, இந்த எண்ணத்தை மாற்றவேண்டும்.

இதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை, குருநாதர் எமக்கு அருளிய வழிப்படி, உங்களுக்கும் தைரியத்துடன், ஏனென்றால் உங்களுக்கும் தைரியம் பெறவே, இதைக் கொடுக்கின்றேன்.

குருநாதர் எம்மைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கி, காடு மேடெல்லாம் அலையச் செய்து, இவன் செம்மையாகச் செய்வானா? செய்ய மாட்டானா? பல நிலைகளில் பரிசீலித்தார்.

பனிரெண்டு வருட காலம் எல்லோரும் தவம் என்று சொல்வார்கள். என்னைப் பனிரெண்டு வருட காலம் ஒவ்வொரு நொடியிலும் எண்ணங்களால் வேதனைப்படுத்துவதும், எண்ணத்தால் அவஸ்தைப்படுவதும், என்ன செய்வது? என்ற உணர்வே அறிய முடியாத நிலையில் இவ்வாறெல்லாம் என்னை ஆக்கித்தான், இந்தச் சக்தியைப் பெறும்படி செய்தார்.

ஒவ்வொரு நிலைகளிலும் பிறருக்கு நன்மை செய்தாலும், அந்த நன்மை பெற்றவர்களும், மீண்டும் எமக்குத் தீமை செய்வார்கள்.

அப்பொழுது, அந்தத் தீமையே செய்யப்படும் பொழுது, அந்தத் தீமையை அழித்திட, எனக்குப் பல சக்தி கொடுத்தார். கொடூரச் சக்திகள் கொண்டு நான் எண்ணத்தால் எண்ணினால் போதும். அவர்களுடைய நிலைகள் செயலற்றதாக ஆகிவிடும்.

ஆனால், அதற்கு மாறாக, பிறர் நமக்குத் தீங்கு விளையவைத்தாலும், எம்மை எண்ணும் பொழுது, அவருக்குள் தீமையை விளைவிக்கும், “அந்த எண்ணங்கள்தான் அழிய வேண்டுமே” தவிர,
அவர்களுக்குள் இருக்கக் கூடிய நல்ல எண்ணங்கள் ஓங்கி வளர்ந்து,
நன்மை பயக்கும் சக்தியாக அது மலரவேண்டும் என்றுதான்,
குருநாதர் இந்தச் சக்தியினை எமக்குக் கொடுத்தார்.

ஆகவே, ஆற்றல்மிக்க இச்சக்தியை எமக்குள் கொடுத்திருந்தாலும், ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனையோ பரிசீலனைகள் இன்றும் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த நிலைகளிலும் யாம் கூர்ந்து கவனித்து, அவர்களுடைய உணர்வுகளை எமக்குள் செலுத்தாதபடி, அவர்கள் நலம் பெறவேண்டும், அறியாத நிலைகளிலிருந்து, விடுபட வேண்டும், என்ற நிலைகளைத்தான் குருநாதர் காட்டிய நிலைகளில், யாம் செய்கின்றோம்.
(பக்கம் 43-46)
முந்தைய ஞானிகள் விநாயகத்தத்துவத்தும், கந்தபுராணமும், இராமாயணமும், மகாபாரதமும், விஷ்ணு புராணமும் அருளினார்கள். அதாவது, இதைப்போல பல புராணங்களை எழுதிக் காட்டி, இந்த மனித உடலில் இந்த உணர்வின் ஆற்றல்கள் இவையெல்லாம் உணர்த்தி, நாம் கண்டுணர்ந்து விண் செல்வதற்காக, அவர்கள் செயல்படுத்தி, அவர்கள் கண்டுணர்ந்த நிலையில் நமக்கு போதித்தார்கள்.

காலத்தால் அது மறைந்துவிட்டது. உண்மையை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை. இப்போது நாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பூமியோ முதுமை அடைந்து விட்டது. இதிலிருந்து நம்மை மாற்றிக்கொள்ள, இது நல்ல தருணமாக நிலை.

குரு அருளால், நாம் இதையெல்லாம் மாற்றிக் கொள்வதற்கு, பௌர்ணமி நன்னாள் அன்று நமது குருநாதர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி, உங்கள் நினைவலைகளை, விண்ணை நோக்கிச் செலுத்தி, சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்து, உங்கள் நினைவலைகளை அங்கே இணைக்கச் செய்கிறோம்.

எமது குருநாதர், அவர் தமக்குள் பெற்ற ஆற்றல்மிக்க சக்தியை, எமக்குச் சிறுகச் சிறுக உபதேசித்து, எம் நினைவலைகளை விண் செல்ல வைத்தார்.

அதைப் போன்றுதான் உங்கள் மனதின் தன்மையும், உங்கள் மனதைப் பக்குவப்படுத்த, நமது குருநாதர் உபதேசித்ததுபோல உங்களுக்கும் இதே நினைவலைகளைக் கொண்டுவரச்செய்து, அதை உங்களுக்குள் பதியச்செய்து, உங்கள் எண்ணத்தை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்கின்றோம்.

அவ்வாறு இணைத்துக் கொண்ட நிலைகள் கொண்டு,
நாம் தியானிக்கும் இந்த உணர்வுகள்
நம் உடலிலே அது பதிவாகி,
எண்ணியவுடன், உடனடியாக விண்ணின் ஆற்றலை எண்ணி ஏங்கி எடுக்கக்கூடிய மனப்பக்குவ நிலையை, உங்களுக்குள்  அதை வளர்க்கச் செய்கின்றோம்.

இன்று நாம் ஒரு வானொலிப் பெட்டியையோ, தொலைக்காட்சிப் பெட்டியையோ ‘’ரிமோட் கண்ட்ரோல்’’ கொண்டு இயக்குகின்றோம்.

அதைப்போல, ஒரு மனிதனுக்குள் அன்பான நிலைகள் கொண்டு, பண்பின் உணர்வுகள் உந்தப்படப்போகும் போது, “எனக்கு நன்மை செய்தார்” என்ற நினைவுகொண்டு அவர்கள் எண்ணப்படும் போது “விக்கல்” ஆகவும் “எனக்குத் துன்பம் செய்தார்” என்ற நிலைகள் கொண்டு, எண்ணத்தின் நிலைகள் ஓங்கி வளர்க்கப்படும்போது “புரை” ஓடுகின்றது.

அப்படி புரையோடும் போது, உணவோ, தண்ணீரோ நாம் எடுத்துக் கொள்ளப்படும்போது, கடுமையாகத் தாக்கி பேசும் உணர்வுகள் வந்தால், தீடீரென்று புரை ஓடினால், மனிதனை மரணம் அடையச் செய்யும் சக்தி கூட உண்டு.

ஆக, ஆகாரம் விழுங்கும்போது இதைப்போல கடுமையாகச் சாடி, அதை பேசிக்கொண்டிருந்தால், மூச்சுக் குழாய்கள் புரை ஓடி, இந்த ஆகாரம் போய்ச்  சென்றுவிட்டால், அந்த நிமிடமே வீழ்ந்துவிடுவார்.

இதைப்போல், ஆகாரம் உட்கொள்ளும்போது சிறு பொருளைச் சாப்பிட்டார், புரையோடினார், இறந்துவிட்டார் என்று இருக்கும். இது மூச்சுக் குழாய்களில் ஊடுருவி விட்டால், இதைப் போல செய்துவிடும்.

இதைப்போலத்தான், மூதாதையர்களான, நம் குலதெய்வங்களான, குல வழியில் நாம் வந்தாலும், யாம் முன்பே சொன்னது போல, கோபமும் ஆத்திரமும் கொண்டு, பிறருடைய சாப நிலைகள் அதை உடலிலே எடுத்து வைத்து, இன்று அதே உணர்வுகள், இன்று குலவழியில் இன்று வந்தால் ஆஸ்த்மா, இரத்த கொதிப்பு, சக்கரை (சத்து) வியாதி, புற்றுநோய், T.B. இது போன்ற நோய்கள் வருகின்றது.

அதாவது, “எப்படி எல்லாம் நீ என்னை அடிக்கின்றாயோ,
இதைப்போன்று உன் உடல் முழுவதும், செல் அரிக்கும்” என்று
இந்த சாப நிலைகளை முன்னோர்கள்,
அவருடைய எண்ணங்களில் பதிவு செய்திருப்பார்கள்

நம்முடைய மூதாதையர்கள், இதையெல்லாம் நம்மைக் காத்திடுவதற்காக, தன் பிள்ளைகளைப் போற்றிக் காப்பதற்காக, இவ்வாறெல்லாம் செய்தார்கள்.
இத்தகைய நிலைகள், இவ்வாறெல்லாம் வரப்போகும்போது
அந்த உணர்வின் தன்மைகள்,
நம் உடலுக்குள்ளும் இந்தத் தீய விளைவுகள்
அந்த அணுவின் தன்மை வந்து,
நம் உடலுக்குள் நம்மை அறியாமல் ஆட்டிப்படைக்கின்றது.

அவர்களுடைய உணர்வுகளில் வரிசைப்படுத்தி, நோயாகவும், புற்றுநோயாகவும், சர்க்கரைச் சத்தாகவும், ஆஸ்த்மா, இவையெல்லாம் அவர்கள் முன்பு செய்துகொண்ட அந்த உணர்வின் தன்மை, அந்தக் குடும்பத்தில் சம்பந்தம் உள்ளவர்கள் குழந்தைகள் கருவாகும்போது, அந்த கருவின் வழிகளிலே இது பதிவாகி, இந்த நினைவலைகள் அந்த மூச்சலைகளில் பதிவாகி, பிறந்தபின் அதன் வழிகளிலே வருகின்றது.

இதைப் போல, பெரியவர்கள் அதை எண்ணிய நிலைகள் கொண்டு, அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள், இதைப் போன்ற செய்திகளைக் கேட்கப்படும்போது பதிவாகிவிடுகின்றது. குழந்தையின் கருவிலே உருவாகி விடுகின்றது.
பிறந்தபின், காலப் பருவங்கள் வரப்படும்போது
இது விளைந்து அந்தக் குடும்பத்திற்குச் சீர்கேடு ஆகிவிடுகின்றது.
(பக்கம் 43-46)
இவ்வாறு வருவதைப்போல, நாம் முன்னோர்கள் வழியில் வந்ததை ஞானிகள் வழிகொண்டு, உங்களுடைய எண்ணத்தை சப்ரிஷி மண்டலங்களுடன் தொடர்பு வைக்கச்செய்து, அதை உங்களுக்குள், அதி சக்திவாய்ந்ததாக மாற்றுகின்றோம்.

அன்று, பிறருடைய துன்பத்தைப் போக்க வேண்டும் என்று பித்தனாகி, அதன் வழியிலே ஞானம் பெற்று. அவர் சிருஷ்டிக்கும் தன்மையில் ரிஷியாகி, தன் உணர்வின் தன்மை ஒளியாகி மாற்றி விண் சென்றார், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அவர் வழியில், அவர் கண்ட உண்மைகளை நாம் சிந்திக்கும் தன்மையாக, அந்தச் சிந்தனையின் நிலைகளை உங்களுக்குள் செயல்படுத்தி, இந்த உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் இப்பொழுது வளர்க்கச் செய்கின்றோம்.

நீங்கள் அதை வளர்த்து, அந்த நினைவின் அலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும்போது, அது உங்களுக்குள் சிந்திக்கும் தன்மையாக, அவர் சிந்திப்பதற்கு புடமிட்டு எடுத்துக் கொண்ட, அந்த உணர்வின் சக்தியை நீங்கள் நுகரும் போது, உங்களுக்குள் தீய விளைவுகளை விளைவிக்கும் இந்த உணர்வின் செயல்கள் அனைத்தையும், அது இழக்கச் செய்கின்றது.

அவ்வாறு இழக்கச் செய்ய வேண்டுமென்றால், இதனின் சக்தியை விண்ணிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் தகுதி பெற வேண்டும்.

அப்படி நேரடியாகப் பெறவேண்டும் என்றால், நமது மூதாதையர்களின் உயிராத்மாக்களை, அந்த விண்வெளியிலே ரிமோட் கண்ட்ரோல் போல, நாம் எடுத்துக் கொண்ட அந்த தியானத்தின் வலுக்கொண்டு, ரிமோட் கண்ட்ரோல் போல, சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்யவேண்டும்.

அவர்கள் (முன்னோர்கள்) சூட்சும சரீரங்கள் பெற்றவர்கள். அவர்கள் உணர்வின் சக்தி நமக்குள் உண்டு. அவர்கள் கோபமாகப் பேசியிருந்தாலும் சரி, ஆத்திர உணர்வு கொண்டு பேசியிருந்தாலும், இதனுடைய நிலைகளை
நாம் அந்த மெய்ஞானியின் உணர்வலைகளைக் கொண்டுவரும்போது,
பாசத்தால் வளர்த்துக் கொண்ட,
நம்மை வளர்த்திட்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு,
அதே பாச உணர்வுக்கு,
சக்திகொண்ட ஞானியின் சக்தியை மெருகு ஏற்றப்படும்போது,
அந்த நினைவின் எண்ண அலைகள் கொண்டு.
மூதாதையரின் உயிராத்மாக்கள்
சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
ஒளி சரீரம் பெற வேண்டும் என்று
உந்தித் தள்ளச் செய்வதற்குத்தான் பௌர்ணமி தியானம்.

இதற்குப் படிப்பறிவு தேவையில்லை. யாம் படித்ததில்லை. ஆக, யாம் இதைப் பேசுகிறோம் என்றால், எமக்குள் அவர்கள் வளர்த்துக் கொண்ட உணர்வுதான், அந்த உணர்வின் மணங்கள்தான் பேசுகின்றது.

ஆக இன்று ஒலிப்பதிவு ஆகும் நாடா, (CD) அதற்குள் இருக்கக்கூடிய முலாம், இதற்குள் இருக்கக்கூடிய காந்த அலைகள், யாம் பேசுவதை அது கவர்ந்து அது பதிவாக்குகின்றது.

பதிவான நாடாவை (CD) மீண்டும் காந்த ஊசியிடும்போது, அந்த யாம் பேசிய உணர்வின் தன்மையை, அது வெளிப்படுத்திக் காட்டுகின்றது. இதைப்போல படிக்காதவர்களுக்கு இந்த உபதேசம்.
இதைக் (ஒலி நாடாவை - CD) கூர்ந்து கவனித்தால்,
அதைப் படிக்கவில்லை வெறும் முலாம்தான்.
நீங்களும் படிக்கவில்லை. வெறும் முலாம்தான்.
உங்களுக்குள் இருக்கக்கூடிய முலாம்”
மிகச் சக்தி வாய்ந்தது.

இப்பொழுது, கூர்மையான எண்ணத்தை நீங்கள் செலுத்தப்படும்போது, யாம் உபதேசிக்கும் உணர்வுகள், உங்களுக்குள் பதிவு ஆகிவிடுகின்றது.

மீண்டும் இந்த நினைவு வரும்போது,
உங்கள் உயிரான காந்த ஊசிக்குள்” படும்போது,
அந்த உணர்வின் ஆற்றல் பெருகி, உங்களுக்கு நினைவுபடுத்தி அந்த ஞானத்தை ஊட்டும். எதை நீக்க வேண்டுமோ அதை நீக்கி, பொருளைக் காணச் செய்யும்.

அத்தகைய நிலைகள் பெறச் செய்வதற்குத்தான். யாம் இப்பொழுது உங்களுக்குள் உபதேசிக்கின்றோம். இந்த உணர்வின் தன்மை ஒரு நிலைப்படுத்தி, உங்கள் எண்ணத்தை விண்ணை நோக்கிச் செலுத்தப் பழகிக் கொடுக்கின்றோம்.
பௌர்ணமி அன்று, சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, நாம் அனைவரும் ஒரே ஏக்கத்துடன் எண்ணும்போது, வலுகொண்ட சக்தியாக இது மாறுகின்றது. எமது அருளாசிகள்.
(பக்கம் 49-51)
சிறு துளியாக மழை பெய்தாலும்,
அந்த மழை நீர், அது வேகமாக நீராக ஓடையாக ஓடுகின்றது.
அப்பொழுது அங்கு இருக்கக்கூடிய
கல், மண் இவைகளை எல்லாம் அடித்துத் தள்ளிவிட்டு,
அது தன்னுடைய செயலைக் காட்டுகின்றது.

இதைப்போல, நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் எண்ண ஓட்டத்துடன் இருந்து, அந்த உணர்வின் தன்மையை நாம் அனைவரும் பெற வேண்டும், என்ற ஏக்க உணர்வுடன் நாம் எண்ணி தியானிக்க வேண்டும்.

இந்த உணர்வின் வலுவைக் கொண்டபின், நம்மைச் சார்ந்த மூதாதையர்களின், உடலைவிட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை குலதெய்வங்களாக எண்ணி, எல்லோருடைய உதவிகொண்டு ஏகக்காலத்தில், அந்த உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் உந்தித் தள்ள வேண்டும்.

அங்கே சென்று, இன்னொரு உடல் பெறும் அந்த உணர்வின் தன்மையை, அங்கு கருக்கிவிட்டு, அந்த உடல் பெற்ற உணர்வின் ஆற்றல் மிக்க காந்தசக்தி, ஒளியின் சரீரமாக உயிருடன் ஒன்றி நிலைத்து விடுகின்றது.

ஆக சப்தரிஷிகள், விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து, அதை உணவாக எடுத்துக் கொண்டு, அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வின் ஆற்றல் அவர்களுக்கு, (நாம் செலுத்திய உயிராத்மாக்கள்) இது உணவாக வந்து, ஒளியின் சரீரம் பெறுகின்றனர்.

எந்த மூதாதையர்கள் நம் உடலிலே எந்த உணர்வுடன் வந்து, இந்த உடலின் சரீரமாக இருந்தாலும், அவர்களை நாம் உந்தித்தள்ளி மகரிஷிகள் அருள் வட்டத்துக்குள், இந்த உணர்வின் ஒளி சரீரமாக இருக்கும்போது,
நாம் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும்போது,
அங்கே “ரேடர்” (RADAR)
எவ்வாறு ஒரு கருவியின் இயக்கத்தை
விஞ்ஞானி கண்டு கொள்கின்றானோ,
இதைப்போல நம் எண்ணத்துக்கு “ரேடர்” போன்ற
நம் நினைவு அலைகளுக்கு அது பக்குவப்படுகின்றது.

நாம் அந்த விண்ணை நோக்கி, சப்தரிஷி மண்டலங்களை எண்ணும்போது,
நம்முடைய நினைவு அலைகின்ற நம்மை அறியாதபடி
நமக்குள் தீமை வருவதை வராத வண்ணம்
முன் கூட்டியே அந்த ரேடர்,
நமக்குள் அது உணர்த்துகின்றது.
அப்பொழுது அந்த மெய்ஞானியின் ஆற்றலை நமக்குள் செலுத்தப்படும்போது, நம் உணர்வின் அலையை, எண்ணங்களை, நம் எண்ண உணர்வுகள் சீர்படுத்த உதவுகின்றது. நம் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீக்க, இது உதவுகின்றது.

அப்பொழுது, எதிர் நிலைகள் கொண்டு தாக்கும் உணர்வுகளை, முன் கூட்டியே நாம் அறியமுடியும். இந்த நினைவு அலைகளை, அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு கொண்டு, அந்த உணர்வின் ஈர்ப்பின் சக்தியை நாம் நமக்குள் பெற வேண்டும்.

அதற்கு இப்பொழுது, யாம் சொல்லும் “ஆத்மசுத்தி” என்ற எண்ணத்தை நீங்கள் கவர்ந்து, உங்கள் உடலுக்குள்  செலுத்தப்படும்போது,
இந்த உணர்வுகள் உள்சென்று,
உடலில் இருந்து வரும் அந்த ஆவியின் தன்மை,
நம்மையறியாது நமக்குள் வரும் தீயவிளைவுகள்
அனைத்தையும் அப்புறப்படுத்துகின்றது.
இதற்குப் பெயர்தான் “நரசிம்ம அவதாரம்” என்பது.
(பக்கம் 52-55)
உடலை விட்டுப் பிரிந்த முன்னோர்களின் உயிராத்மாக்களை, நாம் எண்ணத்தாலே எண்ணி, சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்திச் செலுத்துவதற்கு முன், முதலில்ஆத்மசுத்திசெய்ய வேண்டும்.

ஒரு தடவைக்கு, அரைமணி நேரமாவது செய்ய வேண்டும். அல்லது ஒரு பத்து நிமிடமாவது ஆத்மசுத்தி செய்ய வேண்டும். எல்லோரும் சேர்ந்து, திரும்பத் திரும்ப இந்த ஆத்மசுத்தியைச் செய்ய வேண்டும்.
மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்.
அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
நாங்கள் பார்ப்பது எல்லாம் நலம் பெற வேண்டும்.
எங்களப் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்எண்ணங்கள் வரவேண்டும்.
எங்கள் வீடு முழுவதும், மகரிஷிகள் அருள் ஒளி படர வேண்டும்.
ங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும். என்று
சொல்லி விட்டு, எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும். என்று
மறுபடியும் மறுபடியும் விண்ணை நோக்கி,
இந்த உணர்வைச் செலுத்தி, செலுத்தி
இந்த மணத்தைக் கூட்ட வேண்டும்.

அப்போது, இந்த உணர்வின் தன்மையை நாம் கூட்டி, இந்த ரிமோட் கண்ட்ரோல் மூலம் நம் மூதாதையர்களை எளிதில் விண் செலுத்தி விடலாம்.

சிலவற்றை, ஏன் முன்னால் சொல்லவில்லை? என்று கேட்க வேண்டாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லித்தான், கொண்டு வரவேண்டியிருக்கின்றது.

முன்பே சொல்லியிருந்தால், சிலருக்குத் திரும்ப, திரும்பச் சொல்ல வேண்டியிருக்கும், சிலருக்கு அந்த உணர்வுகள் ஏற்றுக்கொள்ளாது, அந்த உணர்வுகள் பக்குவப்படாது, அப்போது வெறுக்கும் தன்மை வரும்.

ஏனென்றால், இந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யும். இதைப்போன்ற நிலைகளில் இருந்து மீள்வதற்குத்தான், படிப்படியாக யாம் சொல்வது.

சிலருக்கு யாம் சொல்லிக்கொண்டு வரும்போது, இரண்டாவது தரம் திரும்பச் சொன்னால்,  சாமி  அன்றைக்குச் சொன்னதையே, இன்றைக்கும் சொல்கிறார், என்று எண்ணி   டக்  என்று சொல்லிக் கொண்டுவந்து
அடுத்தவர்களை இணைத்துக் கொண்டு வருவதற்கு முன்னால்,
அன்றைக்கும் சொன்னார்
இன்றைக்கும் சொல்கிறார் சரி, சொல்லட்டும்
சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கிச் சென்றால் போதும் என்ற எண்ணத்தில், உணர்வைக் கூர்மையாக எண்ணாதபடி, தலையைக் குனிந்து கொள்வார்.

இதைப்போன்ற நிலைகள் ஒன்றல்ல எத்தனையோ உண்டு. இந்த உணர்வின் தன்மையை நாம் மாற்றவேண்டும்.   ஒரு எண்ணத்தில் எத்தனையோ கோடி உண்டு.

ஆனால், அதை செருகேற்றுவதற்கும், மாற்றிய, இந்த உணர்வின் தன்மையை மாற்றுவதற்கும், நமது குருநாதர் எமக்கு எப்படிப் பக்குவப்படுத்தினாரோ, அதைப்போலத்தான், உங்களுக்கும் சாதாரணமாக உபயோகிக்கச் சொல்கிறேன்.  

நீங்கள் எல்லோரும் இதைப் பெறவேண்டும்;
உங்கள் உணர்வுகள் இங்கே படரவேண்டும் என்றும்,
நீங்கள் இடும் மூச்சலைகள், இந்த காற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை முறியடிக்க வேண்டும் என்று, முதலில் பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் யாம் பேசுகின்றோம்.
ம் குருநாதர் காட்டிய வழி கொண்டு, எந்தெந்த நட்சத்திரத்தின் தன்மையை, எந்தெந்தக் காலத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எமக்கு உணர்த்தி உள்ளார்கள்.

அதை எடுத்து உங்களிடம் பேசுகின்றபோது, இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது. இதுவே வலுவாகின்றது. ஆகவே இதைப்போல செய்துவரப் போகும்போது, அதை யாம் இப்போது சொல்லித் தெரிவதைக் காட்டிலும், உங்கள் உணர்வுகளே இதை ஒவ்வொரு காலத்திலும் இதை உணர்த்தும், நீங்கள் எதிர்கொண்டு எடுக்கும் உணர்வின் தன்மையை.

விஞ்ஞானி எவ்வாறு அணுவைப் பிளக்கின்றனோ அது போல,
பல உணர்வின் தன்மை நினைவலைகள் வந்தால்,
உங்கள் எண்ணங்கள் அதைப் பிளந்து,
உங்களுக்குள் அந்த உணர்வினை ஊட்டி,
நீங்கள் செல்லவேண்டிய பாதையையும்,
செயல்படுத்தும் நிலையையும் அதுவே உணர்த்தும்.
அந்த நிலைகள் பெற்றால்தான், இங்கே செயல் படுத்த முடியும்.
(பக்கம் 62-66)
சூரிய குடும்பத்துக்குள் ஏதாவது ஒரு சமயம் அது மாறுபட்டு விட்டால், அந்தப் பிரபஞ்சமே செயல் இழந்துவிடும். இதைப்போல நாம் ஒரு குல வழியில் வந்தவர்கள்தான், பந்துக்கள்.

அந்த பந்துக்கள் என்ற நிலையில் பாசத்தை வளர்ப்பதற்குத்தான். கல்யாணங்களிலும், விசேஷ காலங்களிலும் மனம் மகிழச் செய்வதும், ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், ஒருவருக்கொருவர் சந்திக்கச் செய்வதும். ஏற்பட்டது.

அதேசமயம் திருமணக் காலங்களில், ஒருவர் ஏழ்மையாக இருந்தால் அவரால் செயல்படுத்த முடியாது என்பதற்காக, அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில், விசேஷ காலங்களில் ஆளுக்குக் கொஞ்சம், அவரவர்கள் இந்தப் பொருட்களை வாங்கிக் கொடுத்தால், அந்த சமயத்தில் அவர்களுக்கு விசேஷக் காரியம் சிரமம் இல்லாதபடி நடக்கும்.

ஆனால், இன்று காரியங்கள் நடக்கின்றன என்றால் கௌரவத்திற்காக வேண்டியும், “இவர் என்ன செய்தார்?, அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று பொறாமைகளை வளர்க்கும் நிலைதான், இன்று இருக்கின்றது.

அன்று ஒன்று சேர்த்த நிலைகளில், பந்துக்கள் வாழ வேண்டும் என்பதற்காக, திருமணமோ அல்லது மற்ற வைபவங்களோ அது நடத்தப்படும் போது, இதைப்போல மனம் உவந்து ‘’அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்’’ என்று ஒருவருக்கொருவர் பொருள் உதவி செய்யப்போகும்போது, அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டது.

அதைப்போல ஒரு குடும்பத்தில் சிறுகுறைகள் ஏற்பட்டால், சில அலுவல் ஏற்பட்டால், எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கும், நோய்வாய்ப்பட்டாலோ அதற்காக அந்த பந்தத்தின் தன்மைகொண்டு, அவர்கள் வீட்டிலே ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு செய்வதற்கும், மனம் உவந்து போவதற்காக, இப்படியெல்லாம் ஒற்றுமையைச் செய்து வைத்தார்கள். அது ஒரு பிரபஞ்சம்.

நம் சூரியக் குடும்பம் எவ்வாறு ஒரு பிரபஞ்சம் ஆகின்றதோ, இதைப்போல நம் மூதாதையர்கள் அதன் வழிகளிலே நாம் இணையப்படும் போது, பிரபஞ்ச இயக்கத்துக்குள் அது வருகின்றது.

இதைப்போல அன்று செய்துகொண்ட நிலைகள், காலத்தால் எங்கோ சென்றுவிட்டது. இன்று சிந்திக்கக்கூட நேரம் இல்லை. ஏதாவது விசேஷங்கள் நடந்தால்,
என்னை மதிக்கவில்லை, .
எப்படி நடத்துகின்றான் பார்க்கிறேன்என்று
எவ்வளவு தொல்லைகள் கொடுக்க முடியுமோ, அவ்வளவையும் கொடுப்பார்கள்.

இப்பொழுது, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் இருக்கின்றது. அதற்குத் திருமண ஏற்பாடுகள் ஆகின்றது என்றால், அதே போல் திருமணம் ஆகாத ஒருவர், அவருக்குக் கல்யாணம் நடக்கவில்லை என்றால், “அந்தப் பெண் மோசம்என்று ஊர் எல்லாம் சொல்லுவதும், தம்பட்டம் அடிப்பதும், அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்குக் கொடுப்பார்.

அந்த அளவுக்கு, நம்முடைய உணர்வின் நிலைகள் தீய விளைவுகளாக மாறிவிட்டது. நம்மையறியாமலேயே, அந்தச் செயல்களை செயல்படுத்தச் செய்கின்றது. இதைப்போன்ற நிலைகளை மாற்றுவதற்குத்தான், ஞானிகள் காட்டிய அருள்நெறிப்படி மாதத்திற்கு ஒருநாள் சதுர்த்தி என்று வைத்துள்ளார்கள்.
நமக்குள் பகைமை இருந்தாலோ, வெறுப்பு இருந்தாலோ, நாம் அமர்ந்திருந்து நாம் ஒவ்வொருவரும் அந்தப் பகைமையை நீக்க, மாதத்தில் ஒரு நாள் அந்த சதுர்த்தியன்று அந்த சப்தரிஷி மண்டலங்களை எண்ணி நம் மூதாதையர்களை எண்ணி அவர்கள் மெய்யொளி பெற வேண்டும் என்று எண்ணி, நாம் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி தியானிக்க வேண்டும்.

அப்படி தியானித்துவிட்டு, நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்’ என்றும், ங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அடுத்து, உங்களுக்குள் யாரெல்லாம் வெறுப்படைந்தனரோ,
ங்கள் பார்வை அவரை நலமாக்க வேண்டும்,
ங்கள் சொல் அவரை இனிமையாக்க வேண்டும்,
ங்களைப் பார்க்கும்போது அவருக்கு நல்ல மனம் வர வேண்டும்,
அவர்கள் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி பெற வேண்டும்,
மகிழ்ச்சியாக அவர்கள் வாழ வேண்டும்,
அவர்கள் இல்லத்தில் மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்,
அவர்களை அறியாத இருள் நீங்க வேண்டும்,
அவர்கள் மெய் பொருள் காண வேண்டும் என்று, இதையெல்லாம்
அந்த சதுர்த்தியன்று நாம் எண்ண வேண்டும்.

சதுர்த்தியன்று, இவ்வாறு நாம் எண்ணினால், நமக்குள் ருக்கும் பகைமை நீங்குகின்றது. கீதையிலே சொன்னது போல, “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்” நம் உணர்வின் சக்தி, நமக்குள் வளர்கின்றது.

எல்லோரும் நலம் பெறும் எண்ணத்தை, பந்துக்களிடம் இருக்கக்கூடிய பாசத்தை வளர்த்துக் கொள்ள முடிகிறது. இதைப்போல, சதுர்த்தியன்று நமது பந்துக்களும் எண்ணினால், நம்மையறியாது வந்த தீய விளைவின் நிலைகளை, எல்லோராலும் மாற்றிக் கொள்ள முடிகின்றது.

மனிதன் இன்று ஆறாவது அறிவு கொண்டு, சப்தரிஷி, அதாவது சொல்லால், செயலால், அந்த மெய் ஒளியைத் தனக்குள் சிருஷ்டித்து, இருள் சூழ்ந்த நிலைகள், இந்த பூமியின் பிடிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு, இத்தகைய நிலைகளை அன்று மெய்ஞானியர்கள் செய்தார்கள்.

ஆகவே, நீங்களும் ஏனோ தானோ” என்று செய்வதை விடுத்துவிட்டு, சிறிது நேரம் உங்களுக்குள் இந்த முயற்சியை எடுத்துப் பாருங்கள்.

மனிதன் என்ற நிலையை, தன் நிலையை நாம் அடைய முடியும். நாம் மனிதன் என்று பிறந்த முழுமையைக் கண்டுணர முடியும் இந்த உடலைவிட்டுச் சென்றபின், அந்த மகரிஷிகள் சென்ற அருள் வட்டத்துக்குள் நாம் செல்ல முடியும். அங்கே சென்று,
என்றும் துன்பம் இல்லாத நிலையும்,
நாம் விடும் மூச்சலைகளால்
பிறரைத் துன்பதிலிருந்து காத்திடும் நிலையும்,
நாம் செய்ய முடியும். எமது அருளாசிகள்.